பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/491

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலமீடா

443

ஆலா

றும், பால் உடைமையால் பாலி யென்றும், பூ வெளிக்குத் தோன்றாததால் கோளியென்றும் சொல்லப்படும். இன்னும் புனிதமானதாற் பூதவம், மங்களமானதாற் சிவம், பலவேர்களுள்ளதாற் பகுபதம், குழ்ந்துகவிந்திருப்பதால் வடம் என்றும் பெயர்பெறும். ஆங்கிலத்தில் இதற்குப் பனியன் என்று பெயர். பாரசீக வளை

ஆல்
1.கிளை, 2.ஆலங்கனி (அத்திமஞ்சரி) : உள்ளே பல பூக் களும் கண்ணருகே.ஓர் அத்திப்பூச்சியும் தெரிகின்றன. 3.4. 5,6.ஓர் ஆலங்கனியினுள்ளிருக்கும் தனித் தனிப் பெண் பூக்கள்.

குடாவில் பந்தர் அப்பாஸ் என்னும் துறைமுகத்துக்கு அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தினடியில் பனியர் என்னும் சில இந்து வணிகர் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்றும், அதனால் அந்த மரம் பனியன் மரம் எனப்பட்டதென்றும் இப்பெயருக்குக் காரணம் கூறப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர் பைகஸ் பெங்கலென்சிஸ் (Ficus bengalensis).

ஆலமரத்தை இந்துக்கள் புனிதமானதென்று கருதி வழிபடுகிறார்கள். இதன் சுள்ளி சமித்துக்களிலொன்று. இதன் வேர்த்துண்டுகளைச் சில சாதியார் காப்பாக அணிகின்றனர். பிரமா இம்மரமானார் என்றும், இதன் இலையில் விஷ்ணு பள்ளிகொண்டிருக்கின்றன ரென்றும், இது ஆண் என்றும், அரசமரம் பெண் என்றும், இம்மரத்தை வெட்டுவது பாவம் என்றும் சொல்வதுண்டு. ஆனி மாதத்துப் பௌர்ணமியன்று இம்மரத்துத்துக்குப் பூசை செய்வதுண்டு.

ஆலமீடா அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த காலிபோர்னியாவிலுள்ள ஒரு நகரம். சான்பிரான்சிஸ் கோவிலிருந்து 6 மைல் தொலைவிலுள்ள ஒரு செயற்கைத் தீவின்மீது அமைந்துள்ளது. பென்சில், தீப்பெட்டி, பம்புகள் முதலிய சில்லறைக் கைத்தொழில்கள் நடைபெறுகின்றன. ஊர் அழகான தோற்றமளிப்பதோடு கல்வி, சுகாதார வசதிகளிலும் உயர் தரமாயிருக்கிறது. மக் : 89,906 (1945).

ஆலரிக் I (?-410) கீழைக் காத்தியர்களின் (Goths) அரசன்; ரோமில் தியடோசியஸ் என்னும் பேரரசன் ஆண்டுவந்த காலத்தில் அவனுடைய காத்திய சைனியங்களுக்குத் தலைவனாயிருந்தான். 395-ல் அப்பேரரசன் இறந்ததும், ரோமானிய சாம்ராச்சியத்தின் மேற்குப் பகுதிகளுக்கும் கிழக்குப் பகுதிகளுக்கும் இடையே ஏற்பட்ட பிளவுகள் ஆலரிக்குக்கு வசதியாயிருந்தன. அவன் கிரிஸிலுள்ள திரேஸ், மாசிடோனியா, ஆதன்ஸ் முதலிய இடங்களின்மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றினான். ஆயினும் மேற்கு இராச்சியத்தின் படை ஸ்டிலிகோ என்பவனுடைய தலைமையின்கீழ் வந்து கிரீஸில் இறங்கியதும், ஆலரிக்கால் மேலும் முன்னேற முடியவில்லை. 399-ல் அவன் இல்லிரிகம் என்னுமிடத்திற்குக் கவர்னராக நியமிக்கப்பட்டான். 401-ல் ஆலரிக் இத்தாலிமீது படையெடுத்தான். அப்போது பேரரசனாயிருந்த ஹொனோரியஸ் ஆலரிக்குக்குப் பயந்து ஓடிவிட்டான். ஆனால் ஸ்டிலிகோ மிலான் என்னுமிடத்தில் ஆலரிக்கைத் தோற்கடித்து நிறுத்தினான்; மற்ற ஆண்டும் படையெடுத்துப் பார்த்த ஆலரிக் அப்போதும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் 408-ல் ஸ்டிலிகோ இறந்த பிறகு இத்தாலிமீது படையெடுத்து வந்து ரோம் நகரை 409-ல் முற்றுகை செய்தான். பஞ்சத்தினால் அந்நகரத்தவர்கள் கீழ்ப்படிய வேண்டியதாயிற்று. ஆலரிக்கின் வீரர்கள் அந்நகரைச் சூறையாடினர். ரோமானிய செனெட்டால் மன்னனாக நியமிக்கப்பட்ட அட்டாலஸ் என்பவனை முடிதுறக்கும்படி ஆலரிக் வற்புறுத்தி நீக்கிவிட்டான். நாசமாக்கப் பட்ட ரோம் நகரைவிட்டுத் தெற்கு இத்தாலியை வெல்லக் கருதி முன்னேறிய ஆலரிக் கடைசியில் ஆப்பிரிக்காவில் போய் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்பினான். ஆனால் அவன் எண்ணங்கள் ஈடேறுமுன் கலாப்ரியா என்னும் இத்தாலிய மாகாணத்தில் அவன் இறந்துபோனான். அவன் உடல் புசென்டோ ஆற்றின் அடிமணலில் தோண்டிப் புதைக்கப்பட்டது. வரலாற்றில் கண்ட கொடிய போர்வீரர்களில் இவன் ஒருவன்.

ஆலரிக் II ( ?-507) கீழைக் காத்தியர்களின் அரசன்; தந்தையான யூரிக் என்பவனுக்குப் பிறகு 484-ல் அரசனானான். ஸ்பெயின், முதலிய தென் மேற்கு ஐரோப்பிய நாடுகள் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. பிராங்குகளின் அரசனான குளோவிஸ் என்பவன் கிறிஸ்தவன் அல்லாத ஆலரிக் மீது படையெடுப்பது முறை யென்று நினைத்தான். பாயிட்டியர்ஸ் என்னுமிடத்தில் நடந்த போரில் ஆலரிக் கொல்லப்பட்டான்; அவன் படையும் தோற்றுச் சிதறுண்டது.

ஆலவாய்: இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை.

ஆலா கடற்கரையில் வாழும் கழுகு வகை. (White bellied sea eagle). இது பருந்தளவா யிருக்கும்; தலையும் மார்பும் வயிறும் வாலும் வெளுத்து, மற்றெங்கும் கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். கடல் மீது நாளெல்லாம் சளைக்காது இறக்கையடித்தும் வட்ட