பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆவர்த்த விதி

451

ஆவாரை

டிக் கூற ஆவர்த்த அமைப்பு உதவியது. இவ்வமைப்பு ஓர் இயற்கைப் பாகுபாடு என்பதற்கு இது தெளிவான சான்றாகும். தம் அட்டவணையில் பல இடைவெளிகள் விட்டு, அவற்றில் வருங்காலத்தில் புதுத் தனிமங்கள் அமையும் என மெண்டலீபு கூறியிருந்தார். அவரே இவ்வாறு மூன்று பொருள்களை முன்னறிவித்தார். அவற்றுள் ஒன்று மூன்றாம் தொகுதியில் கால்சியத்திற்கும் (அ.நி.40) டைட்டானியத்திற்கும் (அ.நி.48) இடையே உள்ளது. மற்ற இரண்டும் நாகத்திற்கும் (அ.நி. 65) ஆர்சனிக்கிற்கும் (அ.நி. 75) இடையே மூன்று, நான்காம் தொகுதிகளில் இருந்தன. இப்பொருள்களுக்கு அவர் ஏகபோரன், ஏக அலுமினியம், ஏகதிலிகன் எனப் பெயரிட்டார். ஏனெனில் அட்டவணையில் அவை முறையே போரன், அலுமினியம், சிலிகன் என்னும் தனிமங்களின் கீழ் இருந்தன. 1871-ல் அவர் இப்பொருள்களின் இயல்புகளையும் கற்பித்துக் கூறினார். 1879-ல் ஸ்காண்டியமும், 1875-ல் காலியமும். 1886-ல் ஜெர்மானியமும் கண்டுபிடிக்கப்பட்டு இவரது கருத்துக்கள் முற்றிலும் மெய்யாயின. இப்பொருள்களுக்கு இவர் கற்பித்த இயல்புகளோடு சோதனையால் அறியப்பட்டவைகளை ஒப்பிட்டதில், இவருடைய கருத்துக்கள் வியக்கத்தக்கவாறு சரியாக இருந்தன.

அணு நிறைகளைத் திருத்தல் : சில தனிமங்களின் அணு நிறையைச் சரியாக மதிப்பிடவும் மெண்டலீபு ஆவர்த்த முறையைப் பயன்படுத்தினார். இத் திருத்தங்கள் வேறு முறைகளாற் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்டன.

1. சமவலு நிறை 38 கொண்ட இந்தியம் நாகத்துடன் இயற்கையிற் கிடைப்பதால் இருவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 38 X 2=76 எனக் கொள்ளப்பட்டது. ஆனால் அட்டவணையிலோ நாகத்திற்கும் (அ .நி. 65), ஸ்ட்ரான்ஷியத்திற்கும் (அ.நி 87) இடையே இரண்டாந் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இடமில்லை. ஆகையால் இந்தியம் மூவலுவானதென்றும், அதன் அணு நிறை 38 × 3 = 114 என்றும், அது கடமியத்திற்கும் (அ.நி. 11) வெள்ளீயத்திற்கும் (அ.நி.118) இடையே மூன்றாம் தொகுதியில் அமையும் என்றும் மெண்டலீபு முடிவு செய்தார். இந்தியத்தின் ரசாயன இயல்புகள் அதை இவ்விடத்திற்கே பொருந்தியதெனக் காட்டுகின்றன. 2. அலுமினியத்தைப் பெரிதும் ஒத்த பெரிலியமும் (சம நிறை 4.5) மூவலுவானது என நம்பப்பட்டது. இதனால் அதன் அணு 45X3=135 ஆகிறது. ஆனால் மூன்றாம் தொகுதியில் இவ்வணு நிறையுள்ள பொருளுக்கு இடமில்லை. ஆகையால் மெண்டலீபு அது இருவலுவானது என்றும், இதனால் அதன் அணு நிறை 45X2=9 என்றும் முடிவு செய்தார். இதை லிதியத்திற்கும் (அ.தி. 7) போரனுக்கும் (அ.நி.11) இடையே இரண்டாம் தொகுதியில் அமைக்கலாம். 1884-ல் ஆவி அடர்த்திச் சோதனைகளால் இது சரியெனத் தெரிந்தது. 3. சமநிறை 10 கொண்ட யுரேனியம் மூவலுவானது எனக் கருதப்பட்டது. ஆகையால் அதன் அணு நிறை 40X3 =120 எனக் கொள்ளப்பட்டது. இவ்வணு நிறையுள்ள தனிமத்திற்கு மூன்றாந் தொகுதியில் இடமில்லை யெனவும், குரோமியம் மாலிப்டினம் டங்ஸ்டன் என்னும் தனிப்பொருள்களை இது ஒத்தது எனவும் மெண்டலீபு காட்டி, இதன் உச்ச வலுவெண் ஆறு எனக்கொண்டார். ஆகையால் இதன் அணு நிறை 40X6 =240 ஆகிறது. இதனால் இதை டங்ஸ்டனுக்குக் கீழ் ஆறாந் தொகுதியில் அமைக்கலாம். பிற்காலத்தில் உரேனியத்தின் சுயவெப்பம் அளவிடப்பட்டு இது சரியென்று தெளிவாகியது.

முக்கியத்துவம்: ஆவர்த்தப் பாகுபாட்டை ரசாயன முன்னேற்றத்திற்கு வழிகாட்டிய தத்துவ மெனலாம். தற்கால ரசாயனவியல் அமைப்புக்கே இது அடிப்படையாக உள்ளது. தனிமங்களுக்குள் இயற்கைத் தொடர்புகள் இருப்பதை வெளிப்படுத்தி, இப்பொருள்கள் அனைத்தும் ஒன்றிலிருந்தே தோன்றியிருக்கலாம் என்னும் கருத்துக்கு இது வழிகாட்டியது. தற்கால அணுக் கொள்கையினால் இது நிலைபெற்றது. அணுவின் அமைப்பில் எலக்ட்ரான்கள் உட்கருவைச் சுற்றியுள்ள வகையிலிருந்து இது தற்காலத்தில் தெளிவான விளக்கம் பெறுகிறது. பி.ரே.

நூல்கள்: Partington, General and Inorganic Chemistry (1946); Tilden, Mendeleeff Memorial Lecture, J. Chem. Soc., Vol.95. (1909); tTildebrand, Principles of Chemistry (1944).

ஆவா பர்மிய அரசின் தலைநகராக விளங்கியது. இது மாந்தலேயிலிருந்து 6 மைல் தொலைவில் ஐராவதி நதிக்கரையில் உள்ளது. இதை 1364ஆம் ஆண்டு தடோமின்பாயா என்ற அரசன் நிறுவினான் இதன்பின் நான்கு நூற்றாண்டுகள் வரை இது தலைநகராக இருந்தது. அரண்மனையின் சில பகுதிகளும் கோயில்களும் பாழடைந்த நிலையில் இங்குக் காணப்படுகின்றன. பழங்காலத் தலைநகரான அமரபுரமும் இதன் அருகில் உள்ளது.

ஆவாரை உயரமாக வளரும் குற்றுச் செடி. நன்றாக வளர்ந்தது 16 அடி உயரம்கூட இருக்கும். பல கிளைகளுள்ளது. பட்டை வழுவழுப்பாக, செம்பழுப்பாக இருக்கும். இளங்கிளைகள் மென்மயிர் படிந்திருக்கும். இரட்டைக் கூட்டிலைகள் 3-4 அங்குல நீளம். முதற்காம்பில் ஒவ்வொரு ஜதை சிற்றிலைக்கும் நடுவே ஒரு சுரப்பியிருக்கும். இலையடிச் செதில்கள் இலைபோன்று பின்னுக்கு மடிந்து பெரிதாகக் காது வடிவமாக இருக்கும். செதிலின் அடிப்பாகத்தில் நீண்ட முனை ஒன்று இருக்கும். சிற்றிலைகள் 8-12 ஜதைகள் -1 அங்குல நீளமும், அங்குல அகலமும் இருக்கும்.

ஆவாரை
காயும் கிளையும்

பூக்கள் பெரியவை. பூக்கொத்து இலைக்கணுச் சந்தில் அல்லது கிளை நுனியில் வளர் நுனிச் சமதள மஞ்சரியாக இருக்கும். புறவிதழ் , அகவிதழ் 5 ; பளிச்சென்ற மஞ்சள் நிறம். அதில் கிச்சிலி நிறக் கோடுகள் இருக்கும். கேசரம் 10. அவற்றில் 3 போலிக் கேசரங்கள். 7 நன்கு வளர்ந்தவை. 3 பெரியவை. 1 சிறியவை