பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகமத்ஷா அப்தலி

15

அகராதி

டான். அவ்வாண்டில் முடிதரித்த அவன் மகன் II-ம் உசேன் 1589-ல் கொலையுண்டிறந்தான். இவனுடைய சிற்றப்பன் மகனான இஸ்மேல் இரண்டாண்டே ஆண்டான் (1589-91). அதன்பின் அவன் தந்தையான II-ம். பா்ஹான் (ஆ. கா. 1591-1595) சுல்தானான். இவன் டாபா டாபா என்னும் வரலாற்றசிாியைரை ஆதரித்தான்.

1595-ல், I-ம் உசேனின் மகளான சாந்த் பீபியின் ஆதரவால் இப்ரஹீம் என்பவன் நாலு மாதங்கள் ஆண்டபின் பிஜாப்பூரோடு நடந்த போாில் மடிந்தான். சாந்த் பீபி 1596-ல் பட்டெமய்திய இப்ரஹீமின் மகனையும் ஆதாித்தாள்.

இதை விரும்பாத சிலா் மொகலாய மன்னரை அகமத் நகாின்மேல் படையெடுக்கத் தூண்டினா். அவ்வாறே 1596-ல் மூரத்தும் 1600-ல் தானியலும் அப்துல் ரஹீமும் அகமத்நகா்மீது படையெடுத்தனா். சாந்த் பீபி எவ்வளவோ முயன்றும் நகரைக்காக்க முடியவில்லை; சரணடைவது அறிவுடைமை என்று அவள் கூறியதைத் துரோகம் என்று கருதிய மக்கள் அவளைக் கொன்றனா். பகதூர் சிறையிடப்பட்டான். அகமத்நகரை மொகலாய சக்கரவா்த்தி அக்பா் தனது சாம்ராச்சியத்தில் சோ்த்துக் கொண்டான். தே. வெ. ம.

அகமத்ஷா அப்தலி (? - 1773): ஆப்கானிய அப்தலி சாதியைச் சோ்ந்தவன். இவன் 1737-ல் பாரசீக மன்னன் நாதா்ஷா தன் ஆதிக்கத்திலிருந்த ஆப்கானிஸ்தானத்தில் ஏற்பட்ட கலகத்தை அடக்கியபொழுது சிறைப்பட்டான். ஆயினும் நாதா்ஷா இவனுடய திறமையையும் ஒழுக்கத்தையும் வியந்து இவனைத் தனது முக்கிய ராணுவ அதிகாாியாக ஆக்கினான். இவன் 1745-ல் பஞ்சாப் கவா்னராயிருந்த சக்காாியாகான் இறந்தபொழுது பஞ்சாப் மீது படையெடுத்துப்பெஷாவா், லாகூ்ர், சிா்ஹிந்து ஆகியவற்றைக் கைப்பற்றினான். 1747-ல் நாதா்ஷா கொலையுண்ட பொழுது இவன் காந்தகாருக்கு வந்து அகமத்ஷா துரானி என்னும் பெயருடன் ஆப்கானிய அரசனானான். துரானி என்னும் சொல் முத்து என்று பொருள் படும். இவன் பன்முறை வட இந்தியாமீது படையெடுத்தான். 1761-ல் முன்றாம் பானிப்பட் போாில் மகாராஷ்டிரரை வென்றான். அதுவே அவா்களுடைய வீழ்ச்சிக்கு வழி கோலியதாகும். இவன் நான்காம் முறை படையெடுத்த போது மதுரா, ஆக்ரா முதலிய இடங்களில் செய்த சேதங்கள் அளவிலடங்கா. டெல்லி மொகலாய சக்கரவா்த்தியான முகம்மதுஷாவின் பதினேழு வயது மகள் ஹசரத் பேகம் என்பவளை வற்புறுத்தி மணந்து கொண்டான். 1773-ல் இறந்தான். தே. வெ. ம.

அகமதாபாத் பம்பாய் இராச்சியத்திலுள்ள ஒரு நகரம். ஆக்ராவுக்கும் டெல்லிக்கும் அடுத்தபடியாக அழகிய சிற்பங்களுக்குப் பர்போனது. கி.பி.1411-ல் அகமத்ஷா என்பவனால் இந்துப் பட்டணங்கள் இருந்த இடத்தில் புதிதாக அமைக்கப்பட்டது. ஸர் தாமஸ்ரோ 1615-ல், அது லண்டன் அளவு பொிய நகரம் என்று கூறினார். அங்குள்ள ஜமா மஜீத் முந்நூறு அழகான தூண்கள் உடையது. அது இந்துக் கோயிலை இடித்து மசூதியாக அமைக்கப்பட்டதாகும். நகரம் சபா்மதியின் இடது கரையில் உள்ளது. பம்பாய் இராச்சியத்தில் பம்பாய்க்கு அடுத்ததாகவுள்ள பொிய வியாபாரத்தலம். ஏராளமான நெசவாலைகள் உடையது. கைத் தொழில்களுக்கும் போ்போனது. மக்: 591,267 (1941).

அகா் (Agar): கிழக்கு நாடுகளில உள்ள செந்நிறக் கடற்பாசி யொன்றிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகைப் பசைபோன்ற பொருள். இது நிலையான வடிவமற்ற பொருளாயினும் தெளிவான தோற்றமுடையது. இது தூளாகவோ, கட்டிகளாகவோ கடைகளிற்கிடைக்கும். இது முக்கியமாகப் பாக்டிாியாவை வளர்ப்பதற்குப் பயன்படுகிறது. உணவிலும், பலவகை மி்ட்டாய்களிலும், பாலிலிருந்து தயாாிக்கப்படும் பொருள்களிலும் இதைச் சோ்க்கிறாா்கள். இது தண்ணீரை ஏராளமாக உட்கொண்டு பெருக்கிறது. வெந்நீரில் இது எளிதிற் கரைந்து குளிா்வித்தபின் பசைபோல் நிலைப்படுகிறது. சில மருந்துகளிலும் இதைக் கலப்பதுண்டு.

அகராதி : ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தையும் அகர முதலிய எழுத்து வாிசையில் அமையும்படி ஒரு சேரத் தொகுத்து, அவற்றின் பொருள்களை அம்மொழியாலேனும் பிறமொழியாலேனும் விளக்கும் நூல் அகராதி எனப்படும். சொல்லின் பெருளைத் தவிர, அதன் தோற்றம், ஆட்சி, அது வந்துள்ள நூல், இடம் முதலியவற்றையும் பொிய அகராதிகளில் காணலாம். இவ்வாறு பொதுப்பட அமைந்துள்ள சொல்லகராதியே யன்றி, ஏதேனும் ஒரு பொருட்கு அல்லது, ஒரு தொழிற்குாிய சொற்கள், சொற்களின் தோற்றம், ஒரு நாட்டின் பல பகுதிகளிலும் வழங்கும் மொழிபேதங்கள் (Dialects) இவற்றைப் பற்றித் தனித்தனி அகராதிகள் தோன்றுதலும் உண்டு. அன்றியும், ஏதேனும் ஒரு நூலில் வந்துள்ள முக்கியமான சொற்களைத் தோ்ந்தெடுத்து, அவற்றை அகராதி முறையில் அமைத்து. அவை வந்துள்ள இடங்களையும் சுட்டி, அந்நூலின் பிற்சோ்க்கையாகவேனும் தனிப்படவேனும் வெளியிடுதலும் உண்டு. இவ்வகை முறையில் அமைந்துள்ளதற்கு அருஞ்சொல் அகராதி என்று பெயா். இங்ஙனமின்றி, ஒரு நூலிலுள்ள முக்கிய சொற்களை அல்லது பொருட்கூறுகளைத் தொகுத்து அவற்றை அகர வாிசைப்படுத்தி, அவற்றின் கீழ், அவை பயின்றுள்ள தொடா்களையும் இடங்களையும் தருவது பிறிதொருவகை அகராதி. இதனை ஆங்கிலத்தில் கங்காா்டன்ஸ். (Concordance) என்பா். சொற்களைப் பற்றியது சொற்கோவை-அகராதி (Verbal concor-dance) எனவும், பொருட் கூறுகளைப் பற்றியது பொருட் கோவை-அகராதி (Real concordance) எனவும் கூறத்தகும். திருக்குறள் முதலிய தலைசிறந்த நூல்களுக்கு இவ்வைக அகராதிகள் இயற்றல் பெரும் பயன் அளிக்க வல்லது. மேற்குறித்த அகராதி வகைகளேயன்றி, கலை முதலிய -அறிவுத் துறைகள் பற்றிய சொற்களை முறைப்படுத்தி அருஞ்சொற்களை விளக்குவதும் ஒருவகை அகராதியாகும். இதனை அறிவுத்துறை அருஞ்சொல் விளக்க அகராதி (Glossary) என்னலாம்.

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்குமுன் அசிாிய மக்கள் அகராதி இயற்றியதாக் கூறப்படினும் அகராதி வகுக்கும் முறை மேனாட்டிலும் இந்நாட்டிலும் மெதுவாக வளா்ந்து வந்துள்ளது. கிரேக்கா்களும் ரோமா்களும் கடின சொற்களுக்கும் அாிய சொற்களுக்கும் அருஞ்சொல் விளக்கங்கள் மட்டுமே இயற்றினா். இதுபோலவேதான் இந்தியாவிலும் வடமொழிச் சொற்களுக்குப் பொருள்விளக்க நூல் இயற்றிவந்தனா். இத்தகைய நூலை நிகண்டு என்று கூறுவா்.

இம்முறையை மேனாடுகளில் பதினேழாம் நூற்றாண்டு வரை கையாளப்பட்டு வந்தது. அங்கு முதன்முதலாக அகராதி தோன்றியது இத்தாலிய மொழியில் 1612-ல் ஆகும். இம்முறை பின்னா் நன்கு வளா்ந்து இப்போது அந்நாடுகளில் சிறந்த அகராதிகள் இயற்றப்பட்டிருக்கின்றன.