பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளுமை

463

ஆற்றலரி

துலங்கற் சொல் கொடுக்காத நிலைமை, கொடுக்க மறுத்தல், தூண்டர்சொல்லையே திருப்பிச் சொல்லுதல், ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை வெளியிடுதல் முதலியவைகளும் இந்த ஆளுமைச் சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

கனவுப் பசப்புமுறை (Dream Analysis) : ஒருவருடைய கனவுகளைப் பாகுபடுத்தி, அவருடைய ஆளுமைத் தன்மைகளை மதிப்பிடுவதும் உண்டு. கனவுப்பாகுபாடு பெரும்பாலும் மனக்கோட்டங்களை அறியப் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், மனிதர்களை அகமுகத்தினர். புறமுகத்தினர் என்பது போன்ற வகைகளாகப் பாகுபாடு செய்யப் பயன்படுத்துவது அண்மையிலேயே ஏற்பட்டதாகும்.

உடலளவு ஆளுமைச்சோதனை என்பது உடம்பின் பல்வேறு அவயவங்களை, முக்கியமாக எலும்பு, தசை, வயிறு முதலியவைகளின் அளவைக்கொண்டு ஆளுமை இயல்புகளைக் காண்பதாகும். இந்த முறையைக் கையாண்டவர்களில் முக்கியமானவர்கள் கிரெட்ஸ்மரும் ஷெல்டனும் ஆவர். வயிறும் சீரண உறுப்புக்களும் பெருத்தனவாக உடையவர்கள் ஒரு வகையினர். இவர் களது ஆளுமை இயல்புகள் அமைதித்தன்மை, இன்ப வாழ்க்கையில் விருப்பம் முதலியவைகளாகும். எலும்பு களும் தசைகளும் பெருத்தனவாக உடையவர்கள் மற் றொரு வகையினர் ; சுறுசுறுப்பு, போட்டியிடுதல் இவர்கள் இயல்புகள்.மெலிந்த உடலமைப்பும் எலும்புகளும் உடையவர்கள் மூன்றாம் வகையினர்; வெட்கம், அடக்கம். பின்னணியில் இருத்தல் இவர்கள் இயல்புகள்.

விட்சேப சோதனைகள்: ஒருவர் ஒரு சித்திரத்தையோ, நிகழ்ச்சியையோ, அதன் உண்மை வரலாறு தெரியாது தம் கற்பனையைக் கொண்டு விவரிக்கும் போது தம் எண்ணங்களையும், கருத்துக்களையும், இயல்புகளையும் தம்மையும் அறியாமலே வெளியிட்டு விடுகிறார். இந்த அடிப்படையான கருத்தைக்கொண்டு அமைந்தனவே பல்வேறுவகையான விட்சேப ஆளுமைச் சோதனைகள். விட்சேப சோதனைகளில் முக்கியமானது ரோர்ஷா என்ற சுவிட்ஸர்லாந்து நாட்டினர் ஏற்படுத்திய ரோர்ஷா முறையும் (Rorschach technique), மரே (Henry A. Murray) என்ற அமெரிக்க நாட்டினர் ஏற்படுத்திய 'பொருள் அறிவொடு புணர்த்தல்' (Thematic apperception) சோதனையும் மிகவும்

காகிதத்தில் மையைத் தெளித்து உண்டாக்கிய படம்

கீர்த்தி வாய்ந்தவை. இந்த விட்சேப முறை ஆளுமைச் சோதனைகள் 1925ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், சென்ற உலக யுத்தத்திலிருந்து தான் இவை மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த முறையைக் கையாள நீண்ட அனுபவம் வேண்டும்.

ரோர்ஷா சோதனை பத்துப் படங்களைக் கொண்டு செய்யப்படும். படங்களில் பல வர்ணங்கள் தீட்டியிருக்கும். அவற்றில் சாதாரண உருவங்கள் இல்லை. காகிதத்திலே மையைத் தெளித்து இரண்டாக மடித்தால் உண்டாகும் விபரீதமான உருவங்களைப் போன்ற உருவங்களே இருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக உற்றுநோக்கி, அவைகளில் காண்பது என்ன என்று கூறும்படி சொல்லிக் குறித்துக்கொண்டு, பிறகு அவைகளை ஆராய்ந்து கூறியவரின் அளுமையை அறிவர், மக்கள் தங்கள் அளுமை இயல்புக்களுக்குத் தக்கவாறு உருவங்களையும் உருவங்கள் காட்டும் செயல்களை யும், வர்ணங்களைக்கொண்டு உருவங்களையும் உருவங் களைக்கொண்டு வர்ணங்களையும் காண்பார்கள். ஒரு படத்தில் சிலர் ஒரே உருவத்தையும், சிலர் பல உருவங் களையும் காண்பார்கள். அளுமைத் தன்மைகள் இவைகளுக்குத் தக்கவாறு நிருணயிக்கப்படும்.

மரேயின் பொருள் அறிவொடுபுணர்த்தல் முறை இதனின்றும் சிறிது வேறுபட்டதாகும். இந்தச்

அறிவொடுபுணர்த்தல் முறைச் சோதனைப்
படங்களுள் ஒன்று
உதவி : ஹார்வார்டு பல்கலைக் கழக அச்சகம், அமெரிக்கா.

சோதனையில் ஆண்களுக்குரிய படங்கள், பெண்களுக்குரிய படங்கள், இருபாலார்களுக்குரிய படங்கள் ஆக மொத்தம் இருபது படங்கள்இருக்கின்றன. ஒவ்வொரு படத்திலம் மனித உருவங்களும், மற்ற உருவங்களும், சில சந்தர்ப்பங்களையோ நடத்தையையோ குறிப்பதுபோன்று தீட்டப்பட்டிருக்கும். இப்படங்களை ஒவ்வொன்றாக நோக்கிக் கற்பனை செய்து, அந்தச் சந்தர்ப் பம் எதைக் குறிக்கும், அதில் இருப்பவர் யார், அவர் களுக்கு என்ன நேர்ந்தது. என்ன நேருகிறது, எவ்வாறு முடியும் என்பவைகளை வெளியிடச் செய்து கூறப்படும் கற்பனைகளை ஆராய்ந்து அளுமைத் தன்மைகளைத் தீர் மானிப்பார்கள். டி. ஈ. ஷ.

ஆற்றலரி குளக்கரையிலும் வாய்க்காலோரத்திலும் இவற்றைச் சார்ந்த ஈரமான இடங்களிலும் சாதாரணமாகக் காணும் செடி. நீ.ர் மிகுந்த இடத்தில் வளர்-