பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகழ்தல்

19

அகழ்தல்

மாறு செய்கின்றன. அதனால் சதுப்பு நிலத்திலுங்கூட இந்த எந்திரம் புதைந்து போகாமல் இயங்கும்.

அகழ் எந்திரம்

இந்த எந்திரத்தை டீசல் எண்ணெயினால் ஓடும் சக்திவாய்ந்த எஞ்சின் ஓட்டுகிறது. மேலே சொல்லப்பட்ட பீடத்தின் ஒரு பக்கத்தில் உறுதியான கீலினால் மண்வெட்டும் கருவி பிணைக்கப்பட்டிருக்கும். அதன் எதிர்ப் பக்கத்தில் டீசல் எஞ்சின் இருக்கும். பல பல் சக்கரங்களும், கம்பி வடங்களும், இவ்வடங்களைச் சுற்றத் தேவையான பீப்பாய்களும் இந்த எந்திரத்தில் இருக்கும். இந்த உறுப்புக்களால் வெட்டும் கருவியைத் தேவையானவாறு இயக்கலாம்.

இழுவட எந்திரம்
உதவி: மார்ஷல் சன்ஸ் & கம்.,
(இந்தியா) லிட்.

மண்ணின் தன்மைக்கும், வெட்ட வேண்டிய இடத்திற்கும் தகுந்தபடி பலவிதமான வெட்டும் கருவிகளை இந்த எந்திரத்துடன் பிணைத்து வேலை செய்ய வேண்டி இருக்கும். இவ்வாறு பிணைக்கப்படும் கருவிகளையொட்டி இந்த எந்திரத்தின் பெயர் மாறும். எந்திர மண்வெட்டி, இழு வட எந்திரம் (Dragline Machine), அள்ளு எந்திரம்(Grab), அகப்பை எந்திரம்(Skimmer) என்பன இதன் முக்கியமான வடிவங்கள். மேலே சொல்லப்பட்ட எல்லாக் கருவிகளும் ஏற்றக்கால்போன்ற அமைப்புள்ள நீண்ட எஃகுத் தண்டு ஒன்றில் பொருத்தப்படுகின்றன.

எந்திர மண்வெட்டி படத்தில் காட்டியபடி இது எஃகினால் செய்யப்பட்ட மண்வெட்டி போன்ற அமைப்புள்ளது. இதன் விளிம்பில், மிகச் சிறந்த எஃகுப் பற்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மண்வெட்டியின் அடிப்பாகத்தில் தேவையானபோது திறக்கக்கூடிய ஒரு கதவு இருக்கிறது. இந்த மண்வெட்டியின் பிடி மிக வலிமையானது. இப்பிடியின் உதவியால் மண்வெட்டியின் பற்களை மண்ணில் அழுத்தி அதில் மண்ணை நிரப்பலாம்.

மண்ணை வெட்டி மண்வெட்டியில் நிரப்பிக்கொண்டு, பீடத்தின் உதவியால் அதைச் சுற்றி மண்ணை எங்கு வேண்டுமோ அங்கு மண்வெட்டியின் அடிக்கதவைத் திறந்து கொட்டிவிடலாம். இது சாதாரணமாக, கடினமான மண்ணைச் செங்குத்தான முகமுள்ளதாகச் செய்து கொண்டு வெட்டும். இதற்குக் குறைந்தது 4 அடி ஆழமுள்ள மண்ணாவது வேண்டும்.

இந்த மண்வெட்டி சாதாரணமாக 10 கன அடியிலிருந்து 80 கன அடிவரை அளவுள்ளதாக இருக்கும். இக்காலத்தில் நிலக்கரிச் சுரங்கங்களில் 675 கன அடி அளவுள்ள பெரிய மண்வெட்டிகள் பயனாகின்றன. அகழும் வேலைகளில் இந்த எந்திரமே அதிகமாகவழங்குகிறது.

இழுவட எந்திரம்

இழுவட எந்திரம்: இது கடினமற்ற மண்,மணல், கற்குவியல்கள் முதலியவற்றை வாரி எடுத்து வண்டிகளில் நிரப்ப உபயோகப்படும். இது படத்தில் காட்டியபடி ஒரு செவ்வகப் பெட்டியைப்போல் இருக்கும். இதனுடைய அடித்தட்டு விளிம்பில் எஃகினால் செய்யப்பட்ட 4 அல்லது 5 பற்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இப்பெட்டியை மணல் அல்லது கற்குவியல்களின் மேல் அழுத்திக் கம்பி வடங்களால் இழுத்தால் இதனுள் அப்பொருள் நிரம்பும். பிறகு இந்தப் பெட்டியை மேலே தூக்கி வேண்டிய இடத்தில் கவிழ்க்கலாம்.

அள்ளு எந்திரம்: இது நண்டின் கொடுக்குக்களைப் போலத் திறந்து மூடக் கூடியவாறு உள்ள இரண்டு சட்டுவங்களை யுடையது. கம்பி வடங்களின் உதவியால் வாயைத் திறந்து மூடமுடியும். இது சேற்றையும், சதுப்புநில மண்ணையும் வெட்டி எடுத்து அப்புறப்படுத்த உதவும்.

அகப்பை: இது எந்திர மண்வெட்டி போன்ற அமைப்புக் கொண்டது. ஆனால் இதிலிருக்கும் அகப்பைக்குப்

அகப்பை
உதவி: மார்ஷல் சன்ஸ் & கம்.,
(இந்தியா) லிட்.

பிடி கிடையாது. இந்த அகப்பை கிடை(Horizontal)யாகப் பொருத்தப்பட்டு முன்னும் பின்னும் கம்பி வடங்களால் தண்டின் மேல் இழுக்கும்போது மண்ணானது செதுக்கப்பட்டு அகப்பையில் நிரம்பும். பின்பு இந்த மண்ணை வேண்டிய இடத்தில் கொட்டலாம். இது கால்வாய்கள் வெட்டுவதற்கு மிகவும் ஏற்றது.

தூபி எந்திரம் (Tower Excavator): ஆழமான குளம், நதி முதலிய இடங்களிலிருந்து மண்ணை