பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகஸ்டின், செயின்ட்

21

அகில் மரம்

பெயர் சூட்டிக்கொண்டு தனது 79 ஆம் வயது வரை அப்பெரிய அரசை ஆண்டான். ரோமின் அரசியல் பெயரளவிற்குக் குடியரசாக இருந்தபோதிலும் அகஸ்டஸ் சர்வதிகாாியாகவே விளங்கினான். அவன் காலத்திற்குமுன் சாம்ராச்சியத்தில் புகுந்த ஊழல்களைக் களைந்தான். இதனால் மக்களின் அன்பைப் பெற்றான். இவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியம் மிகுந்த உயர் நிலையை யடைந்ததால், அது அகஸ்டன் பொற்காலம் எனப் புகழ்பெற்றது. கி.பி.14-ல் அகஸ்டஸ் காலமானதிலிருந்து அவன் மரபினர் பலர் ரோமனிய பேரரசர்களாக ஆண்டனர். இவர்கள் சீசர் வம்சத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப் பெயராக மாறிற்று. டி. கே. வெ.

அகஸ்டின், செயின்ட் (354 - 430) கிறிஸ்துவ மதப் பெரியார்களில் ஒருவர். இவர் 386-ல் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்து, ஒரு பாதிரியாகி, 395-ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள ஹிப்போவில் பிஷப்பாக நியமனம் பெற்றார். இவர் இயற்றிய நுல்களில் சுயசரிதமும் (Confession), இறைநகர் (De Civitate Dei) என்னும் நுலும் இன்னும் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகின்றன.

கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்தவ மதமே ரோமானிய சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குச் காரணம் என்று குறூகூறி வந்தனர். இக்கூற்றை மறுக்கவே அகஸ்டின் இறைநகர் என்னும் நுலை இயற்றினார். இந்நுல் இயற்றப்பட்ட காலம் 413-426 இவ்வுலகில் கடவுளை மதியாது தனக்கென வாழ்ந்துவரும் கூட்டத்தினரின் சமூகம் மண்ணகர் என்றும் தனக்கென வாழாது இறைவனையே ஆராய்பவர்களது சமூகம் இறைநகர் என்றும் இவர் வேறுபாடு காண்கிறார். மண்ணகர் என்பதை இராச்சிய அரசாங்கம் எனவும், விண்ணகர் என்பைதச் சமயச் சபைகள் எனவும், பொருள் காணுதல் தவறாம். அரசாங்கம் பாவியான மனிதனுக்கு இன்றியைமயாதது என்பதே இவர் கருத்து. ஆகையால், அரசாங்கத்தின் மூலம் இயங்கும் இராச்சியம் மண்ணகராகாது. சமயத்திற்கும் இராச்சியத்திற்கும் இடைக்காலத்தில் ஏற்பட்ட பிணக்கு அகஸ்டின் காலத்தில் ஏற்படவில்லையாகலால், அரசிற்கு அடங்கி கடத்தலை அவர் வற்புறுத்தினர். ஆயினும் அவர் விண்ணகரின் உயர்வைப்பற்றிக் கூறியிருப்பதைப் பயன்படுத்திப் பிற்காலச் சமயவாதிகள் இராச்சியத்திலும் மதகுருக்கள் குழு உயர்ந்தது என்னும் கொள்கையை வற்புறுத்தினர்.

பிளேட்டோவும் சிசெரோவும், அகஸ்டினுைடய கொள்கைகளுக்கு ஓரளவு கருத்துட்டியவர்கள். இவர் கருத்துப்படி, "உடைமைளை யெல்லாம் பொதுவுடைமையாகக் கொள்ளும் இராச்சியமே இலட்சிய இராச்சியம். மனிதனது பாவ இயல்பே சொத்துக்கைள இன்றியைமயாதவை யாக்குகின்றது; ஏழைகளைக் காக்கவேண்டிய பொறுப்பு செல்வர்களுக்கு உண்டு; பொருள்களுக்கு நியாய விலை என்பதொன்றுண்டு; அதற்குக் குறைவாகக் கொடுப்பதும், அதிகமாக வாங்குவதும் குற்றம்; வட்டி வாங்குவது குற்றம்". இடைகாலப் பொருளாதாரக் கருத்துக்கள் இக்கருத்துக்களை ஒத்திருத்தல் காணத்தக்காது.

அகஸ்தியர் : பார்க்க : அகத்தியா்.

அகாசி, அலெக்சாந்தர் ( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன். இவர் விலங்கியல் புவியியல்களைக் கற்றவர். மீன்கைளைப் பற்றிய அறிவில் இவர் மிகவும் சிறந்தவர். ஆயினும் சுரங்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலே இவர் மிகுந்த பெருமை பெற்றவர்.

அகாசி, லுயி ( Agassiz Louis) (1807-1873) சிறந்த ஸ்வின் இயற்கை விஞ்ஞானி, கடற் பிராணிகளைப் பற்றிய அறிவில் தலைசிறந்தவர். விலங்கியல் கல்வி கற்பதற்கு, எந்த இடத்திலே பிராணிகள் இயற்கையாக வாழ்வைதப் பார்க்க முடியுமோ அந்த இடமே ஏற்றது என்று இவர் கருதினார். இவர் ஹார்வர்டு பல்கைலக் கழகத்தில் பேராசிரியராக இருந்தார். பெரிய பொருட்காட்சிக் சாலையை அங்கு அமைத்தார். அதற்கு அகாசி பொருட்காட்சிக் சாலை என்று பெயர். கடற் பிராணிகளின் வாழ்க்கையை ஆராய்வதற்கு ஆராய்ச்சிக்கூடமொன்றை ஒரு தீவில் அமைத்தார். இயற்கை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக இவர் பேராலே ஒரு கிைளயம் அமெரிக்காவில் உண்டு.

அகிச்சத்ரா முற் காலத்தில் வட பஞ்சால தேசத்தின் தலைநகராக இருந்தது. கி.பி.10-11 வது நுற்றாண்டுகளுக்குப்பின் இது பாழடைந்தது. இப்பாழடைந்த ஊர் தற்காலம் உத்திரப் பிரதேச இராச்சியத்தின் பரேலி ஜில்லா ராம்சகர் கிராமத்தினருகே உளது. இங்கு 1940-44-ல் மத்திய சர்க்கார் தொல் பொருள் ஆராய்ச்சி இலாக்காவால் தோண்டிப் பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கி.மு. 3-வது நுற்றாண்டிலிருந்து கி.பி.10-வது நுற்றாண்டு வரையில் இவ்வூர் வளம் பெற்றிருந்ததை விளக்கும் பொருள்கள் கிடைத்தன. இவ்வாறு கிடைத்த பொருள்களில் கி.மு. முதல் நுற்றாண்டுக்குரிய பாஞ்சால அரசர்களின் நாணயங்கள், ஒருவகைச் சாம்பல் நிற மட்பாண்டங்கன், குஷான் கால நாணயங்கள், குப்தர் காலத்துத் தாழ்ந்த செங்கற் கோவில்கள், சுட்டட மண்ணாலான தெய்வங்களின் உருவங்கள், ஆதிவார, விக்கிரக என்ற கி.பி.9-10வது நுற்றாண்டுக்குரிய நாணயங்கள் ஆகியவை முக்கியமானவை. இங்கு நடத்திய ஆராய்ச்சி கங்கைச் சமவெளியில் இனி நடக்கும் ஆராய்ச்சிகளுக்கு அடிகோலுவதாகும். பி. ஆர். ஸ்ரீ

அகில் மரம் (=அகரு): இது பெரிய மரம்: 60-70 அடி உயரமும், 5-8 அடி, சுற்றளவுமுள்ளது. இந்தியாவின் வடகிழக்குப் பாகங்களில் முக்கியமான அஸ்ஸாமிலுள்ள காசி, காரோ, நாகா முதலிய மலைக்

அகில்
1. கிளை 2. பூங்கொத்து 3. பூ

காடுகளில் இது வளர்கிறது. பர்மாவிலும் உண்டு. இதன் பட்டையிலுள்ள நார், காகிதம் செய்யவும் கயிறு திாிக்கவும் உதவுகிறது. இந்த மரத்தில் பிசின் வடிவதில்லை. ஆயிறும் சற்று முதிர்ந்த மரத்திற்குள்ளே அங்கங்கே சில இடங்கள் கறுப்பாகியிருக்கும். அதில் ஒருவித என்ணெய்ப் பிசின் இருக்கிறது. அதுவே அதில் அகில் பற்றியிருக்கும் மரம் நோயுற்றதுபோலத் தோன்றும். இந்தப் பிசின் கிளைகள் கவைக்கும் இடத்தில் சாதாரணமாக உண்டாகும். ஒருவிதக் காளான் இந்த மரத்தில் பற்றிக் கொண்டு வளர்வதுதான் இது உண்டாவதற்குக் காரணம். நல்ல மரங்களில் காளான் பற்றியிருக்கும் மரத்-