பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/561

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

512

இசை

முதலிய இடைவெளிகளை ஏகசுருதி, துவிசுருதி, திரிசுருதி, சதுச்சுருதி, பஞ்சசுருதி, ஷட்சுருதி எனப் பெயரிட்டு அவற்றை உபயோகிப்பது வழக்கம். ஏகசுருதி 256/243, 25/24, 81/80 என மூன்று வகைகளாகக் காணப்படுகிறது. பரத முனிவர் 81/80 இடைவெளியைப் பிரமாண சுருதி என்று கூறியிருக்கிறார். உபயோகத்திலுள்ள இடைவெளிகளில் இதுதான் மிகச் சிறிதானது. அமேனாட்டில் உபயோகத்திலிருக்கும் சென்ட் கணக்கில் 265/243 அளவுள்ள ஏகச்சுருதி 90 சென்டாகும்; அதே கணக்கில் 25/24 என்பது 70 சென்டும், 81/80 என்பது 22 சென்டுமாகும்.

துவிசுருதி அநேகமாக 16/15 ஆகவே கணக்கிடப்படும்; 10/9 என்பது திரிசுருதியாகும். சில சமயங்களில் 27/25 கூட திரிசுருதியாக உபயோகப்படும். வேங்கடமகியுடைய சுத்த சப்தகத்தில் 2187/2048 அளவுள்ள ஒருவகைத் திரிசுருதி உபயோகப்படுத்தப்பட்டிருக்கின்றது. 9/8 சதுச்சுருதியாகும். இதற்கு மேற்பட்ட இடைகள் ஒரே மேள ராகத்தில் வருவது அபூர்வம். ஆனால் வேங்கடமகி 32/27 இடையுள்ள ஒரு பஞ்சசுருதியை உபயோகித்திருக்கிறார். பழைய தமிழ் நூல்களில் இந்த 22 சுருதிகளைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. இந்தச் சிறு இடைவெளிகளை மாத்திரைகள் என்றும் அலகுகள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

பொதுவாக ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தாம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தாலும் இது சம்பந்தமாக வேறு கருத்துக்களும் உண்டு. முற்காலத்தில் சோஹலர் என்னும் பெரியார் 66 சுருதிகள் ஒரு ஸ்தாயியில் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். வேங்கடமகிக்குப் பின்னெழுதப்பட்ட சங்கீத சாரசங்கிரகம் எனும்

ஷட்ஜமம் (ச) சுந்த ரிஷபம் (ரி1) சதுச்ருதி ரிஷபம் (ரி2)
சுத்த காந்தாரம் (க1)
சாதாரண காந்தாரம்
ஷட்ச்ருதி ரிஷபம் (க3)
அந்தரகாந்தாரம் (க3) சுத்த மத்யமம் (ம1) பிரதி மத்யமம் (ம2) பஞ்சமம் சுத்த தைவதம் (த1) சதுர்ச்ருதி தைவதம் (த2)
சுத்த நிஷாதம் (நி3)
கைசிகி நிஷாதம் (நி2)
ஷட்ச்ருதி தைவதம் (த3)
காகலி நிஷாதம் (நி3) தாரஷட்ஜமம் (ச்)
1 16/15 9/8 6/5 5/4 4/3 64/45 3/2 8/5 27/16 9/5 15/8 2
(10/9) (40/27) (5/3) (16/9)

பன்னிரண்டு சுரங்களின் ஸ்தானங்கள்

தெலுங்கு நூலிலும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைந்த பிரமவீணையைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. மேளாதிகாரலட்சணம் என்னும் சமஸ்கிருத நூலில் மேற்கூறிய 24 சுருதிகளின் பெயர்களும் காணப்படுகின்றன. மேற்காணும் பட்டியில் உள்ள 22 பெயர்களைத் தவிர, காந்தா, உத்தீபினீ எனும் இரண்டு சுருதியின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எழுபத்திரண்டு மேளகர்த்தா முறையை நிலைநாட்டிய வேங்கடமகி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகளை அமைத்தே சதுர்த்தண்டிப் பிரகாசிகையை எழுதியிருக்கிறார். இந்நூலுக்கு அனுபந்தமான இராகலட்சணம் எனும் நூலில் 24 சுருதிகளைப்பற்றிக் கூறப்பட்டிருந்தாலும், அந்நூலை எழுதியவர் வேங்கடமகி அல்லர் என்று இன்று தெரிகிறது. மேலும் வட இந்தியாவில் சில வித்துவான்களும், தென்னிந்தியாவில் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும் ஒரு ஸ்தாயியில் 24 சுருதிகள் அமைப்பதுதான் முறை என்று கூறியிருக்கிறார்கள். இன்னும் சில வித்துவான்கள் ஒரு ஸ்தாயியில் 27 சுருதிகள் இருக்கின்றனவென்றும், 32 சுருதிகள் இருக்கின்றனவென்றும் கருதுகிறார்கள். ஆராய்ந்து பார்த்தால் எவ்வளவு இடைவெளிகள் வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்று ஏற்படும். ஆனால் இப்போது பழக்கத்தில் பொதுவாக ஒப்புக்கொள்ளப்பெற்றவை 22 சுருதிகளே. கருநாடக இசைக்கு இவை போதுமானவை என்று தோன்றுகிறது.

இலட்சணத்திற்கு இப்படி 22 சுருதிகளை நிருணயப்படுத்தி இருந்தாலும் பழக்கத்தில் 16 பெயர்களுடன் விளங்கும் 12 சுரங்கள் தாம் வழங்கி வருகின்றன. இந்த 12 சுரங்களுடைய ஸ்தானங்களை அட்டவணையில் கண்டவாறு கணக்கிடலாம்.

மேனாடுகளில், பியானோ போன்ற வாத்தியங்களைச் செய்பவர்கள் ஒரு ஸ்தாயியிலுள்ள இடைவெளிகளைச் சமமாக்கி அவற்றிற்கிணங்கச் சுர ஸ்தானங்களை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய சம இடைவெளிகள் கருநாடக இசைக்கு உதவா. அவற்றை ஆதாரமாகக் கொண்ட பாட்டு, இம்முறைக்கு முற்றிலும் முரண்பாடானது. 22 சுருதிகளைச் சம இடைகளாக்கும் போது இயற்கைச் சுரங்களாய் விளங்கும் மத்யம பஞ்சமச் சுரங்கள்கூட ஸ்தானம் தவறிப்போகும்; 12 சுர ஸ்தானங்களைச் சம இடைப்படுத்தினால் கேட்கவேண்டுமா? மேற்கூறியபடி அமைக்கப்பட்ட இசைக் கருவிகளிலுண்டாகும் சுரங்களுக்குக் காது பழக்கப்பட்டுப் போனால் உண்மையான கருநாடக இசையின் நுட்பங்களை அறியும் திறன் குறைந்துபோகும். ஒரு ஸ்தாயியில் 53 சம இடைகளை அமைத்தால் ஒருவேளை கருநாடக இசைக்கு வேண்டிய 22 சுருதிகள் அவைகளில் உட்படலாம்.

பலவித கமகங்களால் அழகுபெறும் கருநாடக இசைக்கு ஒரு ஸ்தாயியிலுள்ள நுட்பமான சுருதிகளை நிருணயம் செய்து, அவற்றை ஆதாரமாகக்கொண்டு பாடுவது அல்லது வாத்தியங்களில் வாசிப்பது கலைத்தன்மைக்கு ஏற்றதாகாது. நமது அனுபவத்தில் சுரம்