பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

547

இத்தாலி

மித்துக்கொண்டார்கள். அபிசீனியாவைக்கைப்பற்றப் பிரதம மந்திரி கிரீஸ்பீ அனுப்பிய படை 1896-ல் அடோவா யுத்தத்தில் முறியடிக்கப்பட்டது. உடனே கிரீஸ்பி ராஜினாமா செய்தான். இவனுக்குப் பின் வந்த மந்திரிகள் தீவிரவாதிகளை, முக்கியமாகச் சோஷலிஸ்டுகளை அடக்க முயன்றார்கள். 1900-ல் அரசன் I-ம் ஹம்பர்ட் கொலை செய்யப்பட்டான். இவனுக்குப் பின் இவன் புத்திரன் III-ம் விக்டர் இம்மானுவல் பட்டமெய்தினான். 1911-ல் துருக்கியிடமிருந்து லிபியா கைப்பற்றப்பட்டது.

மே 1915-ல் இரகசிய லண்டன் உடன்படிக்கைப்படி இத்தாலி நேசநாடுகளின் கட்சியில், ஆஸ்திரியாவிடமிருந்து டிரென்டீனோ. டிரீஸ்ட், டால்மேனியா முதலியவற்றைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முதல் உலக யுத்தத்தில் இறங்கியது. அக்டோபர் 1917-ல் கபாரெட்டோ யுத்தத்தில் ஆஸ்திரிய-ஜெர்மானியச் சேனைகளால் இத்தாலியர் பெருந்த நஷ்டத்துடன் முறியடிக்கப்பட்டனர். ஓர் ஆண்டு கழித்து இத்தாலியர்கள் பிரிட்டிஷ் - பிரெஞ்சுப் படைகளின் உதவியைக் கொண்டு ஆஸ்திரியர்களை விட்டோரியோ வெனிடோ என்னுமிடத்தில் தோற்கடித்து நாட்டைக் காப்பாற்றினர்; யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டபின் (1919) ஆஸ்திரியாவிடமிருந்து இஸ்டிரியாவையும் டிரென்டீனோவையும் இத்தாலியர் பெற்றனரேயொழிய, அவர்கள் மிகவும் விரும்பிய ஏட்ரியாடிக் துறைமுகப் பட்டினமான பியுமேயைப் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த டான்னூன்சையோவும் (d' Annunzio) அவன் வாலிபர் படையினரும் பியுமேயை ஆக்கிரமித்துக் கொண்டனர் (1918-21). இத்தாலியில் தொழிலாளிகளின் வேலை நிறுத்தங்களும், கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்புக்களும், மந்திரிசபைகளின் வீழ்ச்சிகளும், பல கட்சிகளின் பேதங்களும் குழப்பத்தை யுண்டாக்கின.

இக்குழப்பத்தினின்றும் முசொலீனியின் பாசிஸ்டுக் கட்சி தோன்றியது. சேனையைப்போல் பயிற்சி பெற்ற பாசிஸ்டுக் கட்சியின் உதவியால் ரோமை ஆக்கிரமித்துக் கொண்ட முசொலீனியை விக்டர் இம்மானுவல் தன் பிரதம மந்திரியாக நியமித்தான் (அக்டோபர் 1922). படிப்படியாக எல்லா விதமான எதிர்ப்புக்களையும் நசுக்கி, முசொலீனி இத்தாலியில் பாசிஸ்டுச் சர்வாதிகாரத்தை நிறுவினான். 1997-ல் முசொலீனி ஏற்படுத்திய 'கார்ப்பரேடிவ்' அரசியலின் கீழ் விவசாயம், கைத்தொழில், கல்வி முதலான துறைகளில் இத்தாலி விரைவாக முன்னேறியது. 1870 முதல் இத்தாலிய சர்க்காரை அங்கீகரிக்காத போப் 1929-ல் லேடரன் உடன்படிக்கைப்படி இத்தாலியச் சர்க்காருடன் சமாதானம் செய்துகொண்டார். 1935-ல் முசொலீனியால் அனுப்பப்பட்ட மார்ஷல் கிரேசியானி அபிசீனியாவைக் கைப்பற்றினான். 1939 ஏப்ரலில் முசொலீனி ஆல்பேனியாவை ஆக்கிரமித்துக் கொண்டான்; 1939 மேயில் ஹிட்லருடன் ஒரு நேச ஒப்பந்தம் செய்துகொண்டான். ஹிட்லர் பிரான்ஸைக் கைப்பற்றிய பிறகு 1940 ஜூன் 10-ல் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிட்டனின் குடியேற்றங்களையும் எகிப்தையும் குயெஸ் கால்வாயையும் கைப்பற்றும் நோக்கத்துடன் முசொலீனி இரண்டாம் உலக யுத்தத்தில் இறங்கினான். ஆப்பிரிக்காவில் இத்தாலியர்கள் ஆரம்பத்தில் சில வெற்றிகளைப் பெற்றனர். மார்ஷல் கிரேசியானி லிபியாவிலிருந்து எகிப்து வழியாகச் சூயெஸ்கால்வாயை நோக்கிப் படையெடுத்தான். ஆனால் டிசம்பர் 1940-ல் நேசப்படைகள் பார்டியா, டொப்ரூக், டெர்னா, பெங்காசி முதலிய இடங்களைக் கைப்பற்றி, ஆயிரக்கணக்கான இத்தாலியர்களைச் சிறைப்படுத்தின. ஜெர்மானிய ஜெனரல் ராமலின் உதவியைக் கொண்டு இத்தாலியர் தம் நாடுகளைத் திரும்ப அடைந்தனர். ஆனால் ராமல் தோற்கடிக்கப்பட்டபின் இத்தாலியர் 1941 மேயில் ஆப்பிரிக்கச் சாம்ராச்சியம் முழுவதையும் இழந்தனர். 1943-ல் நேசப்படைகள் ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலிமீது படை யெடுத்தபோது இத்தாலியர் பாசிஸ்டுக் கட்சியிலும் முசொலீவியின் தலைமையிலும் நம்பிக்கையிழந்தனர். விக்டர் இம்மானுவலின் உத்தரவின் கீழ் முசொலீனி கைது செய்யப்பட்டான். 1943 செப்டம்பர் 3-ல் மார்ஷல் படாக்ளியா (Badoglio) இத்தாலிய அரசாங்கத்தின் சார்பாக நேசப்படைத் தலைவனிடம் சரணடைந்தான். 1944 ஜூன் 4 -ல் நேசப்படைகள் ரோமைக் கைப்பற்றின. ஏப்ரல் 28-ல் ஜெர்மானியர்களால் சிறையினின்றும் விடுவிக்கப்பட்ட முசொலீனி பாசிஸ்டுகளின் எதிரிகளால் கைப்பற்றப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டான். 1947 பிப்ரவரி 10-ல் இத்தாலியுடன் நேசநாடுகள் செய்துகொண்ட உடன்படிக்கைப்படி இத்தாலி தன் ஆப்பிரிக்கச் சாம்ராச்சியத்தை இழக்தது மல்லாமல் டிரீஸ்ட் என்னும் ஏட்ரியாடிக் துறைமுகப் பட்டினத்தையும் ஐக்கிய நாடுகளின் சங்கத்தின் பராமரிப்பின்கீழ் விட்டுவிட்டது வீ. என். ஹ.

அரசியல் அமைப்பு : 1848-ல் பீட்மான்டும் சார்டீனியாவும் ஏற்றுக்கொண்ட அரசியல் அமைப்பை ஐக்கிய இத்தாலியும் மேற்கொண்டது. முசொலீனி அதிகாரத்திற்கு வரும்வரையில் (1922) இவ்வமைப்பு மாறாமல் இருந்து வந்தது. 1943ஆம் ஆண்டுவரையில் நடைமுறையிலிருந்த பாசிச சர்வாதிகாரத்தின்கீழ், இத்தாலிய அரசியல் அமைப்பு, பெயரளவில் முடியரசாயிருந்ததெனினும், பிரதம மந்திரியாயிருந்த முசொலீனியே இராச்சியத்தின் தலைவனாயிருந்தான். முன்பு பார்லிமென்டிற்குப் பொறுப்புடையதாயிருந்த மந்திரிசபை மாற்றப்பட்டுப் பாசிசக் கட்சி அங்கத்தினர்களே மந்திரிகளாய் விட்டனர்; இவர்கள் முசொலீனிக்கு முழுவதும் அடங்கியவர்கள். பாசிசக் கட்சியின் சின்னமான 'கழிகளின் கட்டு ', அடக்கு முறையைக் குறிப்பிட்டது.

பார்லிமென்டின் கீழ்ச்சபையான ’பிரதிநிதிகள் சபை’க்கு அங்கத்தினர்கள் கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பட்டி இருக்கும். தேர்ந்தெடுப்போர் ஒவ்வொரு பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்காமல் முழுப்பட்டிகளாகவேதேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பான்மை வாக்குக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி மொத்தத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஸ்தானங்கள் பெறும். மற்றக் கட்சிகள் தாங்கள் பெற்ற வாக்குக்களுக்குத் தக்கவாறு பெறும். இச்சபை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும்; ஆயினும், அதற்குள்ளாகப் பிரதம மந்திரியால் கலைக்கப்படவும் கூடும். 1933 லிருந்து பிரதம மந்திரி ஒரே பட்டியை வாக்காளர்களுக்கு அனுப்பி, அதை அவர்கள் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் ஏற்பட்டது. பாசிஸ்டுகளின் ஆதிக்கத்தினால் அக்கட்சியின் பட்டியையே முழுவதும் மக்கள் ஒப்புக்கொள்ளத் தொடங்கினர். பண மசோதாவைப் பிரேரேபிக்கக் கீழ்ச்சபையாருக்கே உரிமையுண்டு; மேல்சபையான செனெட் இம்மசோதாவை எதிர்த்தால், தேவையான அளவு புது அங்கத்தினர்களை மேல்சபைக்கு நியமனம் செய்து எதிரிப்பைச் சமாளித்து விடுவார்கள்.

செனெட்டில் பெரும்பாலும் நியமன அங்கத்தினர்களும் சில பாரம்பரிய அங்கத்தினர்களுமே உண்டு. கீழ்ச்சபை அலுவல்களைக் கவனிக்க ஒன்பது குழுக்கள்