பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அச்சடித்தல்

26

அச்சடித்தல்

தெளிவாக இருக்கும். பல அளவுள்ள எழுத்துக்களையும் இம்முறையில் வார்த்துக் கொள்ளலாம். இது திறமையுள்ள ஐந்து தொழிலாளர்கள் செய்யும் வேலையைச் செய்ய வல்லது.

மானோடைப் முறையில் அச்சுக் கோப்பதும் எழுத்துக்களை வார்ப்பதும் ஒரே எந்திரத்தில் செய்யப்படுவதில்லை. இந்த எந்திரதில் எழுதுக்கள் குறித்த பொத்தான்களை அழுத்தினால் ஒரு நீண்ட காகிதச்சுருளில் ஒவ்வொரு எழுத்திற்கும் சரியாக ஒரு துவாரம் ஏற்படும். இவ்வாறு துவாரங்கள் கொண்ட சுருளை வார்ப்பட்ட எந்திரதில் மாட்டிவிட்டால் அது துவாரங்களுக்கேற்ற எழுத்துக்களைத் தனிதனியே வார்த்து வரிவரியாகத் தக்கபடி சேர்த்துக்கொண்டே வரும். இம்முறையிலும் பல அளவுள்ள எழுத்துக்களை வார்க்கலாம் . கால அட்டவணைகள், விலை உயர்ந்த புத்தகங்கள் முதலியவற்றை அச்சடிக்க இம்முறை முக்கியமாகப் பயன்படுகிறது. லைனோடைப் முறையில் ஒரு பிழை ஏற்பட்டாலும் அந்த வரிமுழுவதையும் திருப்பி வார்க்கவேண்டும். மானோடைப் முறையில் பிழையான எழுத்தை மட்டும் வார்த்தால் போதுமானது.

தொலை அச்சுக்கோப்பான்
உதவி : ஹிந்து சென்னை

லைனோடைப் முறையில் இன்னொரு சௌகரியமும் உண்டு. இதைத் தொலை அச்சுக்கோப்பான் (Tele Typesetter) என்ற கருவியோடு இணைத்துவிடலாம். இக்கருவி ஒரு டைப்ரைட்டர் போலிருக்கும். இதில் ஒரு காகித நாடா இருக்கும். அச்சடிக்க வேண்டிய செய்தியை இதில் டைப் அடித்தால் நாடாவில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஏற்ற துவாரங்கள் ஏற்படும். துவாரங்கள் கொண்ட நாடாவை லைனோடைப் எந்திரத்தில் மாட்டிவிட்டால் அது தானாகவே அச்சுக்களைக் கோத்துவிடும். தந்திக் காரியாலயத்துடன் இந்த எந்திரத்தை இணைத்துவிட்டால், தந்தியில் செய்திகள் வரும் போதே அது எந்திரத்தில் பதிவாகி உடனுக்குடன் அச்சாகவும் தயாராகிவிடும். இத்தகைய எந்திரம் நமது நாட்டில் முதன் முதல் சென்னையிலுள்ள ஹிந்து கார்யாலயத்தில் அமைக்கப்பட்டது. லைனோடைப் முறையைத் தமிழிலும் ஏற்படுத்த முயற்சி நடந்து வருகிறது. தற்போது சுதேசமித்திரன் காரியாலயத்தில் தமிழ் லைனோடைப் எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வேறு சில நூதனமான எந்திரங்களும் தற்காலத்தில் வழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றில் ஒளி அச்சுக்கோப்பான் (Photo Typester) என்பது முக்கியமானது. இது ஈயம் போன்ற உலோகத்தின் உதவியின்றி எழுத்துக்களைப் போட்டோப் பிடித்து அச்சுக்கோக்கிறது. இது லித்தோ அச்சு (Lithography) முறைக்கு (த.க) ஏற்றது.

அச்சிடும் முறைகள் : கோத்த அச்சுக்களைக் கொண்டு அச்சடிக்கப் பழங்காலத்தில் எளிய அமைப்புள்ள எந்திரங்களைப் பயன்படுதினர். அச்சுக்களை ஓர் இரும்புச் சட்டத்தில் முடுக்கி, ஒரு சமதளமான தட்டின் மேல் வைத்து அவற்றின்மேல் கையால் மையைத் தடவிக் காகிதத்தை வைத்து, எந்திரத்தை அழுத்தினால் காகிதத்தில் அச்சு விழும். இத்தகைய எந்திரங்கள் இன்றும் நம் நாட்டில் பயன்படுகின்றன. இவற்றைக் கொண்டு குறித்தகாலத்தில் மிகக் குறைவான பிரதிகளே அச்சிட முடியும்.

தற்காலத்தில் மூன்றுவகை அச்சு எந்திரங்கள் வழக்கதில் உள்ளன. இவை: 1. தட்டு (Platen) அல்லது மிதி (Treadle) எந்திரங்கள் 2. உருளை (Cylinder) எந்திரங்கள் 3.சுழல் (Rotary) எந்திரங்கள் எனப்படும். இவற்றுள் முதல்வகை எந்திரதில் பெரிய தாள்களில் அச்சடிக்க முடியாது. சிறு விளம்பரங்களும், புத்தகங்களும் மட்டுமே அச்சடிக்கலாம். இதில் கனமான இரண்டு இரும்புப் பலகைகள் இருக்கும். இவற்றுள் ஒன்று செங்குத்தாக எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும். அச்சுக்கள் முடுக்கப்பட்ட இரும்புச் சட்டம் இதில் பொருத்தப்படும். இரண்டாவது இரும்புப் பலகை முன்னும் பின்னுமாக அசையுமாறு அமைந்திருக்கும் . இப்பலகை முன்னால் போகும்போது முதற்பலகையின் மேலுள்ள அச்சுக்களின்மீது அழுத்தும். பின்னால் வரும்போது திறந்துகொள்ளும். அப்போது அதன்மேல் காகிதத்தை வைத்துவிட்டால் முன்னே போகும்போது காகிதம் அச்சின்மேல் அழுத்தப்பட்டு அதில் அச்சு பதியும். பலகை மீண்டும் திறக்கும்போது அதை எடுதுத்துவிட்டு வேறோரு காகிதத்தை வைக்க வேண்டும். எந்திரத்திலுள்ள மை உருளைகள் மேலுங்கீழுமாக ஓடி அச்சுக்களின்மேல் மையைத் தடவும். தையல் எந்திரத்தைபோல் இதைக் காலால் மிதித்து இயக்கலாம்; அல்லது மின்சார மோட்டாரினால் இயக்கலாம். இதைக்கொண்டு மணிக்கு சுமார் 1000-1500 பிரதிகள் அச்சிடலாம்.

உருளை எந்திரம் தட்டு எந்திரத்தைவிடப் பெரியது. இதில் அச்சுக்கள் முடுக்கிய சட்டம் கிடையாகப் பொருத்தப்படும். இப்பலகை முன்னும் பின்னுமாக எந்திரத்தில் ஓடும். இது பின்புறம் செல்கையில் மையுருளை எழுத்துக்களின்மேல் மை தடவிவிடும். முன்புறம் வரும்போது இது ஒரு பெரிய இரும்பு உருளையினடியில் வரும். இந்த உருளை அச்சிடவேண்டிய தாளைப் பிடித்திருக்கும். இந்த உருளை சுழன்று தாளில் அச்சுப் பதியும். இதன் பின்னர் தாள் உருளையைவிட்டு வெளியேறும். இந்த எந்திரத்தில் ஒருவகையில் உருளை-