பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

590

இந்தியா

மான்களுக்கும் ஆடுகளுக்கும் நடுத்தரமான உடல் அமைப்பு உள்ளவை. இந்த இரலைகள் இந்தியாவிலேதான் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு வகைகளுண்டு. மூன்று வகைகள் தென்னிந்தியாவிலும் காணப்படுகின்றன. வடநாட்டு மொழிகளில் நீல்கை (Nilgai) என்றும், தமிழில் மான் போத்து என்றும் வழங்குவது ஒன்று. மற்றொன்றிற்கு நான்கு கொம்புகள், முன் இரண்டு சிறியவும், பின் இரண்டு பெரியவுமாக இருக்கின்றன. இதற்குத் தெலுங்கில் கொண்ட- கொர்ரி என்று பெயர். மூன்றாவதை வேலி மான் (Black Buck) என்று சொல்லுவார்கள். வேலி மானின் கொம்பு முறுக்கியும், எடுப்பாயும், பள்ளமாயும் இருக்கும். திரி மருப்பு இரலை என்பது இதுவே. இம்மூன்றுவகை இரலைகளில் பெண்ணுக்குக் கொம்புகள் வளருவதில்லை. நவ்வி (Gazelle) என்று சொல்லப்படுகிற வகையில் இந்தியாவில் மூன்று இனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தென்னிந்தியாவில் இருக்கிறது. மைசூர், அனந்தப்பூர், கர்நூல் ஜில்லாக்களில் அகப்படுகின்றது. இதில் பெண்ணுக்கும் சிறிய கொம்புண்டு. இதற்குத் தெலுங்கில் புருட-ஜிங்க (Buruda Jinka) என்று பெயர்.

மேற்கூறியவைகளுக்கெல்லாம் கொம்புகள் உள்ளே குடைவாக இருக்கும். இவைகளைப் பழைய காலங்களில் மருந்து முதலியவற்றை வைப்பதற்குப் புட்டிபோல் உபயோகித்து வந்தார்கள். இப்போதும் சில இடங்களில் ஈயம் பூசுவோரைப் போன்றவர் இதை வைத்திருப்பதைக் காணலாம்.

மான் : கலைமான், கடமை, புள்ளிமான் என மூன்று வகை மான்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. கலைமானுக்கு முகத்தில் மூன்று சிறு பள்ளங்கள் இருக்கும். மான்களில் பெரியது கடமை. இந்த இரண்டு வகைகளை மலைப்பிரதேசங்களில் காணலாம். புள்ளி மான் கடமையைவிடச் சிறியது. இது சமவெளிகளிலும் வசிக்கிறது-

மேற்குத்தொடர்ச்சிமலையின் கீழ்ப்பாகங்களில் நான்கு குளம்புகளுடைய மான்வகை ஒன்று வாழ்கிறது. இதைப் பார்ப்பது அரிது. பாறைகளின் பொந்துகளில் பகலில் தங்கி வெப்பப்பொழுதைக் கழிக்கும். இதை ஆங்கிலத்தில் ஷெவ்ரடேன் (Chevrotain) என்றும், சிறிதானதனால் சுண்டெலிமான் (Mouse Deer) என்றும் சொல்வார்கள். தமிழில் குறும் பன்றி என்பார்கள். இதைப் பிடித்து வீட்டில் வளர்க்கலாம். சாதாரண நாய் அளவு உயரம் இருக்கும். இதற்குக் கொம்புகள் இல்லை.

காட்டுப்பன்றியில் ஒருவகைதான் தென்னிந்தியாவில் இருக்கின்றது. இது இரவில் வெளிவந்து பயிரைப் பாழ்செய்யும். அந்தமான் தீவில் ஒரு சிறிய வகையும், இமயமலைப் பிரதேசங்களில் இன்னும் சிறிய குள்ளப்பன்றி (Pigmy Hog) வகையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல்களிலும் அவற்றைச் சார்ந்த மைசூரில் உள்ள அடர்ந்த காடுகளிலும் யானைக் கூட்டங்களைப் பார்க்கிறோம். யானை தென்னிந்தியாவிற்கும், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களுக்கும் உரியது. வடஇந்தியாவில் ராஜபுதனத்தில் ஒட்டகங்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. இவை வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டவை. ஒட்டகங்களை மாடுகள்போல் வண்டியில் பூட்டியும், மற்றும் உடம்பின்மேல் சுமை ஏற்றியும் வடநாடுகளில் உபயோகப்படுத்துகிறார்கள்.

பாலூட்டிகளில் பல்லில்லாதவை என்பது ஒருவகை (Edentata). இந்த வகையில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அழுங்கு என்று ஒன்று உண்டு. இதன் மேல்தோலில் பருத்த செதில்கள் முதுகிலும் பக்கங்களிலும் ஓடு அடுக்கினாற்போல் அடுக்கியிருக்கும். விரல்களின் நுனியில் கூரிய நகங்கள் இருக்கின்றன. அவை பூமியில் பொந்துகள் செய்து வசிக்கவும், புற்றுக்களை உடைக்கவும் உபயோகப்படுகின்றன. இது புற்றுக்களில் உள்ள கறையான், எறும்பு முதலியவைகளைத் தின்னும். வெகு நீளமான நாக்கு உடையது. இதன் எச்சில் பிசின் போல் இருக்கும். நீண்ட நாக்கைப் புற்றின் துவாரங்களில் செலுத்தி, எச்சிலில் எறும்புகளை ஒட்டச்செய்து, நாக்கை இழுத்து அவ்வெறும்புகளை உட்கொள்ளுகிறது. இதன் தலை நீண்டிருக்கும். கண் சிறுத்திருக்கும். இது இரவில் இரைதேடும். ஆபத்துக் காலத்தில் உடம்பை மரவட்டைபோல் சுருட்டிக்கொள்ளும். இது சென்னைக்கருகே நகரி முதலியமலைகளில் இருக்கின்றது.

பறவைகள்: பறவைகளில் பல இனங்கள் இருக்கின்றன. இனங்கள் பெருந்தொகையா யிருப்பதால் இவ்விடத்தில் விரிவாகச் சொல்ல இயலாது. கிளிகள் பார்வைக்கு மிக அழகானவை. சிறு பறவைகளையும் உயிர்களையும் பிடித்துத் தின்னும் இனங்களில், கழுகுகள், பருந்துகள். பைரி, இராசாளி அல்லது வல்லூறுகள், ஆந்தைகள் முதலியன இருக்கின்றன. மூன்றுவகை மீன் கொத்திகள் மீனைக்கொத்தி யுண்டு வாழ்கின்றன. மைனாக்கள் சில மனிதர்களால் பழக்கப்பட்டுப் பேசவும் கற்கின்றன.

நீர்ப்பறவைகளில் வாத்துக்கள், நீர்க்கோழிகள் முதலிய பலவகையுண்டு, அல்லிக்கோழி என்பது நீண்ட கால்களும் விரல்களும் பொருந்தியது. தாமரை இலைகளின்மேல் நிற்கவும் நடக்கவும் கூடியது. இந்த இனத்தில் பெண்பறவை முட்டையிடுங் காலங்களில் ஆண் பறவையின் நிறம் மாறி மிக அழகாகத் தோன்றிப் பெண்ணின் மனத்தைக் கவரும்.

புறாக்கள், காட்டுக்கோழிகள் முதலியன புதர்களில் காடுகளில் வாழும். மயில் இனமும் காட்டில் காணலாம். சில சமயங்களில் வெள்ளை மயில்களும் காணப்படுன்றன. காட்டுக்கோழி, கினிக்கோழி (Guinea fowl) எனக் கோழிகளில் சில சாதிகள் இருக்கின்றன. காடை, கௌதாரி முதலிய பறவைகளை வலை வீசிப் பிடித்து விற்பதைக் காணலாம்.

ஊர்வன (Reptiles): இந்தக் கூட்டத்தில் ஓணான் முதலிய வகைகள், பாம்புகள், ஆமைகள், முதலைகள் அடங்குகின்றன.

பல்லிகளில் மூன்று இனங்களை வீடுகளில் காணலாம். அவற்றுள் பெரியது மரங்களினின்று வீட்டுக்குள் வருகிறது. பல்லிகளின் விரல்களின் கீழே பலகைகள் அடுக்கியதுபோல் தோல்மடிப்புக்கள் இருக்கின்றன. இவை மழமழப்பான செங்குத்தான சுவரின்மேல் ஏறவும், கூரைத்தளத்தின் அடியில் மல்லாந்து செல்லவும் உதவுகின்றன. திருப்பதி மலையில் சில சமயங்களில் காணப்படுகின்ற காலோடாக்ட்டிலஸ் (Calodactylus) என்னும் பல்லிக்கு விரலின்கீழ் இரண்டே தோல்மடிப்புக்கள் இருக்கின்றன.பல்லிகள் ஓடுள்ள இரண்டு முட்டைகளை இடுகின்றன. ஓணானும் முதுகில் நான்கு மூலையுள்ள வைர வடிவ அடையாளங்களையுடைய மற்றொரு சிறு வகையான கரட்டோணானும் மரங்களில் (சைத்தானா-Sitana) காணப்படும். கற்பாறைகளில் சாதாரணமாகக் மற்றொரு சாதி உண்டு. அதன் ஆணின் தலையின் மேற்பாகமும், கழுத்தும், முதுகும் நாமம் போட்டது போல் இனம் பெருக்கும் பருவத்தில் சிவந்திருக்கும். உடும்பைச் சிலர் தின்பதுண்டு. அரணைகளில் பெரிய அரணை (மபூயா), சிறிய அரணை (லைகோ