பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/691

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

626

இந்தியா

கடிக்கப்பட்டான். இதனுடன் சந்தேல ஆட்சி முடிவு பெற்றது. அவர்கள் இராச்சியம் 1310-ல் டெல்லி சுல்தானால் தன் இராச்சியத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சந்தேல இராச்சியத்திற்குத் தெற்கேயுள்ள சேதிநாடு இரண்டு பிரிவுகளாக இருந்தது. நருமதைக் கரையில் ஜபல்பூர் பிரதேசத்தில் திரிபுரி என்னும் ஊரை இராசதானியாகக் கொண்டது தாகளம் எனப்பட்ட வட சேதி நாடு ; தட்சிண கோசலம் ஆகிய தென் சேதிநாடு ரதன்பூரை தலைநகரமாகக் கொண்டிருந்தது. அந்நாடு தற்காலத்துப் பிலாஸ்பூர் ஜில்லாவுள்ள இடத்திலிருந்தது. இங்கே சேதிவமிசத்தின் ஒரு கிளையினர் ஆண்டுவந்தனர். சேதி வமிசத்து அரசர்களுக்குக் காலசூரிகள் அல்லது ஜஹையர்கள் என்று பெயர். அவர்கள் கி.பி. 249-ல் ஆரம்பித்த சகாப்த மொன்றை மேற்கொண்டனர். திரிபுரியில் ஆண்ட காலசூரிகளில் முதலானவன் கோக்கல்லன். கேயூர வர்ஷ யுவராஜன் (ஆ. கா .925-50) என்னும் ஏழாவது அரசன் ஒரு பெரு வீரன். இவன் பல கோவில்களைக் கட்டினான். இவன்மகன் இலட்சுமண ராஜன் ஒரிஸ்ஸா, கத்தியவார், கூர்ஜர இராச்சியம் முதலியவற்றோடு வெற்றிகரமான போர் தொடுத்தான். வடக்கே கண்டகி நதிக்கரையில் தன் வமிசத்துச் சிற்றரசர்களை இருத்தினான். பதினோராவது அரசன் இரண்டாம் கோக்கல்லன் காலத்தில் பரமார அரசன் முஞ்சன் திரிபுரியைப் பிடித்தான். கோக்கல்லன் மகன் காங்கேயத் தேவன் (ஆ.கா.1015-1041) விக்கிரமாதித்தியன் என்ற பட்டம் பெற்று, வட இந்தியா முழுவதற்கும் ஒரு பேரரசனாக விளங்கினான். 1019-ல் மாமூதால் பிரதிஹாரர் தோல்வியடைந்த பின் இவன் பல நாடுகளைக் கைப்பற்றிப் பிரயாகையைத் தன் இருப்பிடங்களில் ஒன்றாகக் கொண்டு இமயம்வரை தன் ஆட்சியைப் பரப்பினான். தீரபுக்தி என்னும் மிதிலை நாட்டுப் பகுதி இவன் வசமாயிற்று. இவன் மகன் கர்ணதேவன் (ஆ.கா. 1041-70) ஆவல்ல தேவி என்னும் ஹூண ராணியை மணந்தான். குஜராத் அரசன் பீமனுடன் சேர்ந்து பரமார போஜனை 1060-ல் வீழ்த்தினான். இவனுக்குத் திரிகலிங்காதிபதி என்ற பட்டம் உண்டு. தன் ஆட்சியின் கடைசிக் காலத்தில் கீர்த்திவர்மன் என்ற சந்தேல அரசனால் இவன் தோல்வியுற்றான். கர்ணதேவன் மகன், யசகர்ணன் (ஆ. கா. 1071-1125) பீகாரிலும் கோதாவரிக் கரையிலும் வெற்றிகள் எய்திப் பின் சுமார் 1105-ல் பரமார இலட்சம தேவன் சந்தேலசல்லட்சவர்மன் ஆகிய இரண்டு அரசர்களால் தோல்வியுற்றான். இவனுக்குப்பின் ஆண்ட ஐயாகர்ணன் (ஆ. கா. 1125-54) காலத்தில் சேதி இராச்சியம் ஆரம்பத்தில் இருந்ததைப் போல் ஒரு சிறு இராச்சியமாக ஒடுங்கிவிட்டது- இரத்தினபுரத்து அரசர்கள் சுயேச்சையாகப் போய்விட்டதால் இதுவும்கூட ஒரே இராச்சியமாக இருக்கவில்லை. இவ்வமிசத்துக் கடைசி அரசன் விஜய சிம்மதேவன். 1180-ல் திரிபுரியிலும் 1195-ல் பேராகாட் என்னுமிடத்திலும் இவன் சாசனங்கள் பொறித்திருக்கிறான்.

காச்மீரம்: ஆதிகாலம் தொட்டுக் காச்மீரம் என்ற அழகிய நாடு மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. அதன் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்னும் நூலில் கல்ஹணன் விரிவாகக் கூறி இருக்கிறான். அலெக்சாந்தர், சந்திரகுப்த மௌரியன், அசோகன், கனிஷ்கன், மிகிரகுலன், ஹர்ஷவர்த்தனன் முதலியோர்களுடைய காலத்தில் காச்மீரத்தைப் பற்றிய செய்திகள் அங்கங்கே கிடைக்கின்றன. கார்க்கோடக வமிசத்தைத் தோற்றுவித்த துர்லபவர்த்தனன் காலம் முதல் காச்மீரத்தின் வரலாற்றைத் தொடர்பாகக் கூறமுடியும். சீன யாத்திரிகன் ஹியூன்சாங்குக்கு விருந்து அளித்து, இருபது எழுத்தாளர்களைக் கொண்டு பௌத்த ஏடுகளைக் கி. பி. 631-33வரை எழுதிக்கொடுக்கச் செய்தவன் இவ்வரசன் என்றே கருதப்படுகிறது. இவனுடைய பேரன் முத்தாபீட லலிதாதிதியன்(ஆ. கா. 733-69). இவன் சீனாவுடன் நட்புப் பூண்டு காச்மீரத்தை ஒரு பெரிய இராச்சியமாகச் செய்தவன். கன்னோசி அரசன் யசோவர்மனையும், திபெத்தியரையும், சிந்து நதிக் கரையிலுள்ள துருக்கர்களையும் இவன் வென்றான். மார்த்தாண்டம் என்ற பிரசித்தி பெற்ற சூரியன் கோவில் கட்டினவனும் இவனே. இவன் பேரன் ஜயாபீடன் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கன்னோசி அரசன் வஜ்ராயுதனை வென்றான்.

855-ல் ஆளத்தொடங்கின அவந்திவர்மனுடன் உத்பல வமிசம் தொடங்குகிறது. இவன் 883 வரை ஆண்டான். இவன் காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன. சுய்யன் என்னும் பொறியியல் வல்லுநரால் பல அணைகளும், வாய்க்கால்களும், மதகுகளும் கட்டப்பட்டன. இவ்வமிசத்தில் இரண்டு அரசர்கள் கொடுங்கோல் மன்னரென்ற இகழ்ச்சியே பெற்றனர். சங்கரவர்மன் (ஆ. கா. 883-902) பல புது வரிகள் ஏற்படுத்தினதோடு கோவில்களைச் சூறையிட்டான். ஹர்ஷன் (ஆ. கா.1089-1101) தேவோத்பாடன நாயகன் என்ற ஒரு புது உத்தியோகஸ்தனை ஏற்படுத்தித் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட விக்கிரகங்களை உருக்கி நாணயங்கள் அடித்தான். இவனைச் சிலர் பைத்தியம் என்று கருதுவர்.

காச்மீரம் பௌத்தமதத்திற்கும் சமஸ்கிருத இலக்கியத்திற்கும் ஒரு முக்கியக் கேந்திரமாக வெகு காலம் விளங்கிற்று. இங்குச் சைவ மதமும் செழித்தோங்கிற்று. இந்தச் சைவம் அத்துவைத நெறியைத் தழுவியது. வசூபுக்தன் (800), கல்லடன், சோமானந்தன், உத்பலன், அபினவகுப்தன் (1000) முதலியோர் இம்மதத்தைச் சார்ந்த முக்கிய ஆசிரியர்கள். ஆறாம் நூற்றாண்டின் கடைசியில் ஆண்ட மாத்ருகுப்தனும், அவன் ஆதரித்த மேண்டனும் சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்த கவிகள். அவந்திவர்மன் காலத்தில் சிவ சுவாமி, இரத்தினாகரன் முதலிய கவிகள் ஆதரிக்கப்பட்டனர். பதினோராம் நூற்றாண்டில் சில முக்கியமான அலங்கார நூல்கள் எழுதினதுடன் இராமாயணம், பாரதம், பௌத்த கதைகள் முதலியவற்றையும் எளிதான காவிய நூல்களாக இயற்றிய ஹேமேந்திரன் காச்மீரத்தில் வாழ்ந்தான். அதே காலத்தில் சோமதேவன் கதாசரித்சாகரம் என்னும் அரிய நூலை இயற்றினான். திரிபுரி, அன்ஹில்வாரா, கல்யாணி முதலிய இராசதானிகளில் ஆதரிக்கப்பட்டு வந்த பில்ஹண கவியும் காச்மீர நாட்டைச் சார்ந்தவன்.

நேபாளம்: நேபாள நாடு பொதுவாகப் பல சிறு இராச்சியங்களாகப் பிரிந்திருந்தது. சில சமயங்களில் வலி மிகுந்த அரசர்களால் ஒரே இராச்சியமாகவும் ஆளப்பட்டு வந்தது. அசோகனும் அவன் மகன் சாருமதியும் நேபாளத்திற்குச் சென்று, தேவப்பட்டணம் என்னும் ஊரை ஸ்தாபித்தார்கள் என்பது ஓர் ஐதிகம். நேபாளத்தைத் தனக்கு அடங்காத தனி இராச்சியங்களில் ஒன்றாகச் சமுத்திரகுப்தன் அலகாபாத் சாசனத்தில் கூறுகிறான். 6-7ஆம் நூற்றாண்டுகளில் லிச்சவி வமிசத்தைச் சார்ந்த பௌத்த அரசர்கள் நேபாளத்தை ஆண்டனர். நேபாளம் ஹர்ஷன் இராச்சியத்தில் உள்ளடங்கி யிருந்திருக்கலாம். தாக்கூரி வமி-