பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/702

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

637

இந்தியா

பேரரசுக்கெதிராகக் கலகம் செய்தனர். டெக் பகதூர் என்ற ஒன்பதாவது குரு இஸ்லாம் மதத்தைத் தழுவ மறுத்து, ஒளரங்கசீபினால் மரண தண்டனை விதிக்கப் பட்டார். இதுபோன்ற செயல்கள் சீக்கியருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தின. பத்தாவது குருவான குரு கோவிந்தசிங் சீக்கியர் பலத்தை உருவாக்கினார். அவர் சீக்கியர் அனைவரையும் கால்சா என்ற அமைப்பில் அடக்கினார். சீக்கியன் என்றால் சிஷ்யன் என்று பொருள். போர்புரிவதைப் பெருமை மிக்கதாகச் சீக்கியர் கருதினர். இந்தக் கால்சா அமைப்புச் சர்பத் கால்சா என்ற ஒரு பொதுப் பேரவையினால் ஆளப்பட்டது.

இந்த அமைப்புச் சீக்கியர்கள் பலத்தை அதிகரித்தது. மொகலாயப் பேரரசின் பலவீனமும் இதற்குத் துணை புரிந்தது. கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்திருந்த சீக்கியத் தலைவர்கள் விரைவில் சுயநலமும் பகையும் கொண்டு பலத்தை இழந்தனர். மேற்கில் அட்டாக் முதல் கிழக்கில் ஷஹரன்பூர் வரையிலும், வடக்கே காச்மீரம் முதல் தெற்கே மூல்தான் வரையிலும் சீக்கியர் ஆதிக்கம் பரவியது.

பிற்காலத்தில் சீக்கிய வீரனான ரணஜித்சிங் சீனாப், ராவி ஆறுகட்கிடையே உள்ள குஜ்ரன்வாலாவுக்கு அதிபதியானான். விரைவில் பஞ்சாப் முழுமையும் அவன் வசமாகியது. ரண ஜித்சிங் லாகூரை 1799-ல் கைப்பற்றி, மகாராஜா என்னும் பட்டம் புனைந்து கொண்டான். சட்லெஜ் நதியைக் கடந்து நாபா, பாட்டியாலா பகுதிகளைக் கைப்பற்ற முயன்றபோது, வட இந்தியாவில் ஆதிக்கம் பெற்று விளங்கிய ஆங்கிலேயக் கம்பெனியின் பிரதிநிதியான மின்டோ பிரபு (ப. கா. 1807-13) ரணஜித்சிங்கோடு அமிர்தசரஸ் உடன்படிக்கையைச் செய்துகொண்டான் (1809). அதன்படி ரணஜித்சிங்கின் ஆதிக்கம் கிழக்கே பரவுவது தடுக்கப்பட்டது. வடக்கு மேற்குப் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை ரணஜித்சிங் பரப்பிப் பெஷாவர் மூல்தான் வரையுள்ள நாட்டின் அதிபதியானான். இறக்கும்வரை ரணஜித்சிங் ஆங்கிலேயரோடு நட்புக்கொண்டிருந்தான். 1839-ல் அவன் இறந்தவுடன் சீக்கியர் புதிய நாடு பிடிக்கும் நோக்கத் தோடு பிரிட்டிஷ் பகுதியின்மீது படையெடுத்தனர். முதலாவது சீக்கிய யுத்தம் மூண்ட து (1845-46). மூட்கி, அலிவால், பிரோஸ்ஷா, சொப்ரவான் என்னும் இடங்களில் சீக்கியர் தோல்வியுற்றனர். 1847 மார்ச் சில் ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையின்படி ஆங்கி லேயக் கம்பெனி சட்லெஜ், பியாஸ் ஆகிய இரு. ஆறுகட்கு மிடையேயுள்ள ஜலந்தர் பிரதேசத்தைப் பெற்றது. சீக்கிய அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக்கொண்டது. சேனை குறைக்கப்பட் டது. வேறு பல கட்டுப்பாடுகளும் சீக்கிய அரசாங்கத் தின்மீது சுமத்தப்பட்டன. இச்சமயத்தில் குலாப் சிங் ஒரு கோடி ரூபாய் கொடுத்துக் காச்மீரை வாங்கிக் கொண்டான். சீக்கியர் மீண்டும் கலகம் செய்யவே, இரண்டாவது சீக்கிய யுத்தம் (1848-49) ஏற்பட்டது. கவர்னர் ஜெனரல் டால்ஹௌசி பிரபு சிறந்த தளபதி களைக்கொண்டு சிலியன்வாலா, குஜராத் என்னும் இடங்களில் நடந்த போர்களில் சீக்கியரைத் தோற் கடித்தான். பஞ்சாப் ஆங்கிலேயர் வசமாயிற்று. சீக்கியர் வசமிருந்த போர்க்கருவிகள் பறிக்கப்பட்டன. பஞ்சாப் மூன்று கமிஷனர் ஆளுகையின்கீழ் வந்தது. விரைவில் சீக்கியர் தங்கள் பழைய பகைமையை மறந்து ஆங்கில ஆட்சியின் உற்ற நண்பர்களாயினர். இந்தியக் கிளர்ச்சிக் காலத்தில் பஞ்சாப் அமைதியோடிருந்தது.

வங்காளத்தில் 1690-ல் ஆங்கிலேயர் கல்கத்தாவை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் 1696-ல் அங்கே வில்லியம் கோட்டை கட்டப்பெற்றது. அது ஆங்கிலேயரின் முக்கிய வியாபாரத் தலமாயிற்று. இதைத் தவிர, காசிம் பசார், டாக்கா ஆகியவற்றிலும் பண்டகசாலைகள் இருந்தன. டச்சுக்காரர் சின்சுராவிலும், பிரெஞ்சுக்காரர் சந்திரநாகூரிலும் தங்கள் பண்டகசாலைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

சிராஜ் உத்-தௌலா என்ற வங்காள நவாபு ஆங்கிலேயர்மீது பகைமைகொண்டு கல்கத்தாவைக் கைப்பற்றினான் (1756). இது சம்பந்தமாக வழங்கும் இருட்டறைக் கொலை வரலாறு ஆதாரமற்றதாகும். பின்னர் நவாப் ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துகொண்டு நஷ்ட ஈடு கொடுக்கவும் சம்மதித்தான். ஆனால் கிளைவ் என்னும் தளபதி வங்காளத்தில் சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி, மீர் ஜாபர் என்பானை அவன் பதவியில் அமர்த்தச் சதி செய்தான். இச்சதியில் அமின்சந்த் என்பவனும் சேர்ந்திருந்தான். தக்க சமயத்தில் இச்சதியை வெளிப்படுத்துவதாக அவன் பயமுறுத்தவே, அவனுக்கு நவாபின் பொக்கிஷத்தில் உள்ள திரவியத்தில் 5 சத விகிதம் தருவதாக ஒப்புக்கொண்டு, ஒரு சிவப்புத்தாளில் கிளைவ் பத்திரம் எழுதிக்கொடுத்தான். வாட்ஸன் இச் சூழ்ச்சிக்கு இணங்க மறுக்கவே, கிளைவ் பொய்க் கையெழுத்திட்டு அமின்சந்தை ஏமாற்றினான். உண்மையான உடன்படிக்கைப் பத்திரத்தில் இந்த விதி சேர்க்கப்படவில்லை. அமின்சந்த் தான் ஏமாற்றப்பட்டதைப் பின்னரே உணர்ந்தான். இக்குற்றமும் பிற்காலத்தில் கிளைவ்மீது சுமத்தப்பட்டது. பின்னர் 23-6-1757-ல் நிகழ்ந்த பிளாசிப் போரில் சிராஜ் உத்-தௌலா தோற்றுப் பிறகு உயிரிழந்தான். மீர்ஜாபர் வங்காள நவாபு ஆக்கப்பட்டான். கம்பெனிக்குப் பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டன. 24 பர்கனாக்கள் என்ற பகுதி கிளைவுக்கு ஜாகீராக அளிக்கப்பட்டது. உயர்ந்த உத்தி யோகஸ்தர்கள் திரண்ட செல்வத்தைப் புது நவாபினிடமிருந்து பெற்றார்கள். மீர்ஜாபர் வாக்களித்த படி வெகுமதிகள் வழங்காததாலும் டச்சுக்காரரோடு சேர்ந்து சதி செய்ததாலும் பதவியிழக்க நேரிட்டது. முதல் முறையாகக் கவர்னர் பதவி வகித்து வழிகாட்டிய கிளைவ் 1760-ல் இங்கிலாந்து திரும்பியவுடன் மீர்ஜாபருக்குப் பதிலாக அவனது உறவினனான மீர்காசிம் நவாபு ஆக்கப்பட்டான். மீர்காசிம் நன்முறையில் நிருவாகத்தை நடத்த விரும்பினான். ஆங்கிலேயர் தமக்களிக்கப்பட்ட உரிமைகளைத் தவறான வழிகளில் உப யோகித்தனர். பர்துவான், மிதுனபுரி, சிட்டகாங் முதலிய ஜில்லாக்களை மீர் காசிம் ஆங்கிலக் கம்பெனிக் களித்தான். விரைவில் மீர்காசிமுக்கும் ஆங்கிலக் கம் பெனிக்கும் சச்சரவேற்பட்டுப் போர்மூண்டது. மீர் காசிம் கெரியா, உட்வானுல்லா (1763) ஆகிய இடங்களில் தோற்று, வங்காளத்தை விட்டோடி, அயோத்தி (Oudh) இராச்சியத்தில் அடைக்கலம் புகுந் தான். அயோத்தி நவாபு ஷூஜா உத்-தௌலா, மொகலாயச் சக்கரவர்த்தி II-ம் ஷா ஆலம், மீர் காசிம் மூவரும் சேர்ந்து ஆங்கிலேயருக் கெதிராகப் போர் துவக்கினர். 1764-ல் நிகழ்ந்த பக்சார் சண்டையில் மூவரும் படுதோல்வியுற்றனர். இச்சமயம் இரண் டாம் தடவையாகக் கிளைவ் கவர்னராக நியமிக்கப் பெற்றுக் கல்கத்தா வந்துசேர்ந்தான். அவன் அயோத்தி நவாப்புடனும் மொகலாயச் சக்கவர்த்தியோடும் 1765-ல் அலகாபாத் உடன்படிக்கைகள் செய்துகொண்டான். சக்கரவர்த்தி வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் வரி வசூலிக்கும் உரிமையாகிய திவானி-