பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகு

36

அஞ்சிலாந்தை மகனார்

பரப்பை மதிப்பிடலாம். வடமேற்கே பஞ்சாபில் மான்சேரா, ஷாபாஜ்காரி என்ற இடங்கள், மேற்கே கத்தியவார் தீபகற்பத்தில் ஜுனகத் நகரம், தெற்கில் மைசூர், அனந்தபூர் ஜில்லா, ஆகியவை அவன் இராச்சியத்தின் எல்லைகனாயிருந்தன.

கலிங்கப்போருக்குப்பின் அசோகன் பௌத்த சங்கத்தின் கொள்கைகளைக் கையாண்டு இவ்வாழ்க்கையை விட்டுவிடாமல் சங்கத்துக்குத் தொண்டுபுரிந்து வந்தான். புத்தரின் வரலாற்றை ஒட்டிய புண்ணியத் தலங்கலைத் தரிசித்து வந்தான். இதைக் கல்வெட்டுக்களில் தன்மயாத்திரை என்ற குறத்திருப்பதைக் காண்கிறோம். புத்தர் அவதரித்த இடமான லும்பினித் தோட்டத்தில் அசோகனால் நிறுத்தப்பட்ட கல்வெட்டையுடைய ஒரு தூணைக் காணலாம். தன் அதிகாரிகளூம் தன்னைப்போல அறத்தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆணையிட்டுத் தன் ஆணையைப் பல இடங்களில் பாறையிலும் கல் தூன்களிலும் பொறிக்கும்படியும் ஏற்பாடு செய்தான்.

இக்கல்வெட்டுக்களின் மூலம் அசோகனின் ஆட்சி முறை ஒருவாறு தெளிவாகிறது. சாலைகலைல்லாவற்றிலும் பல இடங்களில் கிணறுகள் வெட்டி, மரங்கள் வைத்து யாத்திரிகளுக்கும் அவர்கள் மாடு குதிரை முதலிய வாகனங்களூக்கும் வைத்திய வசதியயும் ஏற்படுத்தினன். பண்டிகைக் காலம் தவிர மற்றச் சமையங்களீல் உணவிற்காப் பிராணிகளைக் கொல்வதைத் தடுத்தான். எல்லாச் சமயத்தினர்களிடமும் பரஸ்பர அன்பு இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினன். அரசு வமிசத்தினர் வேட்டையாடுவதை நிறுத்திச் சாது சங்கங்கள் கூட்டவும் ஏற்பாடு செய்தான்.

பௌத்தசமயத்திற்கு அசோகன் செய்த தொண்டு மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுகின்றது. புத்தரின் அடையாளங்களை 8400 தூபங்களில் பிரதிஷ்டை செய்தான். அவனுடைய ஆதரவில் மூன்றவது பௌத்த மகாசங்கம் கூடிற்று. மொக்கனி புத்ததிஸ்ஸ என்ற பெரியார் தலைமை வாகித்தார். அசோகனின் குரு மதுரா நகரத்திலுள்ள உபகுப்தர் என்னும் பெரியார். அசோகன் இந்திய நாடெங்கும் பௌத்த பீக்குதக்களை அனுப்பி ஆங்காங்கே தர்ம்ப் பிரசாரத்தைச் செய்யும்படி ஏற்பாடு செய்தான். விதிசா நாட்டில் பிறந்த தேவி என்பவளிடம் அசோகனுக்குப் பிறந்த மகேந்திரனும், அவனுடைய தங்கை சங்கமித்திரையும் துறவு பூண்டு இலங்கைகுச் சென்ற, அந்நாட்டின் அரசனைப் பௌத்த சமயத்தை தழும்படி செய்து, அத்தீவில் அச்சமையத்தைத் தாபித்ததாக்த் தெரிகிறது. இவன் காலத்தில் கீழ்நாடுகளிளும் இந்த சமையம் பரவிற்று என்று தெரிகிறது. சங்கத்தில் பிளவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி. அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தேவானாம்பிரிய பிரியதரிசி என்ற பெயருடன் பல கல்வெட்டுகளைப் பொறித்த அசோக மன்னன் 37 ஆண்டுகள் ஆட்சி புரிந்து கி.மு.233ல் இறந்தான். நம் நாட்டின் ஒரு பகுதியில் வழங்கிவந்த பௌத்த சமையத்தை உலகச் சமையங்களில் ஒன்றாக் செய்த பெருமை அசோகனுடையது. அரசியலின் நோக்கம் அறமே என்பதைக் கையாண்டுவந்த அசோகன் வரலாற்றிலேயே ஒருவகையில் இனையற்றவன் என்ற சிறப்பைப் பெற்றவன். கூ. ரா. வே

அசோகு (பிண்டி,செயலை) நேர்த்தியான நிழல் மரம், மஞ்சள், கிச்சலி, சிவப்புநிறப் பூக்கள் செண்டுச் செண்டாகப் பூத்திருக்கும்போது மிகவும் அழகாக தோன்றும். இது 20-30 அடி உயரம் வளரும். பூக்கள் மணமுள்ளவை. இலைக்கக்த்தில் பல பூக்கள் அடர்த்தியாகச் செறிந்து சமதனமஞ்சளியாக இருக்கும். மஞ்சரி செண்டுபோலத் தெரியும்.

அசோகு
1. கிளையும் பூங்கொத்தும்
2. காய்

புல்லி முதலில் மஞ்சள், பிறகு கிச்சிலி, கடைசியில் சிவப்பாக மாறும். இந்தப் பூவில் அல்லியில்லை. சூல்தண்டு வளையம் போலச் சுருண்டிருக்கும், கனி, தட்டையான சிம்பை (legume). இந்த மரம் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் சாதாரணமாக வளர்கிறது. இதைத்தோட்டங்களில் வைத்து அழகுக்காக வளர்கிறார்கள். புத்த தேவருக்கு அரசமரம் போல் ஜீனதேவருக்கு அசோகு பவித்திரமானது. இது பெண்கள் கால் உதை பட்டால் மலரும் என்பது கவி சமயம். இதன் பட்டை நாட்டு மருந்துக்கு பயன்படுவது.

குடும்பம்:லெகியூமினேசீ (leguminoseae).
உட்குடும்பம்: சீசால்பினய்டீ (caesalpinoideae)
இனம்: சாரக்கா இண்டிக்கா (saraca Indica).
நெட்டிலிங்க மரத்தையும் அசோகமரம் என்று சொல்வதுண்டு. பார்க்க: நெட்டிலிங்கம்.

அஞ்சனை : 1. குஞ்சரன் என்னும் வானரவீரன் மகள். கேசரி என்னும் வானர வீரனை மணந்தவன். அனுமானின் தாய்.
2.வடதிசையிலிருக்கும் பெண் யாணை.

அஞ்சி அதியமான் நெடுமான் அஞ்சி எனவும் பெயர் பெறுவான். அதிபர் மரபினனாதலால் அதியமான் என்று பெயர் பெற்றான். கொல்லிக் கூற்றத்திலிருந்த தகடூரில் அரசாண்டான். குதிரை மலைக்குத் தலைவன். கரும்பை வேற்று நாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வந்தவர் இவன் முன்னேரே. இவன் பரணராலும் ஔவையாராலும் புகழ்ந்து பாடப்பெற்றவன். நீண்ட காலம் உயிருடன் இருக்கச் செய்யும் நெல்லிக்கனியைப் பெற்றும் தானுண்ணுது ஔவையாருக்குத் கொடுத்தவன். பெருஞ்சேரலிரும் பொறையுடன் நடந்த போரில் பகைவருடைய வேல் பாய அதன லிறந்தான். ஔவையார் புலம்பி அமுத பாடல் மிகுந்த சோகச்சுடையது. இவன் வமிசம் 13-அம் நூற்றாண்டு வரை இருந்ததாக விடுகாதழகிய பெருமான் சாசனம் ஒன்றில் புலப்படுகிறது என்பர்.

அஞ்சிலஞ்சியார்: சங்ககாலப் புலவர், அஞ்சில் என்னும் ஊரிலிருந்தவர்(நற்:90).

அஞ்சிலாந்தை மகனார்: சங்ககாலப் புலவர். அஞ்சில் ஆந்தை மகள் நாகையார் எனவும் அஞ்சி அத்தை மகள் நாகையார் எனவும் பெண்பாலாகவும் இவர் கூறப்படுகிறர். அதியமான் அஞ்சியை அக-