பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/715

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

650

இந்தியா

வமிசத்து முதலரசன் பட்டாரக தேவவர்மன்; இவ்வமிசத்து அரசர்கள் பின்வருமாறு:

           ஹஸ்திவர்மன் I (350) 
                    ︱
            நந்திவர்மன் I (375)
                    │
    ┌───────────────┴────────────┐
    │                            │
ஹஸ்திவர்மன்         II சண்ட வர்மன் (400) 
    │                            │  
 ஸ்கந்தவர்மன்         நந்திவர்மன் II (440) 
                      

                                  

பல்லவருக்குப் போலவே சாலங்காயனருக்கும் ரிஷபமே இலச்சினையாக இருந்தது.

சாலங்காயனருக்குப்பின் தெலுங்கு தேசத்தில் விஷ்ணுகுண்டி வமிசத்து அரசர் ஆண்டனர், இவ் வமிசத்தைத் தாபித்தவன் மாதவவர்மன் (கி. பி. 470-90). பதினோர் அசுவமேத யாகங்களும் எண்ணிறந்த அக்னிஷ்டோமங்களும் புரிந்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன. இவன் சந்ததியில் வந்த III-ம் மாதவவர்மனையும் குறித்து இதே மாதிரி கூறப்படுகிறதால் இது எவ்வளவு தூரம் உண்மையென்று ஐயுற இடமுண்டு. I-ம் மாதவவர்மன் இராணி வாகாடக வமிசத்தவள், அவன் பேரன் இந்திரபட்டாரகன் (510-540) தன் தாயாதி II-ம் மாதவவர்மனுடன் போர்புரிந்து, கடைசியில் சமாதானம் செய்துகொண்டு, அவன் நாட்டின் ஒரு பகுதியைத் 'திரிகூட, மலயாதிபதி' என்னும் பட்டத்துடன் ஆளச் சம்மதித்தான். கலிங்க நாட்டின் தென்பாதியைத் தன் வயமாக்குவதற்காகக் கலிங்க அரசன் இந்திரவர்மனோடு போர் தொடுத்தான். ஜனானயன் என்று பட்டம் பெற்ற II-ம் மாதவ வர்மனோ (586-616) மிகவும் புகழ்பெற்றவன். அவனும் கோதாவரியைக் கடந்து கலிங்க அரசனுடன் போர் புரிந்தான்.

கி. பி. 4, 5ஆம் நூற்றாண்டுகளில் பேராரிலும் மத்தியப் பிரதேசத்திலும் வாகாடக வமிச அரசர்கள் பிரபலமாக ஆண்டுவந்தனர். அவர்களுக்குக் குப்தர், விஷ்ணுகுண்டிகள், கதம்பர் முதலிய அரச வமிசத் தினருடன் மணத்தொடர்புகள் உண்டு. அவர்கள் ஆதரவின் கீழ் அஜந்தா குகைக் கோயில்கள் பல அமைக்கப் பட்டு, அவற்றிலுள்ள ஓவியங்களில் பல தீட்டப்பட்டன. சாதவாகனரும் க்ஷத்ரபரும் வலி குன்றிய பின் அவர்கள் தலையெடுத்தனர். அவன் தலைநகர் புரிகா எனப்பட்ட நகர்; அவன் ஆட்சி விந்திய மலைக்கு அப்பால் விதிசாவரையிலும் பரவியது. அவன் மகன் 1-ம் பிரவரசேனன் (280-340) பிரபலமான சக்கரவர்த்தி. அவன் நாலா பக்கத்திலும் நாடுகளை வென்று தன்னுடைய நான்கு குமாரர்களையும் தனக்குப் பிரதிநிதிகளாக ஆள அனுப்பினான். அவனுடைய ஆட்சிக்குள் மத்தியப் பிரதேசமும் க்ஷத்ரப நாடுகளும் அடங்கியிருந் தன. அவன் பேரன் 1-ம்ருத்ரசேனன் (340-65) ஆட்சியில் அவனுக்கும் அவன் சிற்றப்பன்மாருக்கும் கலகங்கள் ஏற்பட்டன, தன் தாய்ப்பாட்டனாகிய பத்மாவதியில் ஆண்ட நாகஅரசன் பவநாகன் உதவியைக் கொண்டு ருத்ரசேனன் இரண்டு சிற்றப்பன்மாரைத் தோல்வியுறச் செய்தான். ஆனால் சர்வசேனன் என்ற மற்றொரு சிற்றப்பன் வத்சகுலம் நகரத்தில் (தற்காலத்து பாசிம்) ஒரு தனியாட்சியேற்படுத்தித் தன் சந்ததியாருக்களித்தான். ருத்ரசேனன் மகன் I-ம் பிருதிவிசேனனும் (365-90) சர்வசேனன் மகன் விந்தியசேனன் அல்லது II-ம் விந்தியசக்தியும் சேர்ந்து குந்தள தேசத்தை வென்றுகொண்டனர். I-ம் பிருதிவிசேனன் மகன் II-ம் ருத்ரசேனன் குப்த அரசனான II-ம் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்தன் மகள் பிரபாவதி குப்தா என்பவளை மணந்தான். அவன் ஐந்து ஆண்டுக் காலமே ஆண்டு இறந்தபின் அவன் மனைவி பிரபாவதி தன் சிறு மக்கள் சார்பில் இராச்சியம் ஆண்டுவந்தாள். அக்காலத்தில் அவள் கூர்ஜர நாட்டை வெல்லத் தன் தகப்பனுக்கு உதவியாக விருந்தாள். அவள் முதல் மகன் சிறு பிராயத்தில் இறந்தான் ; இரண்டாம் மகன் தாமோதரசேனன் அல்லது 11-ம் பிரவரசேனன் கி. பி. 410-ல் வயது வந்ததும் இராச்சியத்தை ஆளத் தொடங்கி, 23 ஆண்டு நன்கு ஆண்டான். அவன் பிரவரபுரமென்ற ஒரு புதிய தலைநகரை நிருமித்தான். அவனுடைய முதல் தலைநகரம் ராம்டேகுவுக்கு அருகிலுள்ள நந்திவர்த்தனம். அவன் மகன் நரேந்திர சேனன் கதம்ப வமிசத்து அஜிதபட்டாரிகையை மணந்தான். குப்தர் ஆதிக்கம் ஹூணரின் தொந்தரவுகளால் குன்றியிருப்பதைக் கண்ட அவன் மாளவம், மேகலை, தென்கோசலம் முதலிய நாடுகளைத் தன் வயமாக்கிக் கொண்டான். அவன் மகன் II-ம் பிருதிவிசேனனே இவ்வமிசத்துக் கடைசி அரசன். அவன் இருமுறை நளவமிச அரசருடனும் தென் கூர்ஜரத்துத் திரைகூடகருடனும் போர்புரிந்து நாட்டைக் காப்பாற்றினான். அவனுக்குப்பின் பாசிம் கிளையைச் சேர்ந்த ஹரிசேனன் (480-515) வாகாடக நாடுகள் முழுமைக்கும் அரசனான். அவனே அவ்வரசரில் மிகவும் பராக்கிரமசாலி, அவன் காலத்தில் வாகாடக இராச்சியம் கூர்ஜரம், மாளவம், தென்கோசலம், குந்தலம், பேரார், மத்தியப் பிரதேசம், ஐதராபாத்தின் வடபாகம் ஆகிய நாடுகளெல்லாம் அடங்கி, முதல் பிரவரசேனன் காலத்தினும் மிகவும் பெரிதாக இருந்தது. அவன் மகள் ஒருத்தி விஷ்ணு குண்டி அரசன் முதல் மா தவவர்மனுடைய இராணி யானாள். கி. பி. 515-550-ல் வாகாடக ஆதிக்கம் குன் றிற்று. மாளவத்தில் யசோதர்மனும், மற்ற இடங் களில் சோம வமிச அரசரும் (கோசலம்), கதம்பரும் (தென் மகாராஷ்டிரம்) காலசூரிகளும் (வட மகாராஷ் டிரம்) தலையெடுத்தனர். கடைசியாகப் பாதாமிச்சாளுக் கியரும் தோன்றினர் (550).

தட்சிணத்தின் தென்மேற்குப் பாகத்தில் கி: பி. நான்காம் நூற்றாண்டின் மத்தியில் கதம்பர் முன்னேறியது, சமுத்திரகுப்தன் படையெழுச்சியால் பல்லவ ஆதிக்கம் நிலைகுலைந்த காரணம் பற்றியேயிருக்கலாம். கதம்ப சாசனங்கள் முதலில் பிராகிருதத்திலும், பிறகு வட மொழியிலும் வரையப்பட்டிருக்கின்றன. அவர்கள் கடம்ப மரத்தைப் போற்றி வளர்த்ததால் அவர்களுக்குக் கதம்பரென்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர். அவர்கள் முருகக் கடவுளை வணங்கி வந்தனர். கடம்ப மரம் முருகனுக்கேற்ற தென்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வமிசம் ஆரம்பித்த வரலாறு பின்வருமாறு : மயூர சர்மன் என்பவன் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு (கி. பி. 345) அந்நாட்டை ஆளத் தொடங்கினான். காகுத்தவர்மன் என்பான் இவ்வமிசத்தில் ஒரு பெரிய அரசன், அவன் மகளிரைக் குப்த வாகாடகக் கங்க வமிசத்து அரச குமாரர்கள் மணந்தனர். அவன் மகன் சாந்திவர்மனுக்குப் (450-75) பல்லவரால் தீங்கு விளைந்தது. அப்பல்லவர்கள் காஞ்சி அரசரல்லர்; வேறொரு கிளையினர். அப்போது அவன் தன் இராச்சியத்தை இரு பகுதிகளாக்கித் தென்பாதியை அவன் தம்பி I-ம் கிருஷ்ணவர்மனுடைய ஆதிக்கத்தில் வைத்தான். கிருஷ்ணவர்மன்' பல்லவருடன் செய்த போரில் உயிரிழந்தான். அவன் மகன் விஷ்ணுவர்மனும் பகைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டிவந்தது. சாந்திவர்மன்