பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட்வொக்கேட்டு ஜெனரல்

41

அடக்கல்

கள் மற்ற உயர்நீதி மன்றங்களிலும் அட்வொக்கேட்டுக்களாக ஆகலாம். அட்வகேட்டுகள் மேன்மையும், கௌரவமும் உடைய தொழிலினராகக் கருதப்படுகிறார்கள். ஓர் அட்வொக்கேட்டு தொழில் முறையில் தவறாய் நடந்துகொண்டால் அது வழக்கறிஞர் சபையின் உறுப்பினர்களால் நேர்ர்தெடுக்கப்பட்ட விசாரணை மன்றத்தால் முதலில் விசாரிக்கப்படும். பிறகு அவர்களுடைய ஆறிக்கையை உயர்நீதி மன்றம் ஆராய்ந்து தீர்மானிக்கும். உயர்நீதி மன்றத்தின் தீர்மானப்படி தவறாக நடந்துகொண்ட அட்வொக்கேட்டின் பொயர் அட்வெக்கேட்டுப் பதிவுப் பட்டியிலிருந்து நீக்கப்படும்.

ஒரு நீதிமன்றத்தின் அட்வோக்கேட்டுக்கு அந்த நீதிமன்றத்திலும், அந்த நீதிமன்றத்தின் கீழ்பட்ட கோர்ட்டுகளிலும் அல்லாமல் வேறு இராச்சியத்தில் உள்ள உயர்நீதி மன்றத்திற்குக் கீழ்ப்பட்ட எல்லாக் கோர்ட்டுகளிலும் அட்வெக்கேட்டு முறையில் தொழில் செய்ய அதிகாரம் உண்டு. குறிப்பிட்ட சில ஆண்டுகள் இராச்சியத்தில் அட்வெக்கேட்டாக அனுபவம் பெற்ற பிறகு அவர் உச்சநீதி மன்றத்தில் (Supreme Court) அட்வெக்கேட்டாகப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவுசெய்து கொண்டால் அப்படிப்பட்டவர் இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் அங்கே அட்வெக்கேட்டாகப் பதிவு செய்திருந்தாலும் செய்யாவிட்டாலும் அட்வொக்கேட்டுகள் ஆஜராக அதிகாரம் உண்டு. அட்வெக்கேட்டுகள் அகௌரவமான அவ்வது இழிவான வேலைகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். ஏ. என். வி.

அட்வொக்கேட்டு ஜெனரல் (Advocate General) : இவர் இங்கிலாத்தில் உள்ள அட்டார்னிக் ஜெனரல் என்பவருக்குச் சமமானவர். இவர் வழக்கறிஞர் கூட்டத்துக்குத் தலைமையானவருமான பிரதமச் சட்ட அதிகாரி (Chief Law Officer) ஆவர். உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்குத் தகுதியுள்ள ஒருவரை அட்வொக்கேட்டு ஜெனரவாகக் கவர்னர் தேர்த்தெடுக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புக் கூறுகிறது. சட்ட சம்பந்தப்பட்டவையும், கவர்னரால் குறிக்கப்பட்டவையுமான விவங்களில் அவர் தம் ஆலோசனைவைக் கூறக் கடமைப்பட்டவர். சட்டங்களை அல்லது விதிகளை எற்படுத்துவதிலும் இன்னும் வேறு முக்கியமான விஷயங்களிலும் சர்க்கார் அவருடைய ஆலோசயைப் பெறுவர் சர்க்கார் வக்கீல் (State Pleader). சர்க்கார் பிராசிகியூடர் போன்றவர்களும் முக்கியமான விஷயங்களில் அட்வெக்கெட்டு ஜெனரலின் ஆலேசனையைக் கேட்டுக் கொள்வார்கள். இந்திய அரசியல் அமைப்பின் 926-வது பிரிவின்படி தாக்கல் செய்யப்படும் மனுக்களிலும், அஜராகுமாறு அரசாங்கம் கூறும். உயர் நீதிமன்றத்தின் முக்கியமான செஷன்ஸ் கேசுகளிலும், உச்ச நீதிமன்றத்திலும் (Supreme Court) உயர் நீதிமன்றத்திலும் நடக்கும் முக்கியமான விசாரனைகளிலும் அரசாங்கத்துக்காக அஜராவார்; அரசாங்கம் கேட்டுக் கொண்டால் தேர்தல் கமிஷன் முன்பு நடக்கும் நடவடிக்கைகளில் கலந்து கொள்வார்; அட்வொக்கேட்டுகளின் தவறான நடத்தையைப் பற்றி விசாரணைகளில் உயர்நீதி மன்றத்தார்க்கு ஆலோசனை கூறி உதவுவார். அவருடைய பதவி கவர்னருடைய விருப்பத்தைப் பொறுத்தது. அவருடைய ஊதியத்தைக் கவர்னர் தீர்மானிப்பார். தற்சமயம் அவருடைவ மாத ஊதியம் 1500 ரூபாய். அது தவிர அவர் ஆஜராகும் முக்கிய விசாரணைகளுக்காக அவர் தனியாகப் பெறவேண்டிய ஊதியவிகிதமும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இராச்சியச் சட்டசபையின் இரு சபைகளிலும் கலந்து கொள்வதற்கும் பேசுவதற்கும் அவருக்கு அதிகாரமுண்டு, ஆனால் வாக்குரிமை இல்லை. வக்கீல் சபையில் அவர் உறுப்பினராவர்; சென்னை இராச்சியத்தில் அதன் அக்கிராசனரும் ஆவார். தனிப்பட்ட நஷ்டம் உண்டாகாத பொது மக்கள் தொல்லை (Public nuisance) பற்றிய வழக்குக்களையும், இந்து பரிபாலனச் சட்டப்படியுள்ள தரும ஸ்தாபனய்கள் தவிர ஏளைய தரும ஸ்தாபனங்களில் நம்பிக்கைத் துரோகமாக கடக்கும் தருமகர்த்தாக்களை நீக்குவதற்கான வழக்குக்களையும் அட்வகேட்டு ஜெனரலும் அவருடைய உத்தரவு பெற்றவர்களும்தான் தாக்கல் செய்யலாம். சர்க்காரின் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு உயர் நீதிமன்றத்தில் அதன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அவருக்கு அதிகாரமுண்டு; உயர் நீதிமன்றத்தில் நடக்கும் செஷன் விசாரணைகளில் பஞ்சாயத்தார் (Jury) தீர்மானம் கொடுப்பதற்குமுன், அங்கு நடக்கும் விசாரணை நிறுத்தப்படவேண்டும் என்று எந்தச் சமயத்திலும் சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. அவர் அவ்வாறு சொன்னமாத்திரத்தில் விசாரணை உடனே நிறுத்தப்பட்டுப் பிரதிவாதி விடுதலை செய்யப்படுவார். இராச்சியத்திற்கு அட்வோக்கேட்டு ஜெனரல் இருப்பது போல இந்தியா முழுமைக்கும் ஓர் அட்டார்னி ஜெனரவ் (த.க.) நியமிக்கப்படுவார். ஏ. என். வி.

அடக்கல் (Repression) : இரண்டு இயல்பூக்கங்களுக்கிடையே நம் மனத்திலே உண்டாகும் போராட்டத்தின் விளைவே அடக்கல் என்பது. அச்சம் ஓர் இயல்பூக்கம்; விடுப்பு (Curiosity) மற்றென்று. விடுப்பினால் ஒன்றை அறிய ஆசைப்படுகிறேம். அனால் அதனால் என்ன தீங்கு ஏற்படுமோ என்ற அச்சம் தடுக்கிறது. இவ்விரு இயல்பூக்கங்களுக்கிடையில் எழும் போராட்டத்தால் அடக்கல் விளைகின்றது. இடல்பூக்க உள்தூண்டல்களில் போராட்டம் நிகழம்போது அறிவுச் சக்தி அல்லது அறவுணர்ச்சிச் சக்தி செலவாகின்றது. அது மோட்டார் வண்டியின் பொறியை ஓடும்படி செய்யும் சமயத்திலேயே முட்டுப் போட்டு ஓட வொட்டாமல் தடுப்பது போன்றதாகும்.

அடக்கல் என்பதை இங்கு நாம்பிராய்டு (Freud) என்னும் அறிஞர் கூறும் பொருணிலேயே கூறுகிறேம். நாகரீக மக்கள் தங்கள் நாகரீகத்தைப் பாதுகாப்பகற்காகச் செய்யும் பெருஞ் செலவை பிராய்டு தம்முடைய நூல்கள் அனைத்திலும் கூறுகிறார். அந்தச் செலவு யாதெனில் மக்கள் தம் விருப்பப்படி யெல்லாம் நடந்து கொள்வதைத் தடுப்பதேயாகும். இப்போராட்டங்களுள் ஒருவனுடைய சொந்த அசைகளுக்கும் சமுதாயம் வருத்துள்ள நடத்தை முறைக்கும் ஏற்படும் போராட்டமும், ஒருவனுடைய இயல்பூக்க ஆசைகளுக்கும் நேர்மையையும் நல்லொழுக்கத்தையும் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவன் கொண்டுள்ள உணர்ச்சிக்கும் இடைவே ஏற்படும் போராட்டமும் மிக முக்கியமானவை. முதற் போராட்டம் சமுதாயக் கவலையையும், மற்றது அறவுணர்ச்சிக் கவலைகளையும் உண்டாக்குகின்றன. இந்த இரண்டு கவலைகளுக்கும் காரணம் சமய பக்தர்கள் மனச்சான்று என்று கூறும் அந்த சுகமே (Super Ego) என்று பிராய்டு கருதுகிறார். அதீத அகம் வளர்வது சிசுப் பருவத்திலுள்ள

பலக் குறைவினால்தான். சிறு குழந்தை தன்தேவையைக்

6