பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அடிப்படை உரிமைகள் இரண்டு சீர்கொண்டு முடிவு பெற்று நிற்கும் அடி குறள்அடி எனப்படும். மற்றைய அடிகளை நோக்க இது குறுமையுடையது. ஆதலால் இது குறளடி எனப்பட்டது. மூன்று சீர் கொண்டு முடிவு பெற்று நிற்கும் அடி சிந்தடி ஆகும். சிந்து குறளினும் சிறிது நெடியது. நான்கு சீர் கொண்டு முடிவுபெற்று நிற்கும் அடி அளவடி ஆகும். இதனை நேர் அடி என்றும் கூறுவர். குறுகுதலும் நெடுகுதலும் இன்றி, அளவுபட்டு நிற்ற லால் நேர் அடி ஆயிற்று. பெரிதும் நான்கு சீர் கொண்ட பாடல்களே சங்க நூல்களில் காணக்கிடத்த லின் நேர் அடி என்று கூறப்படுவதாயிற்று. நேர்- தலைமை ஐந்துசீர் கொண்டு முடிவுபெற்று நிற்கும் அடி தெடில் அடி ஆகும். அளவில் மேற்படலால் நெடில் எனப்பட்டது. சீர்கள் ஐந்தின் மிக்கு நிற்கும் அடிகள் எல்லாம் கழிநெடில் அடி எனப்படும். கழி என்பது மிகுதி என்னும் பொருளது. இவ்வடி, நெடில் அடியினும் நெடுமை உடைமையினால், கழி நெடில் அடி ஆயிற்று. இஃது அறுசீர் அடி, எழுசீர் அடி, எண்சீர் அடி, ஒன்பதுசீர் அடி,பத்துச் சீர் அடி, பதினொரு சீர் அடி முதலாக வரும். தாயுமான சுவாமிகள் பாடல் களின் முதல் பகுதி பதினொரு சீர்கட்கு மேலும் வந்திருப்பதையும் அறிக. இராமலிங்க வள்ளலார் தாம் பாடியுள்ள திருவடிப்புகழ்ச்சி என்னும் பாடலில் ஓர் அடியில் இருநூற்றிருபத்து நான்கு சீர்களை அமைத் துப் பாடி இருப்பதையும் அறியவும். இவை அனைத்தும் கழிநெடிலடியே. ஆனால் இவ்வாறு வருவன அத்துணைச் சிறப்புடையன அல்ல. எண்சீர் அடி வரையில் வரு வனவே சிறப்புடையன. தொல்காப்பியர் கழிநெடி லடிக்கு எழுத்து எண்ணிக்கையைக் குறிப்பிடுகையில் பதினெட்டு முதல் இருபது எழுத்துக்களைத்தான் கூறியுள்ளனர். பா. க. மு. அடிப்படை உரிமைகள் அவ் உள்ள அடிப்படையுரிமைகள் பெரும்பாலும் அரசாங் கத்தாரின் அதிகார ஆக்கிரமிப்பைத் தடுப் பதற்கும் குறைப்பதற்கும் பயன்படுவன. வுரிமைகளை அரசாங்கமோ, அரசாங்க அதிகாரிகளோ ரத்து செய்யவும், மாற்றவும் குறைக்கவும் முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஏற் பட்டுள்ள 368ஆம் பிரிவுப்படி - அதாவது பார்லி மென்டு சபைகளிரண்டில் ஒவ்வொன்றிலும் மொத்த உறுப்பினர்களில் பாதிப்பேருக்குக் குறையா மலும், மேலும் சம்பந்தப்பட்ட சபைக் கூட்டங்களில் வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களுக்குக் குறையாமலும் வாக்களித் துச் சட்டம் செய்தால்தான் அடிப்படை உரிமைகளைத் திருத்தவும், மாற்றவும், ரத்து செய்யவும் முடியும். அடிப்படை உரிமைகளுக்கு மாறாக எந்தச் சட்டமும் எந்த நிருவாக ஆணையும் இயற்றக் கூடாது. இயற்றி னால் செல்லாது. ஒருவருக்கொருவர் பல விதங்களில் வேறுபடுகிறார் 1. சமத்துவ உரிமை : மனிதர் பிறவியிலேயே கள். சட்டங்களால் அவர்களைச் சமமாக்க முடியாது. ஆயினும் சட்டங்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக் குள் சமத்துவத்தை உண்டாக்கலாம். எல்லா மனி தர்களுக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரேமாதிரியான அவரவர்கள் தன்மைக்கேற்ப நியாயமாகப் பாகுபாடு சட்ட மிருக்க முடியாது. ஆதலால், மனிதர்களை செய்து, அவ்வப் பகுதிகளிலிருக்கும் மனிதர்களைச் சட்டத்தின் இலக்கணமாகும். ஒரே பகுதியிலடங்கிய சமமாகக் கட்டுப்படுத்துவதே சமத்துவ உரிமைச் குடிமக்களுக்குள், சிலருக்கு மட்டும் சலுகைகளோ, இடைஞ்சல்களோ இருக்கக்கூடாது. இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தில், இத்தகைய சமத்துவ உரிமை அளிக்கப்பட்டுள்ளது. (Race), சாதி, ஆண், பெண், பிறப்பிடம் முதலிய வேறு முக்கியமாக மதம், இனம் பாடுகளைக் கொண்டு, பொது இடங்களிலும் பொது நிறுவனங்களிலும் நுழையும் விஷயத்திலும், அவை அடிப்படை உரிமைகள்: உலகி களை அனுபவிக்கும் விஷயத்திலும், வேறுபாடு செய் லுள்ள எல்லா நாடுகளிலும் குடிமக்களுக்கு அடிப் அவர்கள் வசதிக்காகத் தனி ஏற்பாடுகளைச் செய்ய யக்கூடாது.ஆனால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன (பார்க்க: அடிப்படை உரிமைகள், 1 - 46,). அடிப்படை உரிமை லாம். மேற்சொன்ன மதம் முதலிய காரணங்களாலும், களின் தன்மை நாட்டுக்கு இருப்பிடம் வேறுபட்டிருந்த போதிலும், பொதுவாகக் குடிமக்கள் அனைவரையும் ஏற்றத்தாழ்வின்றிச் சரிசமமாக அரசாங்கம் நடத்த வேண்டும் என்பதும், தனி மனிதனின் உயிர், உடல், பொருள் ஆகியவற்றுக்குத் தக்க பாதுகாப்பை ஏற் படுத்திக் கொடுக்கவேண்டும் என்பதும் எல்லா நாடு களிலும் நிலவும் அடிப்படை உரிமைகளின் ஆதாரக் கொள்கைகளாக அமைந்துள்ளன. நாடு

இந்தியாவில் அடிப்படை உரிமைகள் : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், 12 முதல் 35 வரையிலுள்ள பிரிவுகள் அடிப்படையுரிமைகளை விவரிக்கின்றன. அவ்வுரிமைகளை ஆறு தலைப்புகளாக வகுக்கலாம். அவையாவன : 1. சமத்துவ உரிமை (Right of Equality) பிரிவுகள் 14-18 2. சுதந்திர உரிமை (Right of Freedom) 3. மத உரிமை (Right to Religion) 4.கல்வி, பண்பாட்டுரிமை (Educational and Cultural Rights) 5. செரத்துரிமை (Right to Property) 6. உரிமைகளைப் பாதுகாக்கும் உரிமை (Right to Constitutional Remcdies) "" 29 19-24 25-28 29-30 ,, 19 (1) (f) 31, 81A, 31Ŕ 82-35 என்ற காரணத்தாலும் எந்தக் குடி மகனும் அரசாங்க வேலைக்குத் தகுதியற்றவனாகான். மதம், இனம், சாதி, மொழி இவை காரணமாகக் குடிமக்கள் எவருக்கும் கல்வி நிலையங்களில் இடம் மறுக்கப்படக்கூடாது. ஆனால் பின்தங்கிய வகுப்பின ரையும் தபசில் சாதியினரையும் (Scheduled Castes முன்னுக்குக் கொண்டுவருவதற்காக அவர்களுக்கு நியாயமான சலுகைகள் வழங்கச் சட்டங்களைச் செய்ய. லாம். தீண்டாமை என்ற கொள்கை ரத்து செய்யப் பட்டுள்ளது. அதை மேற்கொள்ளுதல் மனிதருக்குள் சட்டம் ஏற்றத்தாழ்வு செய்யக்கூடா குற்றம். தாகையால், அரசாங்கம் ராணுவப் கல்வியறிவுப் பட்டங்களும் தவிர, மற்றப் பட்டங்களை பட்டங்களும், அளிக்கக்கூடாது. எல்லாக் 2. சுதந்திர உரிமைகள்: (1) பேச்சுரிமை குடிமக்களுக்கும் சுதந்திர இந்தியாவில் பேச்சுரிமை உண்டு. பேச்சுரிமையில் எழுத்துரிமை யும் பத்திரிகையுரிமையும் அடங்கும். ஆனால், நாட்டின் பாதுகாப்பு, பிறநாடுகளோடு உறவு, உள் நாட்டுப் பொது அமைதி, ஒழுக்கமரியாதை, நேர்மைப் பண்பு, நீதிமன்றங்களை இழிவுபடுத்தல், அவதூறு, குற்றம் செய்யத் தூண்டல் இவை போன்ற நியாய் மான காரணங்களுக்காகப் பேச்சுரிமையைச் சட்ட மூலமாகக் குறைக்கலாம்.