பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிநயம் விளைவுகளை, அதாவது மெய்ப்பாடுகளை மற்றோர் அபிநயமான 'ஆங்கிக'த்தின் மூலம்தான் காட்ட வேண்டும். 'ஆங்கிகம்' என்ற நான்காம் அபிநயம் மிக முக்கிய மானது. நாடகத்திலே இதற்குத் துணையாய் வாசிக மும், ஆஹார்யமும் இருப்பதால், இதன் முக்கியத்து வம் அவ்வளவு தெரிவதில்லை; நாடகமல்லாத நாட்டி யக்கலையிலோ பொருள் எல்லாமே ஆங்கிக -அபிநயம் மூலம் விளக்கப்படவேண்டும். அங்கங்களால் செய்யப்படுவது ஆங்கிகம். ஆகை யால் பரத மஹரிஷி தம் நாட்டிய சாஸ்திரத்தில் 16 அபிரியும் வகைகளாக வகுத்து, எந்தெந்தச் செய்கையை எந் தெந்த உணர்ச்சியிலோ, கருத்திலோ செய்யவேண் டும் என்றெல்லாம் விரிவாகக் கூறியிருக்கிறார் பரதர் (நாட்டிய சாஸ்திரம், 8, 9ஆம் அத்தியாயங்கள்). அங் கங்களில் மிகவும் முக்கியமானது கை ; கையின் அபி நயத்தையே அபிநயம் என்று பொதுவாகப் பலரும் கருதுவதாலும் பேசும்போதும், உணர்ச்சியின் மூலமும் கைகள் தாமா. இதன் முக்கியத்துவம் புலனாகும். கவேகூட ஏதாவது செயலொன்றைச் செய்து வரு வதை வாழ்க்கையில் பார்க்கலாம். பேச்சில்லாமலும் சில கை நிலைகளைக் கொண்டும் கருத்துகளைச் சிலர் அபிநயம்: இரட்டைக் கை மேல் வரிசை : கர்கடகம், புஷ்பபுடம், சிவலிங்கம் கீழ் வரிசை: சங்கம், பாசம், மத்ஸயம் (மகரம்) ஆங்கிகாபிநயத்தை உடலின் அங்கங்களின் பாகுபாட் டைக் கொண்டு வகுத்துக் கூறுகிறார். ஆங்கிகாபி நயம், 'அங்கம்', 'உபாங்கம்', 'பிரத்தியங்கம்' என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. அங்கங்கள்: தலை, கை, மார்பு, விலாப்பக்கங்கள், இடுப்பு, கால் என்ற ஆறு, உபாங்கங்கள்: கண், புருவம், மூக்கு, உதடு, கன்னம், முகவாய்க்கட்டை என்ற ஆறு. பின் நூல் களில் 'பிரத்தியங்கம்' என்ற மூன்றாம் பிரிவு ஒன்று சொல்லப்படுகிறது. இதில் அடங்கிய உறுப்புகள்: கழுத்து, முழுக்கைகள் (பாஹூ), முதுகு, வயிறு, துடை, கணுக்கால் என்ற ஆறு. மேலும் சிலர் மணிக் கட்டு, முட்டி, குதிக்கால், உள்ளங்கால், கைகால் விரல்கள் என்று மற்ற உறுப்புகளையும் சேர்த்திருக் கின்றனர். ஆக மொத்தம் உடல் உறுப்புகள் எல்லா வற்றின் செய்கைகளால் காட்டப்படுவதும் விளக்கப் படுவதும் ஆங்கிக அபிநயமாகும். மற்றொரு பாகு பாட்டின்படி இந்த ஆங்கிகாபிநயம் மூவகைப்படும்: 'முகஜம்', 'சாரீரம்', 'சேஷ்டாக்ருதம்' என்று. 'முகஜம்' என்பது முகத்தின் உறுப்புகளால் காட்டப் படுவது. சாரீரம் மற்ற உடல் உறுப்புகளால் காட் டப்படுவது. சேஷ்டாக்ருதம் உடல் முழுவதும் செய் யும் நடை முதலிய அசைவுகளால் காட்டப்படுவது. முதலில் சொல்லப்பட்ட தலை முதலிய ஆறு உறுப்புகளில் ஒவ்வொன்றின் செய்கைகளைப் பல என்ற இயற்கையாலும், மௌன நிலையிலும், ஊமையரும் வெளியிடுவர். ஆள்காட்டி விரல் ஸூசி' ஹஸ்தாபிநயம் ; இதை நேரே நிறுத்தி அசைத்தால் அதட்டுவதாகும்; ஒன்றைக் குறித்துக் காட்டினால் சுட்டிக் காட்டுவதாகும்; காதடியில் வைத்துக் கவன மாய் இருந்தால் ஏதோ காதில் ஒலி விழுவதைக் குறிப்பதாகும். மூடிய விரல்களோடு கூடிய கை 'முஷ்டி', இதைக் கொண்டு குத்துவது, ஊன்றுகோலைப் பிடிப்பது முத லியவற்றைக் காட்டலாம். இயற்கையாய் நீட்டிய விரல்களோடு கூடிய தட்டைக்கை 'பதாகம்'; இது கணக்கற்ற பொருள்களில் வரும்; இது எழுத்திலும் மொழியிலும் 'அ'கரம் போன்றது. ஒரு கையின் செய்கையால் எப்படியோ, அப் படியே இரு கைகளாலும் பொருள்களைக் காட்டலாம். ஒரு கை அபிநயம் 'அஸம்யுத-ஹஸ்தம்' எனப்படும்; இருகை அபிநயம் 'ஸம்யுத-ஹஸ்தம்' எனப்படும். ஒற்றைக்கை அபிநயங்கள் 24, இரட்டைக்கை அபிநயங்கள் 18 என்றும், அவற்றைப் பற்றிய விளக் கங்களும் பரதருடைய நாட்டிய சாஸ்திரத்தில் விரி வாகக் கூறப்படுகின்றன. ஒரு பொருளைக் காட்டும் ஹஸ்த - அபிநயத்தை அப்பொருளை நமக்கு உடனே உணர்த்துமாறு அப் பொருளுக்கு உள்ள உருவம், செயல், மற்ற முக்கிய