பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அமனுல்லாகான் சிகரத்தின் இயற்கைத் தோற்றம் சாயுங்கால வேளையில் மிக அழகாக இருக்கும். இச்சிகரத்தில் 13,900 அடி உயரத்தில் 150 அடி அகலமும், 90 அடி உயரமுமுள்ள ஒரு குகை இருக்கின்றது. இது இந்துக் களுடைய முக்கிய புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள பனிக்கட்டி லிங்கமானது சந்திரனுடைய கலைகளுக்கேற்ப சிறியதாகவும், பெரியதாகவும் மாறிக் கொண்டே இருக்கும் என்பர். சிரவண (ஆவணி) மாதப் பவுர்ணமியன்று இந்த லிங்கம் மிகப் பெரிய தாகத் தோற்றமளிக்குமென்று நம்பப்படுகின்றது. சிரவண மாதத்தில் இங்குச் செல்ல விரும்பும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்களும் முதலில் பகல்காம் (Pahalgam) என்னுமிடத்தில் கூடாரமடித் துக்கொண்டு தங்குவர். இங்கிருந்து, வழிக்கு வேண் டிய உணவு வகைகளை வாங்கிக்கொண்டு, 29 மைல் தொலைவிலுள்ள அமர்நாத்திற்கு நடைபாதை மூலம் பயணமாவர். வசதியுள்ளவர்கள் தூக்கும் நாற்காலி, பல்லக்கு, குதிரை முதலியவற்றை வாடகைக்கு அமர்த்திக்கொள்வர். 12 மைல் சென்றதும் சேஷநாகம் (Sheshnag) என்னும் எழில் மிக்க ஏரி வரும். யாத்திரிகர் இங்குத் தங்கி, இளைப்பாறுவர். இங்கிருந்து அமர்நாத் செல் லும் வழியில் ஓடைகளிலுள்ள குளிர்ந்த நீரில் முழுகிச் செல்வர். அவ்வோடைகளுள் பஞ்சதரணி என்பதே மிகப் புனிதமாகக் கருதப்படுகின்றது. அமர்நாத்தை நெருங்க நெருங்க யாத்திரிகர்களின் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டே, கடுங்குளிரையும் பொருட்படுத் தாமல் முன்னேறிச் சென்று, பனிக்கட்டி லிங்கத்தைத் தரிசிப்பார்கள். அமனுல்லாகான் : 1919 முதல் 1929 வரை ஆப்கானிஸ்தானத்தின் அமீராகவும் அரசராக வும் இருந்தவர். ஆப்கானிய அமீரான ஹபிபுல்லா கானின் மூன்றாம் குமாரராக 1892 ஜூன் முதல் நாளன்று பிறந்தார். நசருல்லாகான் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தம் சகோதரரான ஹபி புல்லாகானை 1919 பிப்ரவரி 20-ல் கொலை செய்தார். ஆயினும்,படைகள் அமனுல்லாவையே ஆதரித்ததால் அமனுல்லா அமீர் ஆனார். புதிய அமீர் தம் நாடு சுதந் திரமானதென்று அறிவித்து இந்தியாமீது படை யெடுத்தார் (மே 1919). மூன்றாம் பிரிட்டிஷ் - ஆப்கா னிய சண்டையின் இறுதியில் ஏற்பட்ட உடன் படிக்கை (ஆகஸ்ட் 1919) அமனுல்லாகானுக்கு ஒரு வெற்றியாகும். இதன்படி ஆப்கானிஸ்தான் அரசியல் சுதந்திரமும் வெளிநாட்டுப் பிரச்சினைகளில் தனித் தியங்கும் தகுதியும் பெற்றது. 1924-ல் அமனுல்லா கான் தம்மை அரசர் என்று அறிவித்துக்கொண்டு நாட்டிற்குப் புதிய அரசியல் சட்டம் ஒன்றையும் அளித் தார். ஆப்கானிஸ்தான் மேலைநாடுகளைப் போலவே இயங்கவேண்டும் என்றும், மேலை நாகரிகத்தைப் பேணவேண்டும் என்றும் அமனுல்லா விரும்பினார். அவராட்சி முற்போக்கானது. பெண்ணுரிமை, பெண் கல்வி ஆகியவற்றில் அமனுல்லா குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் செய்தார். இவை மதத் தலைவர் களான முல்லாக்களின் கோபத்திற்குக் காரணமாயின. அவர்களது எதிர்ப்பு ஒரு கலகமாக வெளிப்பட்டது. அதுவே கோஸ்ட் (Khost) கலகம் (மார்ச்சு 1924-ஜன வரி1925) எனப்படும். மேலைநாகரிகத்தைத் தீவிரமாக ஆப்கானிஸ்தானத்தில் பரப்ப அமனுல்லா செய்த முயற்சிகள் மக்களுக்கு அதிருப்தியை விளைவீத்தன். அதனால் 1928ஆம் ஆண்டு ஒரு புரட்சி ஏற்பட்டது. அப்புரட்சி வெற்றிபெறாவிடினும் நாட்டினரின் 19 அமித லாப வரி அதிருப்தி அமனுல்லாவைப் பதவி துறக்கச் செய்தது (ஜனவரி 14, 1929), பதவி துறந்தபின் அமனுல்லா ரோம் சென்றார். 1941-ல் ஜெர்மானியர் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றார். அமனுல்லாகானுக் குப் பிறகு நாதர்ஷா ஆப்கானிஸ்தான ஆட்சியைப் பெற்றார். ந. சு.ம. அமித லாப வரி (Excess profits tax) : ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலுள்ள இலா பம் அளவு மீறிய இலாபம் என்றும், அதன்மீது வரி விதிக்கப்படவேண்டும் என்றும் சிலர் கருதுவர். இக்கருத்துப்படி வரி விதிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. அளவு மீறிய இலாபத்தை நிருணயிப்ப தற்கு முன், அளவுடன் அமைந்த இலாபம் எது என்ப தைக் குறிப்பிடவேண்டும். அதைக் குறிப்பிடுவது எளி தல்ல. அதைச் சிலர் அதிகமாகவும், சிலர் குறைவாக வும் மதிப்பிடுவர். எனவே அளவு மீறிய இலாபத் தைத் திட்டமாகக் கணிக்க முடியாது. மேலும், ஒரு தொழிலில் அதிக இலாபம் ஏற்படுமாயின், அத் தொழிலில் உற்பத்திக் காரணிகள் (Productive தொழில் வளரும். அளவு மீறிய இலாப வரி factors) அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு அத் அதற்கு இடமளிக்காது. ஆகையால் அவ்வரி விரும்பப் படுவதில்லை. அமித லாப வரி அளவு மீறிய இலாப வரி (Tax on excessive profits) அல்ல. அது யுத்த காலத் தில் ஏற்படும் அதிகமான இலாபத்தின்மீது விதிக்கப் படும் வரியாகும். யுத்தம் நடக்கும்போது, அதை யொட்டி அரசாங்கச் செலவுகளும் பொருள்களின் தேவையும் அதிகமாகும். அதன் விளைவாகத் தொழில் களின் இலாபம் பெருகும். இந்த இலாபத்திலிருந்து யுத்தத்திற்கு முன் கிடைத்த இலாபத்தைக் கழித்து அமித லாபம் கணக்கிடப்படும். இந்த அமிதலாபம் யுத்தச் சூழ்நிலையில் விளைந்த இலாபமாகையால் அதன்மீது வரி விதிப்பது நியாயமாகும். எனினும், இதிலும் சில சிக்கல்களுக்கு இடமுண்டு. எடுத்துக் காட்டாக யுத்தகாலத்தில் நிறுவப்பட்ட தொழில் களுக்கு யுத்தத்திற்குமுன் ஏற்பட்ட இலாபம் இல் லாததால், அதைக் கழித்து அத்தொழில்களின் அமித லாபத்தைக் கணக்கிட முடியாது. அவைகளின் மூல தனப் பொருள்களின் பெறுமானத் தொகையையும் அதற்குரிய நியாயமான இலாபத்தையும் கணித்து அந்த இலாபத்திற்குமேல் உபரியாகக் கிடைக்கும் இலாபத்தை அமிதலாபமெனக் கணிக்கலாம். ஆனால் அண்மையில் வாங்கப்படாத மூலதனப் பொருள் களின் பெறுமானத் தொகையையும் அதற்குரிய நியாயமான இலாபத்தையும் கணிப்பது எளிதல்ல. மேலும், இவை அவரவர் கருத்துப்படி கணிக்கப்படும். சில தொழில்களின் இலாபங்களில் அதிக ஏற்ற இறக் கங்கள் (Fluctuations) காணப்படும். யுத்தத்திற்கு முன் அப்படிப்பட்ட ஒரு தொழிலின் இலாபம் இறங்கியிருந்தால், அதன் அமிதலாபம் அதிக மாகவும், மற்றொரு தொழிலின் இலாபம் ஏறி யிருந்தால் அதன் அமிதலாபம் குறைவாகவும் இருக் கும். அமிதலாப வரி முதல் தொழிலில், இரண்டாவது தொழிலிலிருப்பதைவிட, அதிகமாயிருக்கும். இவ்வகை யில் அவ்வரி தொழில்களின் வரி செலுத்தும் சக்திக்கு (Taxable capacity) ஏற்றவாறு அமையாமற் போகும். சுரங்கத் தொழில்கள் யுத்தகாலத்தில் தீவிரமாகப் பொருள் உற்பத்தி செய்வதால் அவைகளுடைய கனி வளங்களின் இருப்பு விரைவில் குறைந்துவரும். அவை களுடைய யுத்தகால இலாபத்தில் ஒரு பகுதி இந்த முதல் இழப்பை ஈடுசெய்வதாகும். அமித லாப வரி யில் இதற்கு ஒரு சலுகையும் காட்டப்படுவதில்லை.