பக்கம்:கலைக்களஞ்சியம் 10.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அரசாங்க வாணிகக்.... முதலீட்டுக் கொள்கை, சமுதாயத்தைக் கட்டுப் படுத்துதல்,கட்டுப்பாடுகளை நிறுவுதல், உரிமைகளைப் பறித்தல் போன்ற செயல்களால் சற்றுக் கடுமையாகக் காணப்பட்டாலும் பாதுகாப்பினை அளிக்கும் தன்மை வாய்ந்தது. முதலீடுகளில் அரசாங்கம் தலையிடுவது ஆயின், தனி மனிதனுக்கோ, தனியார் துறைக்கோ, உரிமைகள் இல்லை. ஏனெனில் இவ்விரு துறைகளும் இணைந்திருக்கின்றன. மக்களாட்சி நாடுகள் அரசாங்க முதலீட்டுக் கொள்கையினை மேற்கொள்வதே சிறந்தது. அந்நாடு களில் தனித்துறை முதலீடு குறைவுபடுமாயின் அரசாங்கம் அதனைச் சரிக்கட்டும். எனவே, பொதுத் துறை (Public Sector) இந்நாடுகளில் மிக அவசியம். இந்த வகையில் இந்தியாவில் பொதுத்துறை பெரும் பணியாற்றி இருக்கிறது. மூன்று எஃகு தொழிற்சாலை கள், பல்வேறு பாசன வசதித் திட்டங்கள், உரப் பொருள் தொழிற்சாலைகள், இவைகள் பொதுத்துறை நிறுவனங்களாகும். தவிர நிதி நிறுவனங்கள், பாங்கு கள், இன்ஷூரன்சு நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளைப் பொதுத்துறை நிருவகித்து வருகிறது. 1961-ல் 60 கோடி ரூபாய் பொதுத்துறை முதலீடாகும். ஆனால் இப்பொழுது (1966) அது பன் மடங்கு அதி கரித்திருக்கிறது. ரூ.688 கோடியை அரசு பொதுத் துறையில் முதலீடு செய்துள்ளது. இது தவிர போக்கு வரத்துச் சாதனங்கள் தேசீய பாதுகாப்பு ஆகியவைகள் போன்ற துறைகளில் செய்துள்ள முத லீட்டினைச் சேர்த்தால் அரசாங்கம் பொதுத் துறை யில் முதலீடு செய்துள்ள தொகை ரூ.1,200 கோடி யாகும். ஆகவே, பொதுத்துறை பொதுநலத்தைப் பெருக்க உறுதுணை எனக் கூறலாம். ஆர்.ர. அரசாங்க வாணிகக் கார்ப்பொ ரேஷன் (State Trading Corporation): பொரு னாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி தேவைப் படும்போது அரசாங்கமே வாணிகத்தை நடத்தி அதிலிருந்து பெறும் இலாபத்தை வளர்ச்சித் திட்டங் களுக்குப் பயன்படுத்துவது சிறப்பானதொரு வழி யாகும். பண்டங்களின்மீது வரி விதித்துப் பெறும் வருவாயைக் காட்டிலும், இவ்வகையான வாணிகத்தின் மூலம் பெறப்படும் வருவாய் விரும்பத்தக்கதாகும். குறிப்பாகப் பணவீக்கத்தின்போது விலைவாசிகள் உயர்ந்து அளிப்பு விலைக்கும், தேவை விலைக்கும் இடையே மிகுந்த வேறுபாடு ஏற்படுகின்றது. இது இலாபமாகச் சிலரிடம் சேருவதை அனுமதிப்பதை விட அரசாங்கமே அதைப் பெறுவது நல்லது. பன்னாட்டு வாணிகத்தில் கட்டுப்பாடற்ற முறையில் தனியார் ஈடுபட்டுப் பன்னாட்டுச் செலாவணியை வளர்ச்சித் திட்டமல்லாத வழிகளில் செலவு செய்யாத படி தடுப்பதற்கும் இது சிறந்த முறையாகும். 1956-ல் இப்படிப்பட்டதொரு பணி புரிவதற்காக அரசாங்க வாணிகக் கார்ப்பொரேஷன் இந்தியாவில் நிறுவப்பெற்றது.நிறுவப்பட்டபோது அதற்கு 5 இலட் சம் ரூபாய் மூலதனமே இருந்தது. 1965-ல் 5 கோடி ரூபாய் மூலதனமாக உயர்ந்தது. முக்கியமாகப் பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபடுவதற்காக இது நிறுவப் பெற்றது. தனது சொந்த முதலையே கொண்டு வியா பாரம் செய்யும்போது அதை நேரடி வாணிகம் என்றும் தனியார் நிறுவனங்களுக்காக ஒப்பந்தங்களை உண் டாக்கும்போது நேரடியல்லாத வாணிகம் என்றும் இருவகையான வாணிகத்தில் ஈடுபடுகிறது. இக் கார்ப்பொரேஷன் சிமென்ட், எஃகு, இரும்புக்கனி, மாங்கனீஸ், துணி, உப்பு, சணல், கைத்தொழிற் பொருட்கள் போன்ற 108க்கும் அதிகமான பண்டங் களின் வாணிகத்தில் ஈடுபட்டது. இவ்வாணிகம் 30 23 அரசினர் தொழில் துணிவு நாடுகளோடு நடைபெற்றது. 1968-ல் கனிப்பொருள் கள், உலோகங்கள் வாணிகக் கார்ப்பொரேஷன் என்ற நிறுவனம் இதிலிருந்து தோன்றி 13 பண்டங்களின் வாணிகத்தைக் கவனித்துக்கொள்கிறது. 1965-ல் உணவுக் கார்ப்பொரேஷன் ஒன்றும் இதிலிருந்து பிரிந்து தனியாக இயங்கி வருகிறது. கார்ப்பொ ரேஷனின் வளர்ச்சியைக் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது. 1956-57-ல் 919 மில்லியன் ரூபாய் வாணிகத்திலிருந்து ஏழு ஆண்டுக் காலத்தில் 977-9 மில்லியனாக உயர்ந்துள்ள நிலை இதன் வெற்றியைக் காட்டுகிறது (மில்லியன்.ரூ.) ஆண்டு ஏற்றுமதி இறக்கு நேரடி மதி 1956-57 57.9 வாணிகம்] நோடி யல்லாத வாணிகம் மொத்த வாணிகம் 34.0 91.9 91-9 1960-61 365.9 266.9 646.9 460.0 1106-9 1963-64 193.0 234-6 559.8 417-9 977.9 நூல்: journal of Industry and Trade, May 1965 தா.செ. அது அரசின் செயல் (Act of State) : அன்னிய அரசாங்கம் ஒன்றுக்கோ, அல்லது குடியிருப்பு இல்லாத ஓர் அன்னிய நாட்டினனுக்கோ, ஓர் அரசாங் கத்தினால் அல்லது அதனுடைய ஆனையின்கீழ் இழைக் கப்படும் ஊறை இது குறிக்கின்றது; அதாவது, அன் னிய நாட்டு நிலப் பகுதியைத் தன் நாட்டுடன் இணைத்துக்கொள்ளல்; அதைப் பகைமை பாராட்டிக் கைப்பற்றுதல் அல்லது பிறிதொரு நாட்டுக்கு உரிமை யாக்கல்; போர் சமாதானம் அல்லது முற்றுகை, சமாதான அல்லது வாணிக நடவடிக்கைகள் இவற் றின் அறிவிப்புகளை வெளியிடுதல்; அன்னியன் ஒரு வனைத் தன் எல்லையினின்றும் வெளியேற்றல்; போர்க்களத்தில் பண்டங்களைத் தன் உடைமையாக் கிக் கொள்ளுதல்; இவை அவ்வூறுகளில் சிலவாம். அரசு நடவடிக்கை சிறப்பு என்னவெனின், உள்நாட்டு நீதி மன்றங்களின் விசாரணைக்குட்படாது; அவற்றின் அதிகார வரம்புக்கு அது அப்பாற்பட்டது. சில சமயங்களில், தான் ஒரு ஆதிபத்திய அரசு என்ற முறையில், தன் குடிமக்கள் சம்பந்தமாக ஒரு அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளைக் குறிப்பிட இச்சொற்றொடர் சாதாரணமாக ஆளப்படு கின்றது. தன் குடிமக்களைப் பொறுத்த வரையில் அரசாங்க நடவடிக்கைகளினின்றும் அரசு நடவடிக்கை அடிப்படையிலேயே மாறுபடுகின்றது. அரசு நடவடிக்கை நாட்டின் எல்லைக்கு அப்பால்தான் தொழில்படும். அரசாங்கத்துக்குள்ள ஆதிபத்திய அதிகாரத்தின் மூலந்தான் அது சட்ட முறையில் செல்லுபடியாகக் கூடியதே ஒழிய, உள்நாட்டுச் சட்டங்களின்கீழ் அல்ல. அரசு நடவடிக்கை அன்னிய ரின்மேல் ஆதிக்கம் செலுத்தலாமே ஒழிய தன் குடி மக்கள்மேல் அல்ல. முற்றிலும் அரசு நடவடிக்கை அல் லாத இதர அரசாங்க நடவடிக்கைகள் எல்லாம் உள் நாட்டு நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குட்பட் டுள்ளன. ஜி.இரா. அரசினர் தொழில் துணிவு (Public Enterprise) என்பதற்கு தொழில்களைத் தேசீய மயமாக்கி அரசினர் அவற்றின் நிருவாகத்தை மேற்