பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பும் எஃகும்

90

இரும்பும் எஃகும்

உற்பத்தி குறைவு. இவற்றில் எஃகைத் தயாரிக்க ஆகும் செலவும் அதிகம். ஆனால் இம்முறையினால் தேவையான அளவு உயர்ந்த சூட்டைப் பெற முடிவதோடு எஃகின் தூய்மையையும் கட்டுப்படுத்த முடிகிறது. கலவை எஃகுகளைத் தயாரிக்க இம்முறை மிகஏற்றது.

எஃகு தயாரிப்பில் இருவகை உலைகள் பயன்படுகின்றன. ஹெரோ (Heroult) என்னும் அறிஞர் அமைத்த உலை அதிகமாக வழக்கத்திலுள்ளது. இது ஒரு பெரிய மூசையைப் போலிருக்கும். இதன் உட்புறம் உப்பு மூலத்தன்மையுள்ள பொருள்களால் கட்டப்பட்டிருக்கும் இதற்குள்ளிருக்கும் மின்முனைகளினிடையே மின்வில்லொன்று தோன்றி உயர்ந்த குட்டைத் தருகிறது. இதனால் மூசைக்குள் இருக்கும் பொருள்கள் உருகிக் கசடு பிரிந்து எஃகு கிடைக்கிறது. இதன் மின் முனைகள் பென்சில் கரியால் ஆனவை. இந்த உலைகள் 5 டன் முதல் 50 டன் வரை பொருள்களைக் கொள்ளும். 100 டன் கொள்ளளவுள்ள உலைகளும் உண்டு. மற்ற முறைகளில் தயாரிக்கப்படும் எஃகைத் தூய்மையாக்கவும் இவ்வுலை பயன்படும்.

உயர் அதிர்வெண் மின்னுலையில்(High frequency electric furnace) உயர்ந்த அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டமொன்று பாய்ந்து, உலைக்குள்ளிருக்கும் பொருள்களிலும் மின்னோட்டத்தைத் தூண்டி அவற்றைச் சூடேற்றுகிறது. பொருள்களில் ஏற்படும் காந்த விசைகளால் அவை நன்றாகக் கலக்கப்படுகின்றன. ஆகையால் எஃகின் கலவைகளைத் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் பொருள்கள் எஃகில் சீராகக்கலக்க இவ்வுலையில் வசதி உள்ளது. ஆகையால் கனமுடைய உலோகமான டங்ஸ்டனைக் கொண்ட கலவையைத் தயாரிக்க இவ்வுலை மிக ஏற்றது. குரோமிய எஃகு வகைகள், துருவேறா எஃகு வகைகள் முதலியவற்றைத் தயாரிக்க இம்முறை பயன்படுகிறது.

பாளங்கள் (Ingots): மேற்சொன்ன விதம் தயாரிக்கப்பட்ட உருகின எல்கைச் சூடு தாங்கும் கற்களால் கட்டப்பட்ட பெரிய பாத்திரங்களில் ஏந்துகிறார்கள்.

உருக்கிய எஃகை வார்ப்புக்களில் ஊற்றுதல்
உதவி: டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை

அப்படி ஏந்தும்போது வேண்டியமட்டும் ஆக்சிஜனை நீக்கும் உலோகங்களையும் கலவை உலோகங்களையும் சேர்க்கிறார்கள். சீரான மேற்பரப்புள்ள எஃகினாலான பொருள் தேவையானால் ஆக்சிஜனை நீக்காமல் விட்டுவிடுவார்கள். தகடுகளும் குழாய்களும் செய்ய இந்த எஃகு பயன்படுகிறது.

உருகின எஃகைப் பாத்திரத்தினடியில் பொருத்தப்பட்ட சூடு தாங்கும் குழாயின் வழியே பாள அச்சுக்களில் (Ingot noulds) வார்க்கிறார்கள். எஃகு குறுகிய கற்குழாய் வழியாய் வரும்போது சிதறாமலும் ஒரே வேகமாகவும், அச்சுக்களின் நடுமத்தியமாகவும் வரவேண்டும். பக்கவாட்டங்களில் சிதறக்கூடாது. உயர்ந்த ரக எஃகுகளைத் தயாரிக்கையில் மத்தியிலுள்ள குழாயின் வழியாக எஃகை வார்ப்பதுண்டு. கீழே பொருத்தப்பட்ட கிளைக்குழாய்களின் வழியாகப் பல அச்சுக்களில் ஒரே சமயத்தில் இது நிறைகிறது. இம்முறையில் சிதறலின்றி அச்சுக்களில் எஃகு ஏறுவதால் இதிலிருந்து செய்யப்படும் சாமான்களின் மேல்தளம் சுத்தமாய் இருக்கும். பாளத்தில் பள்ளங்கள் இல்லாமலும் கலந்துள்ள பொருள்கள் சில இடங்களில் மட்டும் குவிந்துவிடாமலும் கவனிக்க வேண்டும்.

உற்பத்தியாகும் எஃகின் ஒரு பகுதி பலவேறு உருவங்களுடைய அச்சுக்களில் வார்க்கப்படுகிறது. சாமான்களின் உருவங்களை நல்ல மரக்கட்டைகளில் செதுக்கிப் பிறகு இவற்றால் மணல் அல்லது உலோகத்தினாலான அச்சுக்கள் செய்து. அவற்றில் எஃகை ஊற்றுகிறார்கள். பிறகு அச்சைக் கலைத்துப் பொருள்களை யெடுத்துச் சுத்தம் செய்கிறார்கள்.

சூட்டில் வேலை செய்தல் (Hot working) : பாளங்கள் இறுகியதும் அவை சூடாய் இருக்கும்போதே தூக்கும் யந்திரங்களால் அச்சுக்களிலிருந்து எடுக்கிறார்கள். பிறகு அவற்றை உருளைகளிடையேயாவது நீராவியால் இயக்கப்பட்ட பெரிய சம்மட்டிகளினாலாவது தண்ணீரால் இயக்கப்பட்ட அழுத்தி எந்திரங்களினாலாவது தட்டி நீட்டுகிறார்கள். நீராவிக் கொதிக்கலங்களின் உருளைகள், ஆகாயவிமானப் பகுதிகள், யுத்தத் தளவாடங்கள் ஆகியவை கடைசி இரு முறைகளிலும் செய்யப்படுகின்றன. பாளங்களை 1.200° முதல் 1,300° வரை காய்ச்சி வேலை செய்ய ஆரம்பித்து. அவை சுமார் 900° சூட்டை அடைந்ததும், வேலையை நிறுத்தி, மீண்டும் காய்ச்சுகிறார்கள். 900°க்குக் கீழே அவ்வளவு எளிதில் உருவாக்க முடிவதில்லை ; அப்படிச் செய்தால் எஃகின் உட்கூறு அமைப்பு மாறுகிறது.

வெண்சூட்டிற்குக் காய்ச்சப்பட்ட எஃகு பாளத்தை எடுத்தல்
உதவி : டாட்டா இரும்பு எஃகு தொழிற்சாலை

காய்ச்சி அடித்தலும் அழுத்தலும் (Forging and Pressing) : சம்மட்டிகளால் தட்டி வேலை செய்வதில்