பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரும்பும் எஃகும்

92

இரும்பும் எஃகும்

எஃகு இரும்பு வகைகள் கரிப்பொருள் சத விகிதம்
குறைந்த கரியுள்ள எஃகு 0.20 வரை
சாதாரண (Mild) எஃகு 0.25 ,,
நடுத்தர (Medium) எஃகு .25 - .45 ,,
அதிகக்கரி (High) எஃகு .45 - .45 ,,
வார்ப்பிரும்பு 2.5 - 4.5 ,,

துத்தநாகத் தகடுகள். ஆணிகள், கப்பல்கள் செய்ய உதவும் தகடுகள், கம்பிகள், கட்டடங்களில் பயன்படும். பொருள்கள், மற்றப்படி சாதாரணமாய் வியாபாரமாகும் எஃகுகள் ஆகியவை சாதாரண ரகத்தைச் சேர்ந்தவை. நடைமுறையில் ஓர் எஃகு வகை தாங்கவேண்டிய பளுவுக்குத் தகுந்தாற்போல் அதில கலக்கப்படும் உலோகங்கள் முடிவு செய்யப்படுகின்றன.

சூட்டுவினை (Heat treatment) : துவைத்தல் (Tempering) என்ற செய்முறையினால் இரும்பின் கடினத்தையும் வலிவையும் பெரிதும் மாற்றலாம் என்பது இந்தியாவில் தொன்றுதொட்டு அறியப்பட்டிருக்கும் உண்மையாகும். இரும்பைச் சூடேற்றித் தக்க விதத்தில் குளிர்விப்பதால் அதன் பண்புகளை மாற்றியமைக்கலாம். அனுபவத்தால் கையாளப்பட்ட இம்முறைகளுக்கு விஞ்ஞான அடிப்படையான காரணங்கள் தற்காலத்தில் தெளிவாகியுள்ளன. இரும்பும் கரியும் கூடியுள்ள வகையில் வெப்பத்தால் ஏற்படும் மாறுதல்களால் அதன் பண்புகளிலும் மாறுதல்கள் தோன்றுகின்றன எனத் தெளிவாகியுள்ளது. இந்த மாறுதல்களைக் கட்டுப்படுத்தித் தேவையான இயல்புகள் கொண்ட எஃகு வகைகளைத் தயாரிக்க முடிகிறது. தக்க முறைகளால் இரும்பினாலான பொருளின் பரப்பை மட்டும் கடினமாக்கும் செய்முறைகளும் தற்காலத்தில் வழங்கிவருகின்றன.

இந்தியாவில் இரும்பும் எஃகும் செய்யும் முக்கிய தொழிற்சாலைகள் கீழ்க்கண்டவாறு ஆண்டு உற்பத்தி செய்யக் கூடியவை :

ஊதுலை இரும்பு எஃகு பாளங்கள்
டாட்டா
இரும்பு-எஃகு
தொழிற்சாலை.
கல்கத்தா.
12 இலட்சம் டன். 11 இலட்சம் டன்.
இந்திய
இரும்பு-எஃகு
தொழிற்சாலை.
கல்கத்தா.
8.5 ., ... ...
வங்காள எஃகு
கார்ப்பரே
ஷன்.
கல்கத்தா.
... ... 2.5 ,,
மைசூர் இரும்பு-
எஃகு தொழிற்
சாலை
0.25 ,, 0.25 ,,
எஃகின் பாளங்
களிலிருந்து மற்
றச் சாமான்
களை உருளை
களில் நீட்டும்
தொழிற்
சாலைகள்
... ... 0.60 ,,

எஃகின் கலவைகள்: எஃகிலுள்ள கரியின் விகிதத்தை ஒட்டி அதன் பண்புகள் மாறுவதால் அதிலுள்ள கரியின் அளவை மாற்றித் தேவையான பண்புகள் கொண்ட எஃகு வகைகளைப் பெற முடிகிறது. எந்திர உறுப்புக்களில் பயன்படும் எஃகு சில பண்புகள் கொண்டிருக்க வேண்டும். அது எளிதில் எந்திரத்தில் வடிவாக்கத் தக்கதாயும், தகைவுகளுக்கு உள்ளானால் முறியாமலும் உருமாறாமலும் இருக்கவேண்டும் எந்திரத்தின் இயக்கத்தினால் அதன் தன்மை மாறாமல் இருப்பதும் அவசியம். கரியின் விகிதம் 0.1-1·7% உள்ள சாதாரணக் கரி எஃகு வகைகள் இத்தேவைக்கு ஓரளவு போதுமானவைகளாக இருந்தன. ஆனால் இவற்றைவிடச் சிறந்த பண்புகள் கொண்ட எஃகு வகைகள் எந்திரங்களுக்குத் தேவையாயின. நெடுநாட்கள்வரை தேயாமல் அதிர்ச்சிகளையும் தகைவுகளையும் நன்றாகத் தாங்கி, ரசாயனப் பொருள்களால் அறிபடாது,காந்த, மின்சார விளைவுகளால் பாதிக்கப்படாத எஃகு வகைகள் தேவையாகவே, குரோமியம், நிக்கல், வினாடியம், மாலிப்டினம், செம்பு, சிலிக்கன் ஆகிய பொருள்களைக் கொண்ட எஃகு வகைகள் தோன்றின. இவை எஃகின் கலவைகள் என அழைக்கப்படுகின்றன. இவை சாதாரண எஃகு வகைகளுக்கு இல்லாத பல நல்லியல்புகளைக் கொண்டவை.

எஃகுடன் கலக்கும் உலோகங்களில் குரோமியத்தைச் சேர்ப்பதால் பொருளின் மேற்பரப்பிலிருந்து அதிகமான ஆழம்வரை கடினமாகிறது. ஆகையால் இவை இருசு தாங்கிகளிலும், பல்லிணைகளிலும் (Gear) பயன்படுகின்றன. நீளவாட்டிவ் அதிகமாக மாறுதல்கள் நேரத்தக்க உறுப்புக்களுக்கு நிக்கல் எஃகு ஏற்றது. மோட்டார் வண்டிகளின் அதிர்ச்சி தாங்கும் பகுதிகள் நிக்கல் எஃகினால் ஆனவை. நிக்கல் என்கைத் தாழ்ந்த வெப்பத்திலேயே அவிக்கலாம் (Quenched). அவித்தவின்போது பொருள் விகாரமடைவது இதனால் குறைகிறது. பலவேறு நிலைகளில் பயன்படத்தக்க உறுப்புக்கள் வனாடிய எஃகினால் செய்யப்படுகின்றன. தனியாகவோ, நிக்கல் அல்லது குரோமியத்தைக் கலந்தோ எஃகுடன் செம்பைக் கலக்கும் முறை இப்போது அதிகமாகி வருகிறது. செம்பு எஃகின் கலவைகள் சானவை. ஆனால் நல்ல வலிவுள்ளவை. ஆகையால் ரெயில் தண்டவாளங்களில் இவை பயன்படுகின்றன.

உலோகவேலைக் கலையும் பொறியியல் திறமையும் ஒன்றோடொன்று இணையும்போது நிகழும் முன்னேற்றத்திற்கு மோட்டார் காரின் வளர்ச்சி ஒரு நல்ல உதாரணமாகும். குறைவான களமும், தேய்வும், அதிகமான வலிமையும் கொண்ட பொருள்கள் மோட்டாரில் தேவையாகவே அதற்கேற்றாற்போல எஃகின் கலவைகளின் பண்புகள் சிறந்தன. இதைப்போலவே வேறு துறைகளிலும் எஃகின் கல்வைகளின் பயன் பெருகி வருகிறது. சோதனைச் சாலையிலும் நடைமுறையிலும் பல சோதனைகள் செய்த பின்னரே ஒவ்வொரு எஃகின் கலவையும் தயாரிக்கப்படுகிறது. சரியான கலவையைத் தேர்ந்தெடுத்து, அதைச் சரியானவாறு வினைப்படுத்தி இதில் குறிப்பிட்ட பண்புகள் இருக்குமாறு செய்கிறார்கள்.

வினைப்படுத்தும் வகையை யொட்டிக் கரி எஃகின் தன்மை மாறுபடும். ஆனால் அதில் நல்ல வலிமையுடன் சிறந்த உறுதியும். கம்பியாகுந் தன்மையும் சேர்ந்திராது. ஆனால் எஃகின் கலவைகளைச் சூட்டு வினைக்கு உள்ளாக்கினால் அவை இப்பண்பைப் பெறும். ஒரு பொருளைத் தயாரிக்க எத்தகைய கலவை தேவை என்பது பொருளின் அளவையும், வடிவத்தையும், அதன் பண்புகளையும் பொறுத்திருக்கும்.

சில பயன்களுக்கு மட்டும் சாதாரண எஃகு தேவையாகலாம். அவ்வாறு இதைப் பயன்படுத்தும்போது