பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருமைக் கொள்கை

94

இருவாய்க் குருவி

மனமும் சடமும் ஒன்றுக்கொன்று முரணான பொருள்கள் என்றும், மனத்தின் பண்பு எண்ணம், சடத்தின் பண்பு பரப்பு என்றும் தெளிவு படுத்தினார்.

டேக்கார்ட் கூறிய இருமைக்கொள்கையானது, ஆட்சேபங்கள் பல கூறக்கூடியதாக இருக்கிறது. உடலும் உள்ளமும் ஒன்று சேர்ந்தே நம்முடைய அனுப்வத்தில் காணப்படுகின்றன. அப்படியிருக்க அவை இரண்டும் வேறுவேறான பொருள்கள் என்று டேக்கார்ட் கூறுவதை ஏற்றுக்கொள்வது எப்படி? உதாரணமாகக் காட்சி என்பது முதலில் புலன் அனுபவமாகத் தொடங்கி இறுதியில் கருத்தாக முடிகின்றது. கருதும் மனம் பிரிக்க முடியாத பொருளாகவும், சடப்பொருள் என்றும் பிரிக்கக்கூடிய பொருளாகவும் இருப்பதால், மனம்-சடம் இரண்டையும் ஒன்றாக இணைக்கக்கூடிய பொதுத் தத்துவம் ஒன்றுமில்லை. ஆனால் இந்த முரண்பாட்டை விடுவித்தாலன்றி நம்முடைய அனுபவம் அனைத்தும் பொருளற்றதாகவே இருக்கும். இந்தத் தேவையை டேக்கார்ட்டும் அறிவார். அதனால்தான் அவர் புற உலகமும் அக உலகமும் கூம்புருவச் சுரப்பியில் கூடுவதாகக் கூறுகிறார்.

டேக்கார்ட்டின் கருத்தை மறுத்த தத்துவ சாஸ்திரிகளுள் சிலர் மனம், சடம் இரண்டையும் ஒன்றையொன்று வைத்து இணைக்கவும்,சிலர் மூன்றாவது தத்துவம் ஒன்றைக்கொண்டு இணைக்கவும் முயன்றனர். அதன் காரணமாக எழுந்தவையே லைப்னிட்ஸ் என்பவருடைய பன்மைக் கொள்கையும், ஸ்பினோசா என்பவருடைய ஒருமைக் கொள்கையுமாம்.

அறியும் மனம் அறியப்படும் பொருள் என்பது இருமைக் கொள்கையின் மற்றோர் உருவமாகும். அறிதல் என்பது அதற்குப் புறம்பான பொருள்களை அறிவதாகும். ஆனால் இந்தப் புறம்பான பொருள்களைப் புலன் காட்சி மூலமாகவே அறிய முடியும். லாக், பார்க்ளே, கான்ட் ஆகிய மூன்று பெரிய தத்துவ சாஸ்திரிகள் இந்தக் கேள்வியை எழுப்பி விடை கூறியிருக்கின்றனர். கான்ட் என்பவருடைய கருத்துத்தான் அளவை இயற்கொள்கை (Epistemology), உண்மை இயல்(Ontology) பற்றி இக்காலத்தில்வழங்கும் கொள்கைகளுக்கு அடிநிலையாகும். கான்டின் கொள்கையாவது நேரில் அறிய முடியாத உள்பொருள் ஒன்றிலிருந்தே நேரில் அறியும் உலகம் தோன்றியிருக்கிறது என்பதும், அந்த உள்பொருள் புலன்களைத் தூண்டுவதைக் கொண்டு மனம் சிருஷ்டிப்பது மூலமே நாம் அந்த உள்பொருளைஅறிவதாகக் கூறுகிறோம் என்பதுமே யாகும். அறிவின் வகைகள் (Categories) மனப்பண்புடையவை, உள்பொருள் சடப்பண்புடையது. இவ்விரண்டு இனங்களே அறிவு என்பதன் இணைபிரியாக் கூறுகளாகும்.

மனித அனுபவம் பலவகைப்பட்டதாக இருந்த போதிலும் அவற்றை எல்லாம் ஒரே கருத்தில் அடக்க முடியும் என்று கூறுவதும், ஒரு பொருளுக்கு இரண்டு அமிசங்கள் உண்டு என்று கூறுவதைக் கொண்டு அது இறுதியில் இரண்டு பொருள்களே என்று கூறுவதும் ஒன்றாகாது. டேக்கார்ட் கூறுவதை நம்முடைய சாதாரண அறிவு உறுதிசெய்து கொண்டே இருந்தபோதிலும் அது நம்முடைய பகுத்தறிவுக்கு ஒத்ததாக இல்லை. ஆயினும் உள்பொருளைப் பற்றித் தவறாக எண்ணுவதைத் தடுப்பதாலும், அனுபவத்தில் காணும் முரண்பாட்டின் முழுப்பொருளையும் உணருமாறு செய்வதாலும் இருமைக் கொள்கை பயனுடையதாகவே இருக்கிறது.

மனம் - சடம் என்று கூறும் இருமைக்கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாதிருந்தாலும் (1) சக்திகள் (Energies) என்னும் பௌதிகப் பொருள்கள், (2) ஆக்க முறைகள் (Processes) என்னும் மனச் செயல்கள் என்ற இருமைக்கொள்கை இருக்கவே செய்கின்றது. இருமைக் கொள்கையை எப்பெயரிட்டழைத்தாலும் இன்றியமையாத ஒரு பொருள், விளக்க முடியாமலும் ஏற்கமுடியாமலும் இருந்துகொண்டிருக்கிறது. அந்தப் பொருள் அனுபவத்தை ஒன்றுக்கொன்று உறவில்லாத பகுதிகளாகப் பிரிப்பதாகும். அனுபவத்தை இரண்டு விதமாகப் பிரிக்கக்கூடும் என்று அறிவு கூறினும், அவ்விருபகுதிகளுக்கும் பொதுவாகப் பல அமிசங்கள் உண்டு என்பதை நாம் மறத்தலாகாது.

ஆகவே ரஸ்ஸல், ஜேம்ஸ், வார்ட், யீே போன்றார். கூறும் பன்மைக் கொள்கைக்கும் பிராட்லி, ராய்ஸ் கூறும் ஒருமைக் கொள்கைக்கும் கொண்டு சேர்ப்பவை டேக்கார்ட்டின் உண்மையியல் சார்ந்த இருமைக் கொள்கையும், கான்டின் அளவை இயல் சார்ந்த இருமைக் கொள்கையும் ஆகும். ஆகவே, இருமைக் கொள்கையில் ஆரம்பித்துச் சிலர் பன்மைக் கொள்கையையும், வேறு சிலர் ஒருமைக் கொள்கையையும் அடைகிறார்கள். ச.செ.

இருவாய்க் குருவி (Hornbills) : இக் குருவிகளுள் சிறிதான வகையும் ஒரு பருந்தளவு இருக்கும்.

இருவாய்க் குருவி

இப்பறவைகளின் மிகப் பெரிய அலகுகளே இவைகளின் முக்கிய அமிசம். ஒரு பேரலகின் மேல் மமற்றொரு பேரலகைத் தலை கீழாய்க் கவிழ்த்து ஒட்டினாற்போல் இருப்பதால் இருவாய்க்குருவி என்ற விசித்திரப் பெயர் இவைகளுக்கேற்பட்டது. இவை அத்திவகைப் பழங்களையும், மற்றப் பழங்களையும், தம்முடைய பேரலகினால் திருகிப் பிடுங்கித் தின்னும்; சில வேளைகளில் பெரும் பூச்சிகளையும், பல்லிகளையும், ஓணான் களையும்கூடப் புசிக்கும். இருவாய்க் குருவிகள் மரமடர்ந்த இடங்களில் முக்கியமாகக் காடுகளில் குடியிருக்கும். மர உச்சிகளை வீட்டுக் கீழிறங்கி இவை தரையில் நடமாடுவதில்லை. பறக்கும்போது ஒலி செய்துகொண்டே விரைந்து. இற-