பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரேவணசித்தர்

96

இரைப்பை

அம்மை நோயை உண்டாக்கவும் தணிக்கவும் ஆற்றலளித்து. வழிபாடு பெற வரம் அளித்தார். இவள் தீயிலிருந்து எழுந்தபோது ஆடை வெந்துபோனதால் வேப்பிலையை உடுத்திக் கொண்டாள். ஆகையால், அம்மை கண்டால் வேப்பிலையைப் பயன்படுத்துகின்றனராம்.

இரேவணசித்தர் (16ஆம் நூ.) பேரளம் என்னும் ஊரிற் பிறந்து, சிதம்பரத்தில் வாழ்ந்த புலவர். இவர் எழுதிய நூல்கள் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம், அகராதி நிகண்டு முதலியவை. இந்த நிகண்டுதான் அகரவரிசையாகத் தொகுக்கப்பட்ட முதல் தமிழ் அகராதி.

இரேவதி (Pisces) அசுவினி முதலாகவுள்ள இருபத்தேழு நட்சத்திரங்களுள் கடைசியானது; மீனராசியில் அடங்கியது.

மித்திரன் என்னும் ஆதித்தன் மனைவியும், இரைவதமனுவின் அன்னையும், பலராமன் மனைவியும் இரேவதி யென்னும் பெயருடையவர்கள் என்று புராணங்கள் கூறும்.

இரேவல்சின்னி (நாட்டு மஞ்சட் சீனக்கிழங்கு, பேதிக் கிழங்கு, வரியாத்துக் கிழங்கு, ரூபார்பு) மலக்கட்டு, பசிமந்தம் முதலியவற்றைப் போக்கும் ஒரு

இரேவல்சின்னி

1. இலையும் பூக்கொத்தும். 2. பூ. 3. காய்.

கிழங்கு. வயிற்றுக்கடுப்பு உண்டாகாமல் பேதியாகச் செய்வதால் இதைக் குழந்தைகளுக்கும் பிள்ளைத் தாய்ச்சிகளுக்கும் கொடுப்பார்கள். மண்ணீரல், கல்லீரல் வீக்கங்களுக்கும் இது உபயோகமாகிறது. கிரிகரிஸ் பவுடர் என்னும் மலமிளக்கியும் வலிமை தருவதுமான மருந்தும் இதிலிருந்து தயாராகிறது.

ரீயம் அவிஷினேல் என்றும் ரீயம் இமோடி என்றும் பெயருள்ள இரண்டு சிறிய பலபருவக் குற்றுச்செடிகளின் மட்டத்தண்டுக் கிழங்கு உலர்ந்ததே இரேவல் சின்னி. இலையும் விதையும் வேரும்கூட மருந்தாகப் பயன்படும். இது பாலிகொனேசீ என்னும் ஆற்றலரிக் குடும்பத்தைச் சேர்ந்த சாதி. இமயமலையிலும், திபெத்து, சீனா முதலிய இடங்களிலும் வளர்கிறது.

இரேவல் சின்னியிலுள்ள முக்கிய சத்துக் கிரைச ரோபின் (C30 H36 O7 ) என்னும் பொருள். இது மஞ்சள் நிறமானது. இதனால்தான் இந்தக் கிழங்கும் மஞ்சள் சாயலாக இருக்கும். இந்த மருந்து சற்று நரநர என்றிருக்கும். அதற்குக் காரணம் இதில் நாற்பது சதவீதம் கால்சியம் ஆக்சலேட்டு என்னும் உப்பு இருக்கிறது. ரீயோடானிக் அமிலம், இமோடின் முதலிய வேறு சத்துக்களும் இதில் உண்டு.

இரேவல்சின்னிக்கீரை ரீயம் ரப்பாண்டிகம் என்னும் செடி. இதன் இலைகள் முள்ளங்கி இலைபோலத் தரையருகிலிருந்து கூட்டமாக வளரும். மிகவும் பெரிதாக இருக்கும். இரண்டடி நீளமிருக்கும். இந்த இலையின் காம்பும் இரண்டடி நீளமும் ஓர் அங்குல விட்டமும் இருக்கும். இந்த இலைக்காம்பு மரக்கறியாகப் பயன்படுகிறது. இலையைத் தின்னுவதில்லை; அது நஞ்சுள்ளது.

சுக்கங்கீரைச் (த. க.) சாதியும் இரேவல்சின்னி எனப்படுகிறது. இது ரூமெக்ஸ் என்பது மேற்குப் பஞ்சாபில் இயற்கையாக வளர்கிறது. சமசீதோஷ்ண நாடுகளிலும் உப அயன நாடுகளிலும் இது நன்றாக வளர்கின்றது. இதனை மரக்கறியாகவும் மருந்தாகவும் பயன்படுத்துகின்றனர். இதுவும் பாலிகொனேசீ குடும்பத்தைச் சேர்ந்ததே.

கார்சீனியா மொரெல்லா (Garcinia morella) என்னும் புன்னைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை மரத்தையும் இரேவல்சின்னி என்பர்.

இரைப்பை (Stomach) : மனிதனுடைய இரைப்பை உணவுப்பாதையில் உணவுக்குழாய்க்குக்

இரைப்பையும் அதைச் சார்ந்த உறுப்புக்களும்

1. இரைப்பை. 2. முன் சிறுகுடல், 3. கணையம். 4. ஈரல்

5. பித்த நீர்ப் பை. 6.பித்த நாளம்.