பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லம்

101

இல்லம்

களும் இவ்வாறு மலைகளில் இயற்கையான ஒதுக்கிடங்களையே தமக்கு ஆதரவாகக் கொண்டிருந்தனர்.

ஆதிமக்கள் அமைத்த முதல் வீடு காற்றுத்தடுக்கு (Wind break) என்பதே. அது குச்சிகளால் நேராகவோ

நாயாதிகள் குடிசை

உதவி: சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

அல்லது அரைவட்டமாகவோ வேலிபோல அமைத்த தடுக்குக்களால் ஆக்கப்பட்டிருக்கும். சில

கனிகர் மர உச்சிக் குடிசை

உதவி: சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை

சமயம் இது இலைகளால் வேயப்பட்டிருக்கும். காற்று மழை முதலிய வானிலை வேறுபாடுகள் மிகுதியாக உறைக்காமல் சற்றுப் பாதுகாப்பாக இருக்கும். முற்காலத்திலிருந்த டாஸ்மானிய சாதியாரும், ஆஸ்திரேலியர்களும் புஷ்மன்களும் எந்த இடத்திலும் நீண்ட நாள் தங்காத நாடோடி மக்களாயிருந்தபடியால் நிலையான வீடுகள் கட்டாமல் இத்தகைய காற்றுத்தடுக்குக்களையே அமைத்து வந்தனர்.

தோல் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களிலுள்ள மக்கள் கிளைகளாலே கூம்புபோலக் கட்டி, அதன்மேல் தோலைப்போட்டு மூடிச் சிறு கூடாரங்கள் செய்து கொண்டனர். அமெரிக்க இந்தியர்களுடைய குடில்கள் இத்தகைய கூடாரங்களே. மத்திய ஆசிய நாடோடிகள் குழிதோண்டி, அதைத் தோல், நமுதாக் கம்பளி (Felt) முதலியவற்றால் மூடி அதனுள் வசிப்பர். சைபீரியாவிலிருந்த மக்கள் கூடாரம் வேய 'பர்ச்' (Birch) மரப்பட்டையைப் பயன்படுத்தினர்.

கற்கால மக்கள் எத்தகைய இல்லங்கள் அமைத்திருந்தனர் என்று அறிவதற்கு நேரடியான தொல்பொருளியற் சான்றுகள் கிடைத்தில. இப்பொழுது காணப்படும் ஆதி மக்கள் அமைப்பதுபோலவே அவர்களும் அமைத்திருப்பார்கள் என்று எண்ணலாம். நிலையான இல்லங்கள் புதுக் கற்காலத்தின் தொடக்கத்திலேயே உண்டாயின என்று தோன்றுகிறது. அவ்வாறு தோன்றிய புதுக்கற்கால இல்லங்களுள் எஞ்சி நிற்பவை சுவிட்ஸர்லாந்து ஏரிகரைகளில் சேற்றில் மரங்களை ஊன்றி, அவற்றின்மேல் கட்டிய குடிசைகளேயாம். அவ்வீடுகளும் அம்மக்கள் பயன்படுத்திய தட்டு முட்டுப் பொருள்களும் முற்றா நிலக்கரிச் சதுப்பு நிலங்களில் (Peat Bogs) காணப்படுகின்றன. சுமார் கி.மு. 8000-ல் கட்டப்பட்ட இவ்வில்லங்கள் வட்டமாகவும் கூம்பிய கூரையுடனும் அமைக்கப்பட்டன. மலேயா, இந்தோசீனா, சுமாத்ரா, இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய இடங்களில் காணப்படும் மரத்தூண்களை யூன்றி அமைத்த குடிசைகள், வெள்ளம் உள்ளே வந்து விடாதிருப்பதற்காகத் தளத்தை உயரமாகச் செய்து கட்டுப்பட்டுள்ளன.

அட்லான்டிக் கடற்கரை இந்தியர்களுடைய விக்வாம்களையும், காங்கோ குள்ளர்களுடைய மரமும் களிமண்ணும் கொண்டு கட்டின குடிசைகளையும் போன்ற கூம்பு வடிவமான கூரையும் சிறுவாயிலுமுடைய வட்டமான இல்லங்கள் வைக்கோற்புரியினால் சுற்றிச் செய்யப்பட்ட தேனீக்கூடுபோல் அமைக்கப்பட்டனவாம். எஸ்கிமோக்களுடைய உறைபனி வீடுகளும் இவை போன்றவையே யாயினும், கட்டும் முறை முற்றிலும் வேறுபட்டதாகும். இந்தியாவிலும் உலகத்தில் பெரும்பான்மையான பகுதிகளிலும் செவ்வகமான வீடுகளே சாதாரணமாக இருந்தபோதிலும், கூம்பிய கூரையுடைய வட்டமான வீடுகளும் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன. ஊரார் அனைவரும் ஒன்றாகக் கூடி வாழும் நீண்ட வீடுகள் போர்னியோவில் காணப்படுகின்றன.

பல குழுவினரும் சிறப்பான செயல்களுக்காகத் தனிச் சிறப்புள்ள வீடுகள் கட்டுவது வழக்கம். மாயோரிகள்

(Maoris) கூட்டங்கள் கூடுவதற்காக 'வாரா' என்னும் பெரிய மன்றங்கள் கட்டி, அழகான மரச்செதுக்குச் சித்திரங்களைக்கொண்டு அணி செய்வர். அஸ்ஸாமிலுள்ள ஆதிக் குடிகளும், கோண்டுகள் போன்ற இந்திய ஆதிமக்களும், மெலனீசிய மக்களும் மணமாகாத ஆண்கள் பெண்களுக்காக வெவ்வேறு பொது மன்றங்கள் கட்டுவர். எஸ்கிமோக்கள் நடன வீடுகள் உறைபனியால் அமைப்பர். மாயோரிகளும் சமோவன்களும் சமையல் அறைகளைத் தனியாக அமைப்பர்.