பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லம்

102

இல்லிப்பூச்சி

மேற்கூறிய வீட்டு வகைகளுள் பெரும்பான்மையானவற்றை இந்தியாவில் பார்க்கலாம். செஞ்சுக்களின் வட்டமான வீடுகள் தேனீ வளர்க்கும் கூடு போன்றிருக்கும். நீலகிரித் தொதவர்கள் பீப்பாய் போன்ற தாழ்வான குடிசைகள் கட்டுகின்றனர், சவரர்களும் மற்ற முண்டாரி மொழி பேசும் மக்களும் இந்தோனீசியாவிலுள்ள

தொதவர் குடிசை

உதவி; சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

நீண்ட குடிசைகள் போன்ற தங்கள் வீடுகளை நல்ல தெருக்கள் அமைத்துக் கட்டுகின்றனர். திருவிதாங்கூரிலுள்ள சில ஆதிமக்கள் வகையினர் யானை முதலிய காட்டு விலங்குகளினின்றும் தப்புவதற்காக

செஞ்சுக்கள் குடிசை

உதவி : சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை.

நியூகினிய ஆதிமக்களில் சிலர் கட்டுவதுபோல் மரங்களின்மீதே குடிசைகளைக் கட்டுகின்றனர். அந்தமான் தீவினர் ஒரு மேடை அமைத்து அதில் தாழ்வாரம் இறக்குகிறார்கள்.

அறிவும் நாகரிகமும் வளரவே பச்சைச்செங்கல், களிமண், மண், குச்சி, நாணல், மூங்கில் முதலியவற்றிற்குப் பதிலாகக் கற்களும் சுட்ட செங்கற்களும் கொண்டு கட்டும் கட்டடங்களைச் செல்வர்கள் கட்டத் தொடங்கினர். ஏழைகட்காக நல்ல வீடுகள் அமைப்பது என்பது மேனாட்டில்கூட அண்மையில் எழுந்த எண்ணமே ஏ. ஐ.

இல்லிப்பூச்சி கடற்கரை அலைவாய் மணலில் பிள்ளைப்பூச்சிபோலப் புதைந்து வாழ்வதும் நண்டைப் போன்றதுமான சிறு பிராணி. இதில் இரண்டு வகைகள் தென்னிந்தியக் கடற்கரையில் சாதாரணமாகக் காணப்படுகின்றன. ஒன்று ஏராளமாகக் காணப்படுவது, 1½-2 அங்குல நீளமுள்ளது, அண்டவடிவமாக இருக்கும். சுற்றுச் சிவப்புக் கலந்த வெண்மையான ஓடு மேலே மூடியிருக்கும். கடலின் அலை கரையில் மோதிப் பரந்து, பிறகு அதன் நீர் திரும்பியோடும்போது மணலைக் கரைத்துக்கொண்டு போகும். அப்போது மணலில் புதைந்திருந்த இல்லிப்பூச்சி சில வேளைகளில் வெளிப்பட்டு, நீரில் உருண்டு, மடமடவென்று தன் பின் கால்களால் மணலைத் தோண்டிக் கொண்டு மிக விரைவாகப் புதைந்து கொள்ளும். இந்தக் கால்களின் கணுக்கள் தோண்டுவதற்கேற்றவாறு தட்டையாக மண் வெட்டிபோல் அமைந்திருக்கின்றன. இனம் பெருகு காலத்தில் இல்லிப் பூச்சிக் குஞ்சுகள் எண்ணிறந்தவை அலைநீர் திரும்பிப் போகும்போது பாய் போட்டது போல மணலில் தெரியும். இந்த இல்லிப்பூச்சியை நண்டு பிடிப்பதற்கு இரையாகப் பயன்படுத்துவார்கள். தூண்டில் முள்ளில் செருகும் கடல் நாக்குப் பூச்சியைப் பிடிக்கவும் இதை உபயோகிப்பதுண்டு.

இல்லிப்பூச்சி

1. ஆல்ப்யூனியா: சுவாசத்துக்கு வேண்டிய நீரை வடிகட்டி உறிஞ்சுவதற்கு உணர்கொம்புகளைச் சேர்த்திருப்பது. 2. எமெரிட்டா (ஹிப்பா). 3. இல்லிப் பூச்சியின் கால்கள் : மணலைத் தோண்டுவதற்குத் தக்கவாறு தட்டையாக அமைந்திருப்பது

இது ஒட்டுமீன் வகுப்பில் எமெரிட்டா ஏஷியாட்டிகா என்னும் இனம். இது ஹிப்பா எனவும்படும், இதனை அயன மண்டலம், உப அயனமண்டலம் ஆகியவற்றிலுள்ள கடற்கரைகளில் நெடுகக் காணலாம்.

இன்னொரு வகை இல்லிப்பூச்சி எமெரிட்டாவைவிடச் சற்று அகலமாக இருக்கும். மேலோடு தட்டையாக இருக்கும். இது ஆல்ப்யூனியா சிம்னிஸ்ட்டா எனப்படும். இது அலைவாய்க்குச் சற்று ஆழமான