பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்குக்காட்டி

108

இலங்கை

னருகே நிலையான முடிச்சு அல்லது தொளையும் பின்புறத்தில் கேர்குத்தான தளத்தில் நகரத்தக்க உறுப்பொன்றும் இருக்கும். பின்புறத்திலுள்ள உறுப்பில்

இலக்குக்காட்டி

1. பரதிபலிக்கும் மேல் பட்டகம்.

2. ஈடு செய்யும் பட்டகம். இது பல்விணையால் கற்றப்படுகிறது. மேலே உள்ள பட்டகத்தின் வேகத்தில் அரைவீதம் கழன்ற மேல் பட்டகத்தினால் ஏற்படும் தலைகீழ் பிம்பத்தை ஈடுசெய்கிறது.

3. பிரதிபலிக்கும் கீழ்ப் பட்டகம். இதுவும் பொருளருகு லென்ஸால் ஏற்படும் தலைகீழ் பிம்பத்தை ஈடுசெய்கிறது.

4. டெலிஸ்கோப்பிலுள்ள கண்வில்லை.

5. டெலிஸ்கோப்பிலுளை பொருளருகு லென்ஸ்.

6. இலக்குக் காட்டியின் மேல் பாகத்தைச் சுழற்றும் பல்லிணை. அப்படிச் சுழற்றி மேல் பட்டகத்தைக் குறி பார்க்கப்படும் பொருளின் திசையில் இருக்கும்படி செய்யலாம். இது ஈடுசெய்யும் பட்டகத்தையும் சுழலச் செய்கிறது.

7. அளவுகாட்டி.

8. டிகிரிகள் காண்பிக்கும் வட்டமான தட்டு.

9. மேல் பட்டகத்தை உயர்த்தவும் இறக்கவும் உதவும் பல்லிணை.

கருவியின் உள்ளே ஒளியின் பாதை இடையிட்ட கோடுகளால்

காண்பிக்கப்பட்டுள்ளது.

சிறு முடிச்சோ, தொளையோ இருக்கும். இது குறிப்புப் புள்ளியாக உதவுகிறது. இதை இயக்கும்போது அது மேலுங்கீழும் நகருவதோடு பக்கவாட்டிலும் நகர்ந்து, காற்றின் உராய்வினால் எறிபடை பக்கவாட்டிலும் விலகுவதை ஈடு செய்கிறது. ஆகையால் பின்புறத்திலுள்ள குறிப்புப் புள்ளியும், முன்புறத்திலுள்ள புள்ளியும் இலக்கிற்கு நேராக இருக்குமாறு படைக்கலத்தை அமைத்து, எறிபடையைச் சுட்டால் அது இலக்கை அடையும்.

பீரங்கிகளிலுள்ள இலக்குக்காட்டிகள் இன்னும் சிக்கலான அமைப்புள்ளவை. பீரங்கியை இலக்கின் திசையில் அமைக்க ஒரு சாதனமும், அதன் உயரத்தைச் சரிப்படுத்த வேறொரு சாதனமும் இருக்கும். இவ்விரண்டும் தனித்தனியே இயக்கப்படுகின்றன. இந்த இலக்குக்காட்டிகளை இருவகைகளில் அமைக்கலாம். நிலையாக உள்ள இலக்கை நோக்கிச் சுடப் பயன்படும் பீரங்கிகளிலும், கண்ணுக்குத் தெரியும் இலக்கை நோக்கிச் சுடும் பீரங்கிகளிலும் இலக்குக்காட்டி பீரங்கியைத் தாங்கும் வண்டியின்மேல் அமைக்கப்படுகிறது. இலக்கைக்காட்ட இதில் ஒரு டெலிஸ்கோப்பு இருக்கும். இதைக் கிடையாகவும் நேர்குத்தாகவும் உள்ள இரு அச்சுக்களில் சுழற்றலாம். டெலிஸ்கோப்பின் உயரக்கோணத்தையும் திசைக்கோணத்தையும் அளவிட வட்ட அளவைகள் இருக்கும். பிரதிபலிக்கும் பட்டகங்களைக் கொண்ட விசேஷ வடிவுள்ள டெலிஸ் கோப்புக்களைக்கொண்டு எத்திசையிலும் உள்ள பொருள்களைப் பார்த்து உயரத்தையும் திசையையும் நிருணயிக்கலாம்.

கப்பல்கள், விமானங்கள் போன்ற நகரும் இலக்குக்களைக் குறிபார்க்க உதவும் இலக்குக்காட்டி பீரங்கி வண்டியிலிருந்து வேறாக அமைக்கப்படுகிறது. இலக்கின் இருப்பிடத்திற்கும், வேகத்திற்கும் ஏற்றவாறு பீரங்கியை அமைக்க வேண்டிய உயரத்தையும் திசையையும் இது கணித்து, மின்சாரச் சாதனத்தினால் தானாகவே பீரங்கியைப் சரிப்படுத்திவிடுகிறது. இலக்குக்காட்டியிலிருந்து இவற்றை அறிந்து, டெலிபோனின் வாயிவாகப் பீரங்கியை இயக்குவோர்க்குத் தெரிவிப்பதும் உண்டு. இவ்வாறு செய்யாமல் இலக்குக்காட்டி உள்ள இடத்திலிருந்தே பீரங்கியில் உள்ள முள்ளை இயக்கி அதைச் சரிப்படுத்தலாம். நகரும் இலக்கைத் தொடர்ந்து குறிபார்க்க இம்முறை ஏற்றது. பார்க்க: வீச்சுமானி.

இலக்குமணன் தசரதருக்குச் சுமித்திரையிடம் பிறந்த மகன். இராமனுக்கு இளையவர் மூவராயினும் இளையவன் என்றவுடன் இலக்குமணனே யாவர் மனத்திலும் முன்னிற்பான். அதற்குக் காரணம் இவன் எப்போதும் இராமனை விடாது நிழல்போலப் பின் தொடர்ந்து சென்றதனாலும், இராமனுக்கு அடிமைபூண்டு தொண்டியற்றுவதே தன் நோக்கமாக கொண்டதனாலுமே. இராமன் காட்டிற்குப் போக நேர்ந்ததை யறிந்தவுடன் பெருஞ் சீற்றங்கொண்டு, கைகேயியினால் நேர்ந்ததென்ற காரணத்தினால் 'இனிப் பெண்ணாட்டம் ஓட்டேன்' என்றும், இராமனுக்கு முடிசூட்டுவதற்கு இடையூறு செய்தவர்கள்மேலெல்லாம் போர் செய்வதென்றும் துணிந்தான். இராமன் காட்டிலுறைந்த காலமெல்லாம் இராமனும் சீதையும் கவலையின்றி உறங்கும்படி இவன் விலை யூன்றிய கையோடும் வெந்துயரோடும் கண்ணிமையாமல் நின்று காவல் புரிந்தான்.

இவன் சனகன் மகள் ஊர்மிளையை மணந்தான். இராம ராவணப் போரில் அதிகாயனையும் இந்திரசித்தையும் கொன்றான். இராவணன் இறந்தபின் இராமன் ஏவலால் விபீடணனுக்குப் பட்டங்கட்டினான். இராமனுடன் நீண்டநாள் அயோத்தியில் அரசாண்ட பிறகு, இராமன் கட்டளைப்படி தன் மகனுக்குப் பட்டமளித்தான். இறுதிக் காலத்திலே சரயுநதிக் கரையிலே யோகு புரிந்து வைகுந்தம் அடைந்தான். இவனுக்குச் சௌமித்திரி, இளைய பெருமாள், இராமானுசன் எனவும் பெயர்கள் உண்டு. இவனை ஆதிசேடனின் அவதாரம் என்பர்.

இலங்கை: இத்தீவு இந்தியாவிற்குத் தெற்கில் 20 மைல் தொலைவில் தீபகற்பத்தின் தென்பகுதியிலிருந்து பாக் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுநிற்கிறது. இது அட்சரேகை 5°55'க்கும் 9°59'க்கும் இடையேயும், கிழக்குத் தீர்க்கரேகை 79°42'க்கும் 81°53'க்கும் இடை-