பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலங்கை

109

இலங்கை

யேயும் உள்ளது; இத்தீவு வடக்கே பல்மைரா முனையிலிருந்து தெற்கே தீவாந்தரம் (Dondra Head) வரையில் 270 மைல் நீளமும் 140 மைல் அகலமும் உடையது. பரப்பு : 25,332 ச.மைல். மக் : 81,03,648 (1953) 1931இலிருந்து மக்கள்தொகை 25% அதிகரித்திருக்கிறது. மக்கள் தொகை நகரங்களில் 15 சதவீதமும் நாட்டுப்புறத்தில் 85 சதவீதமுமாக உள்ளது.

இலங்கை மக்களில் 45 இலட்சம்பேர் கரவர் என்ற செம்படவரும், கோய்கமர் என்ற கமக்காரரும் கண்டியைச்சார்ந்த மலைநாட்டவருமாகிய சிங்களவர். இலங்கைத் தமிழர்கள் : சு. 7,35,000 பேர் இருக்கின்றனர். இந்தியத் தமிழர்கள்: சு.7.81,000. இலங்கை இஸ்லாமியர் 3,74,000; இந்திய இஸ்லாமியர் 36.000; பறங்கியரும் யூரேஷியரும் 41.000; ஐரோப்பியர் 5,000; மலேயர் 22,000; சில வேடர் (Veddahs) களும் உளர்.

இலங்கை மக்களில் 40 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பௌத்தர்கள். அவர்களில் பெரும்பான்மையோர் சிங்களவர்கள். மொத்த மக்கள் தொகையில் சுமார் ஐந்திலொரு பங்கு இந்துக்கள் ; கிறிஸ்தவர்கள் சு. 6 இலட்சம்பேர்; இஸ்லாமியர் சு.4.35,000.

இலங்கை

மன்னார்தீவும், யாழ்ப்பாணத் தீபகற்பமும், அதைச் சார்ந்தநெடுந்தீவு (Delfet), ஊர்காவற்றுறை (Keyts), புங்குடு தீவு, எழுவைத் தீவு, நயினாத் தீவு, அனலைத் தீவு முதலிய சிறு தீவுகளும் நீங்கலாக இலங்கைத் தீவு அடக்கமான ஒரே பரப்பாக இருக்கிறது.

தரை அமைப்பும் வடிகால்களும்: தீவின் இடையில் உள்ள பீடபூமி 3,000 அடியிலிருந்து 8,000 அடிவரை உயர்ந்துள்ளது. இதைச்சுற்றி 1,000 அடிமுதல் 3,000 அடிவரை உயர்ந்துள்ள மேட்டு நிலமும் அதைச்சுற்றிக் கடற்கரையோரத்தில் சமவெளியும் உள்ளன. கடற்கரைப் பிரதேசம் மேற்கேயும் தெற்கேயும் குறுகலாகவும் வடக்கே விசாலமாகவும் உள்ளது. பிதுருதலகலை (8,291 அடி) உயர்ந்த சிகரம். ஆதமின் உச்சி எனப்படும் சிவனொளிபாதம் 7.360 அடி உயரமானது. தீவின் நாற்புறமும் ஆறுகள் பாய்கின்றன. மகாவலி

கங்கை (206 மைல்) மிக நீண்ட ஆறு அருவை ஆற்றின் (104 மைல்) கரையில் பண்டைக்காலத் தலைநகரான அனுராதபுரம் இருந்தது. மத்தியபீடபூமியைச் சுற்றிலும் உள்ள நீர்வீழ்ச்சிகள் அழகிய இயற்கைக் காட்சிகளாகவும், இயற்கைச் சக்தியை யளிக்கக்கூடிய இடங்களாகவும் இருக்கின்றன.

தட்ப வெப்பநிலை : ஆண்டு முழுவதும் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆண்டில் தட்பவெப்ப நிலை சராசரி 80° பா. வெப்ப நிலையிலும் அதிகமாக வேறுபடுவதில்லை. உதாரணமாகத் தட்பவெப்ப நிலை கொழும்பு 79-816° பா; திரிகோண மலை 786-84° பா; கண்டி 75°-79° பா; யாழ்ப்பானம் 760-84° பா; ஈரப்பத விகிதம் மிகுதியாகவே யிருக்கிறது (75%). மழையைப் பொறுத்துத்தான் பருவநிலை மாறுபடுகிறது. வெப்பச் சலன மழையும் பருவக் காற்று மழையும் மிகுதியாகப் பெய்கின்றன. ஆண்டு தோறும் கொழும்பில் 86 அங்., கண்டியில் 84 அங்., திரிகோணமலையில் 63 அங்., வத்தவளையில் 220 அங். வடகிழக்குப் பருவக்காற்றை விடத் தென்மேற்குப் பருவக்காற்றினால் மிக்க மழை பெய்கிறது. கீழ் நிலங்களை விடப் பீடபூமிகளிலும், கீழ்க்கரையையும் வடக்குப் பிரதேசத்தையும்விட மேல் கரையிலும் சரிவிலும் மிக்க மழை பெய்கிறது.

தாவரங்கள்: தீவில் முக்கால் பாகம் இன்னும் சாகுபடி செய்யப்படாத நிலம்; பெரும்பாலும் காடாக உள்ள நிலமே மிகுதி ; வறண்ட பிரதேசக் காடுகளில் பாலை, கரும் புரசு (Satin wood), கருங்காலி (Ebony). ஹல்மில்லா முதலிய மரங்களும், ஈரப்பிரதேசங்களில் பனைவகை மரங்களும், மா, பலா, நா, ஹல், நாதுன் (Pericopsis) முதலிய மரங்களும் பெரும்பான்மையாகக் காணப்படுகின்றன.

விவசாயம்: இலங்கையின் பொருளாதாரம் தேயிலை, ரப்பர், தேங்காய் ஆகிய மூன்று விளைபொருள்களின் ஏற்றுமதி வாணிகத்தைப் பொறுத்திருக்கிறது. தொழிலாளிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள். நாட்டின் செழிப்பு அவர்களைப் பொறுத்திருக்கிறது. ஏற்றுமதியில் 95% இம்மூன்று பொருள்களுமே. மொத்த வருமானத்தில் 80% இம்மூன்று பொருள்களால் கிடைக்கிறது தேயிலைச் சாகுபடி 5.35,000 ஏக்கர் ; ரப்பர் : 6,55,000 ஏக்கர்; தென்னை : 1.0,71,000 ஏக்கர்; நன்செய்ச் சாகுபடி : 8,90.000 ஏக்கர்; நூறுலட்சம் மூட்டை நெல் சாகுபடியாகிறது.

கோக்கோ, இலவங்கம், ஏலம் முதலியவை பிற விளை பொருள்கள். வறண்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன வசதிகள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாதுக்கள்: பென்சில்கரி முக்கியமான தாதுப்பொருள். இங்குக் கிடைக்கும் கனியம் உலகிலேயே சிறந்தது. சராசரி 15,000 டன் எடையுள்ள ஏற்றுமதி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மணிகள் இங்கு மிகுதியாகத் தோண்டியெடுக்கப்படுகின்றன. மாணிக்கம், நீலக்கல், வைடூரியம் முதலியன இவற்றிற் சிறந்தவை. கிராமத்தவர்கள் அவர்களுடைய பண்டைய முறையில் மணிகளை வெட்டியெடுத்துப் பட்டை தீர்க்கிறார்கள்.

மீன் பண்ணைகள் : இலங்கையிலுள்ள மீன் பண்ணைகளிற் சில கடற்கரைப் பண்ணைகள்; சில கரையிலிருந்து தொலைவிலுள்ள கடற் பண்ணைகள்; சில ஏரிப் பண்ணைகள்; சில சுத்த நீர்நிலைப் பண்ணைகள். இங்கு ஆண்டு தோறும் 25,000 டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.

கைத்தொழில்கள்: உப்புத் தயாரித்தல் முக்கியமான கைத்தொழில். இது அரசாங்கத்தாரின் தனி உரி-