பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலவந்திகைப் பள்ளி துஞ்சிய...

117

இலவமரம்

சம்பாரமாக இது பெரிதும் உபயோகமாகிறது. சில மதுவர்க்கங்கள் செய்வதிலும் இது பயனாகிறது.மற்ற நாட்டினர் இதை மருந்துச் சரக்காகவே கருதுகின்றனர். மந்தத்தை யொழித்து உணவுப் பொருள்களைச் செரிக்கச் செய்யும் ஆற்றல் கிராம்பிற்கு உண்டு. இது எண்ணெய் வாதம், தலைவலி, பல்வலி முதலியவற்றை நீக்கும்.

இதை நீரில் போட்டுப் பலதடவை காய்ச்சி, வாலை வடித்து, இலேசாக மஞ்சள் நிறமுள்ள இலவங்கத் தைலம் எடுப்பார்கள். இந்தத் தைலம் நாளாக ஆகப் பழுப்பு நிறமாக மாறும். இதில் உள்ள முக்கிய சத்து யூஜினால் என்பது. இலவங்கத்தைலம் ஆல்கஹாலிலும் ஈதரிலும் கரையும். பல்வலிக்கு இதைத் தடவலாம். உடம்பில் ஓரிடத்தில் உணர்ச்சியில்லாமல் செய்யும் மருந்துகளில் (Local anaesthetic) இது ஒரு சிறந்த மருந்து.

கிராம்பு விதைகளை நாற்றங்காலில் இட்டுக் கன்றுகள் 6 அங்குலம் வளர்ந்தபின் 20-25 அடிக்கு ஒன்றாக முன்பே தயார் செய்து வைத்திருக்கும் குழிகளில் நடுவார்கள். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வேனிற் காலங்களில் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். அதன் பின் நீர் பாய்ச்சவேண்டிய அவசியமில்லை. 6-8 ஆண்டுகளுக்குப் பிறகு பூ எடுக்கும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு முழுப்பலன் கொடுக்கும். ஆண்டிற்கு ஒரு மரத்திலிருந்து 6 - 8 ராத்தல் வரை காய்ந்தகிராம்பு கிடைக்கும்.

இலவங்கம் மிர்ட்டேசீ என்னும் இரட்டை விதையிலைக் குடும்பத்தைச் சேர்ந்தது. நாவலும் கொய்யாவும் இந்தக் குடும்பத்தினவே. இந்த மரத்தின் விஞ்ஞானப் பெயர் யூஜீனியா கார்யோபில்லேட்டா (Eugenia caryophyllata). - இந்தச் சாதியை சைசிகியம் (Syzygium) என்றும் சொல்வர். வீ. டி. சு.

இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நன்மாறன் பாண்டிய மன்னன். இவன் தன் காலத்துத் தமிழ்நாட்டரசருள் மேம்பட்டு விளங்கினான். நக்கீரர், ஆவூர் மூலங்கிழார், வடமக்கண்ணன் பேரிசாத்தனார் ஆகிய பெரும்புலவர்களாற் பாடப் பெற்றவன் (புறம். 55,196,198).

இலவமரம் நடுத்தரமான உயரமுள்ள இலையுதிர் மரம் 50-100 அடி வளரும். சாதாரணமாகக் கிராமங்களில் தோட்டங்களிலும் வீடுகளிலும் கோவில்களிலும் காணப்படும். இதனை மலையாளக்கடற்கரையில் மிகுதியாகப் பயிர் செய்கிறார்கள். ஜாவா நாடு இலவுக்குப் பெயர்போனது. இலங்கை, பர்மா, மலேயாவிலும் பயிராகிறது. ஜனவரி முதல் ஏப்ரில் முடிய மரத்தில் காய்கள் காணப்படும். இலவங்காய் இரு முனைகளிலும் சிறுத்து, நடுவிடம் பருத்து, 4-6 அங்குல நீளமும் 2 அங்குலவிட்டமும் இருக்கும். அதுஎருக்கங்காயின் பருமனுள்ளது. காய் முற்றிவிட்டால் வெடித்து உள்ளே இருக்கும் பஞ்சும் விதைகளும் வெளிவந்துவிடும். இலவம் பஞ்சு வெண்ணிறமானது. பளபளப்பாகப் பட்டுப்போல இருக்கும். அது காயின் ஓட்டின் உட்பக்கத்திலிருந்து வளர்வது. பருத்தியிற்போல விதையில் ஒட்டிக்கொண்டிராது. இலவம் பஞ்சு மெத்தென்றிருப்பதினாவ் தலையணை, திண்டு, மெத்தை முதலியன செய்யப் பயன்படுகிறது. இந்தப் பஞ்சு நீரில் விரைவில் நனைவதில்லை. ஒட்டிக்கொள்வதில்லை. காளான் விரைவில் இதில் பற்றுவதில்லை. மிகவும் இலேசானது, நன்றாக மிதக்கும். கடலில் உயிர்காப்புக்கான கச்சை முதலிய சாதனங்கள் செய்யவும், வெப்பம், ஒளிமுதலியவை தாங்காமல் இருக்கச்செய்யும் மூடி, திரை முதலியன செய்யவும் இந்தப் பஞ்சைப் பயன்படுத்துகின்றனர்.

இலவு

1.கிளை. 2.சூலகம், குறுக்கு வெட்டு, 3.உலர்கனி வெடிப்பது. 4. விதை பஞ்சில் கிடப்பது

இலவங்காய்

1. காய். 2. காய் வெடித்துப் பஞ்சு வெளிவருவது

விதையின் நிறம் கருமை. அது வடிவில் உத்தேசமாக மிளகை ஒத்து உருண்டையாக இருக்கும். காய்க்குள் விதைகள் நிறைந்திருக்கும். இந்த விதைகளிலிருந்து