பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலூசிஸ்

122

இலை

பிரதேசங்களில் சாராயம் இறக்குகிறார்கள். மரச்சாமான்கள் செய்ய இலுப்பைமரம் மிகவும் ஏற்றதென்பர். சீ. ஆர். சே.

இலூசிஸ்: இது கிரீஸின் ஒரு பகுதியாகிய ஆட்டக்காவில் ஆதன்ஸுக்கு வடமேற்கில் சுமார் 14 மைல் தொலைவிலுள்ள சிதைந்துபோன ஒரு பழைய நகரம். டிமீட்டர் தேவன் கோயில் இங்கு உண்டு. இது மிகப் புராதனமானது. இங்கு நடந்துவந்த விழாவுக்கு இலூசினியா என்று பெயர். இரண்டாவது உலக யுத்த காலத்தில் இந்நகரத்திலிருந்து பழங்கட்டடங்கள் பல அழிவுண்டன். இப்போது இது ஒரு சிற்றூராக உள்ளது.

இலை: ஒரு செடியிலே கண்ணுக்கு மிக நன்றாகப் புலப்படும் உறுப்புக்கள் அதன் இலைகள். அவை அதன் உயிருக்கு ஆதாரமானவை. ஓருயிர் நிலைத்திருப்பதற்கு இன்றியமையாத செயல்கள் மூச்சு விடுதலும் உணவு கொள்ளுதலுமாகும். முதன்மையான இந்த இரண்டு வேலைகளும் இலைகளில் நடைபெறுகின்றன. உணவு சம்பந்தமாக இலையில் நடக்கும் காரியம் ஒளிச்சேர்க்கை (த.க.) என்பது. செடியின் உடலைக் காப்பாற்றுவதற்கு வேண்டிய ஊட்டத் தொழில்களைச் செய்வதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் அவயவங்கள் இலைகளே. இலைகள் செய்யும் தொழிலின் பயனைச் செடியின் வளர்ச்சியிலும், அதில் நடைபெறும் வாழ்க்கை முயற்சிகளிலும் கண்கூடாகக் காணலாம். செடியின் தண்டிலிருந்து வெளிப்பட்டு வளரும் உறுப்புக்களிலெல்லாம் முக்கியமான பாகம் அதன்மேல் தழைத்திருக்கும் பச்சையிலையே. இன்னும், விதையிலை, செதிலிலை, பூக்காம்பிலை, புறவிதழ், அகவிதழ் முதலிய அங்கங்களும் தண்டிலிருந்து வெளிப்படும் உறுப்புக்களே. இவற்றைப் பச்சையிலையோடு திட்டமான இயற்கையுருவவியல் முறைப் பொருளில் ஒற்றுமையுடையவை எனக் கருதவியலாது எனினும், ஒப்புமை முறைப் பொருளிலே இவையும் பச்சிலையை யொத்தனவே யாகும். இலையின் இலட்சணம் இன்னதென்று பின்வருமாறு வகுத்துக் கூறலாம்: இலையானது தண்டின் பக்கத்தில் எழும் வெளி வளர்ச்சிகளில் ஒன்று. இது புற- அக அமைப்பாவது (Dorsi-ventral), இரு சமபக்க அமைப்பாவது (Isobilateral), மைய அமைப்பாவது (Centric) உடையது; தண்டின் வளர்நுனியிலிருந்து திட்டமான வரிசைக் கிரமத்தில் தோன்றுவது: இலைக் கக்கத்தில் (Axil) ஒரு குருத்துடையது; பொதுவாகத் தட்டையாக அகன்றிருக்கும் அலகு என்னும் இலைப் பரப்பும், அதைத் தாங்கி நிற்கும் இலைக்காம்பும், அக்காம்பினடியில் ஒரு ஜதை இலையடிச் செதில்களும் உடையது.

திட்டவடிவுள்ள சாதாரண இலையில் அதைத் தண்டுடன் பொருத்தும் இலையடி ஒன்றிருக்கும். பலவகைச் செடிகளில் இந்த இலையடி அகன்று, உறைபோலத் தண்டைச் சுற்றிலுமோ, ஒரு பாகத்தை மட்டுமோ மூடிக்கொண்டிருக்கும். இந்த விதமான உறைபோன்ற இலையடியைப் புல், வாழை முதலிய ஒற்றை விதையிலைத் தாவரங்களில் நன்றாகக் காணலாம். வாழைப்பட்டை இப்படிப்பட்ட இலையடியே. இரட்டை விதையிலைத் தாவரங்களில் இலையடியின் பக்கத்திற்கொன்றாக ஒரு இணை இலையடிச் செதில்கள் சேர்ந்திருக்கும்.(படம் எண் 1).

இலைக்காம்பாவது இலையடியாவது எப்பொழுதும் மேலே அலகு என்னும் இலைப்பரப்பில் முடியும். அலகு பச்சையாக மெல்லிதாக அகன்றிருக்கும். பல வடிவங்களில் இருக்கும். இதன் விளிம்பும் பலவாறாக இருக்கும். இதில் எடுப்பாகத் தோன்றும் ஒரு நடுநரம்பும், அதிலிருந்து பிரியும் கிளைநரம்புகளாலான வலையமைப்பும் இருக்கும் (படங்கள் 2-7).

இலைகளின் நுனியானது வட்டமாக மழுங்கலாகி விரிநுனி (Obtuse) என்றும், கூரிய முனையுள்ள தாகிக்கூர்நுனி (Acute) என்றும், வால்போல் நீண்டு மெலிந்துகொண்டே போய் முடிவதாகி நீள்கூர் நுனி (Acuminate) என்றும், கூர்மையான முள்ளில் முடிவதாகி முள் நுனி (Cuspidate) என்றும், திடீரென்று முடிவதாகித் தலையிலர் நுனி (Truncate) என்றும், ஆழமான வெட்டுள்ளதாகிக் குவிநுனி (Emarginate) என்றும்,வட்டமாகிய நுனி கூரான ஒருமுனையில் முடிவ தாகி முள்முனை நுனி (Mucronate) என்றும், பற்றுக் கம்பியிலோ நூல்போன்ற உறுப்பிலோ முடிவதாகிச் சுருள் நுனி (Cirrhose) என்றும் பலவகையாக இருக்கும் (படம் எண் 2). இலைகளின் விளிம்பு ஒப்பமாகவும் நேராகவும் இருந்தால் முழு விளிம்பு (Entire) என்றும், அலைபோலவும் மேடுபள்ளமாகவு மிருந்தால் அலைவிளிம்பு (Repand) என்றும் அதிகமாக மேடுபள்ளமாக இருந்தால் நெளிவிளிம்பு (Sinuate) என்றும், வாளின் வாய்போல் அலகின் நுனியை நோக்கிய பற்களுடையதாயிருந்தால் ரம்பப்பல் விளிம்பு (Serrate) என்றும், அவற்றில் ஒவ்வொரு பல்லிலும் திரும்பவும் பல்போன்ற வெட்டு இருந்தால் இரு ரம்பப்பல்விளிம்பு (Biserrate) என்றும், நுண்மையான பற்களிருந்தால் நுண்பல் விளிம்பு, அல்லது அரவாய் விளிம்பு (Serrulate) என்றும், பற்கள் அலகின் விளிம்புக்குச் செங்கோணமாக அமைந்திருந்தால் பல் விளிம்பு (Dentate) என்றும், பற்கள் அலகின் அடியை நோக்கியிருந்தால் உளிவாய் விளிம்பு (Runcinate) என்றும், பற்கள் வட்டமாக மழுங்கியிருந்தால் வளைவுப்பல் விளிம்பு (Crenate) என்றும், விளிம்பில் தொங்கல்கள் போலத் துணுக்குக்கள் இருந்தால் தோரணவிளிம்பு (Fimbriate) என்றும், மயிர் இருந்தால் மயிர்விளிம்பு (Ciliate) என்றும், முட்கள் இருந்தால் முள் விளிம்பு (Spinous) என்றும் சொல்லப்படும்.

இவ்வாறே அலகின் புறப்பரப்பானது ஒப்பமாகவும் மயிரில்லாமலும் இருந்தால் சிலிம்பற்றது (Gla-brous) என்றும், பிசின் போல ஒட்டும் பொருள் ஏதேனும் மூடியிருந்தால் பிசுபிசுப்பானது (Glutinows) என்றும், சற்றுப் பசுமையான அல்லது நிலமான பூசுபடிந்து பளபளப்பாக இருந்தால் பூசு படிந்தது (Glaucous) என்றும், முட்கள் உடையதாயிருந்தால் முள்ளுள்ளது (Spiny) என்றும், நேரான மென்மயிர் மூடியிருந்தால் மென்மயிருள்ளது (Pubescent) என்றும், மென்மயிர் அடர்ந்து மூடியிருந்தால் சிலும் படர்ந்தது (Viilous) என்றும், குறுகிய மென்மையான மயிர் அடர்த்தியாக மூடியிருந்தால் அடர் தூவியுள்ளது (Tomentose) என்றும், நீண்டு சுருண்ட மயிர் கம்பளிபோல மூடியிருந்தால் உரோமமடர்ந்தது (Floccose) என்றும், நீண்டு விறைப்பான மயிர் மூடியிருந்தால் உரோமம் சடைத்தது (Hirsute) என்றும், இப்படிப் பலவிதமாகக் கூறப்படும். இலையின் நெசவு (Texture) உரப்பாகவும் தோல் போன்றுமிருந்தால்

தோலையொத்தது (Coriaceous) என்றும், மடியக்கூடியதாக இருந்தால் சவ்வு போன்றது (Memb-anous) என்றும், பச்சை நிறமின்றி உலர்ந்தது போலிருந்தால் சருகு போன்றது (Scarious) என்றும், தடித்து மெதுவாக இருந்தால் சதையானது (Fleshy} என்றும், சதையும் சாறும் நிறைந்திருந்தால் சோறுள்ளது (Succulent) என்றும் சொல்லப்படும்.