பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலை

124

இலை

நரம்பமைப்பு (Venation): நீரையும் தாது உப்புக்களையும் முழுவதற்கும் கொண்டுபோவதற்கும், அலகில் தயார் செய்யப்பட்ட உணவை அதனின்று எடுத்துச் செல்வதற்கும் உதவுகின்ற கடத்துக் குழாய்கள் நரம்புகள் (Veins) என வழங்குகின்றன. இவை

நரம்பமைப்பு
1. வலையமைப்பு 2. ஒருபோகமைப்பு

ஆதரவுத் திசுக்களாலே (Mechanical Tissues) பலப்படுத்தப்படுகின்றன. இந்த ஆதரவுத் திசுக்கள் மெல்லிய இலைப்பரப்புக்கு விறைப்பைத் தருகின்றன. அலகிலே நரம்புகளும் கிளைநரம்புகளும் அமைந்திருப்பது நரம்பமைப்பு எனப்படும். இரட்டை விதையிலைச் செடிகளிற் கிளைநரம்புகள் பலவாறாகப் பிரிந்து, வலை பின்னினதுபோலத் தோன்றும். இதற்கு வலை (Reticulate) நரம்பமைப்பு என்று பெயர். ஒற்றை விதையிலைச் செடிகளில் நரம்புகள் ஒன்றற்கொன்று ஒருபோகாக ஓடும். அது ஒருபோகு நரம்பமைப்பு எனப்படும்.

வலைநரம்பமைப்பில் இரண்டு வகைகளுண்டு. ஒன்று இறகு வடிவ (Pinnate) அல்லது ஒருபழு (Unicostate) அமைப்பு. இதில் பலமான நடுநரம்பு ஒன்று இருக்கும். அதிலிருந்து இருபக்கங்களிலும் நரம்புகள் எழுந்து அலகின் நுனியை நோக்கி ஓடும். இவற்றினுஞ் சிறிய நரம்புகள் இவற்றை எல்லாத் திசைகளிலும் சேர்க்கும். இவ்வாறு ஒரு வலைப்பின்னல் உண்டாகும். மற்றொன்று கைவடிவ (Palmate) அல்லது பலபழு (Multicostate) அமைப்பு. இதில் இலைக்காம்பின் நுனியிலிருந்து ஏறக்குறைய ஒத்த பலமுள்ள பல ஈரம்புகள் தோன்றி, நுனியை நோக்கியும் வெளிப்புறமாகவும் ஓடும். இந்த அமைப்பிலே இலைப் பரப்பில் பலமான நரம்புகள் அமைந்திருக்கும் வகையை யொட்டி விரியும் வகை (Divergent type) என்றும், ஒருங்கும் வகை (Convergent type) என்றும் உட்பிரிவுகள் உண்டு.

ஒருபோகு நரம்பமைப்பிலும், இறகு வடிவ அல்லது ஒரு பழ அமைப்பும், கை வடிவ அல்லது பலபழு அமைப்பும் உண்டு. முன்னையதில் எடுப்பான ஒரு நடுநரம்பிருக்கும். அதிலிருந்து கிளைநரம்புகள் எழுந்து ஒன்றற்கொன்று ஒருபோகாக அலகிள் நுனியை நோக்கி ஓடும். கைவடிவ அமைப்பில் நரம்புகள் விசிறிபோல விரிந்து, அலகின் விளிம்பை நோக்கிச் செல்லும், அல்லது ஏறக்குறைய ஒருபோகாக அலகின் நுனியை நோக்கிப் போகும்.

இலையின் வடிவம்: இலையின் வடிவங்களில் மிக்க வேறுபாடுகளுண்டு. அவை கோட்டு, ஈட்டி, வட்ட, முட்டை, சட்டுவ, சாய்ந்த, நீள்சதுர, மாங்காய், இருதய, அம்பு நுனி, வேல், இண்ணார அல்லது லயர், ஊசி, ஆப்பு, அரிவாள் முதலிய பல வடிவமுள்ளவையாக இருக்கலாம். இலையின் அலகில் ஒரு வெட்டு போன்ற பிளவு எப்பொழுதும் காணப்படும். இறகு வடிவ நரம்பமைப்புள்ள இலையில் அது நடுநரம்பை நோக்கிச் செல்லும் (இறகு வடிவ வகை). கைவடிவ நரம்பமைப்புள்ள இலையில் அந்த வெட்டு அலகின் அடியை நோக்கிச் செல்லும் (கை வடிவ வகை) (படம் எண் 3,a-0).

தனியிலையும் கூட்டிலையும் (Simple and Compound leaves) : ஓர் இவையானது ஒரே அலகுள்ளதாயிருந்து, அந்த அலகு நடுநரம்பு வரையிலுமோ அல்லது இலைக்காம்பு வரையிலுமோ போகாமல் எவ்வளவு ஆழமாகப் பிளவுபட்டு இருப்பினும் அது தனியிலை எனப்படும்.

ஓர் இலையின் அலகிலுள்ள பிளவு நடுநரம்பு வரையிலும் அல்லது இலைக்காம்பு வரையிலும் போய், அதனால் அலகானது ஒன்றுக்கு மேற்பட்டவையும், ஒன்றோடொன்று ஓட்டாதவையுமான சிற்றிலைகளென்னும் துண்டுகளாகப் பிரிவுபட்டு, அந்தப் பிரிவுகள் இலைப் பரப்பினால் சற்றும் சேர்க்கப்படாமலும்,தனித்தனியாக அடியிலே இணைக்கப்பட்டும் இருப்பின் அவ்வித இலை கூட்டிலை எனப்படும். கூட்டிலையில் இரண்டுவகைகள் உண்டு. ஒன்று இறகு வடிவக் கூட்டிலை; மற்றொன்று கைவடிவக் கூட்டிலை.

இலையின் நடுநரம்பு அல்லது நடுக்காம்பின் (Rachis) இருபக்கங்களிலும் மாறிமாறியோ அல்லது எதிரெதிராகவோ சிற்றிலைகள் இணைந்திருக்குமாயின் அது இறகு வடிவக் கூட்டிலையாகும். இதில் ஓரிறகு, சறகு, மூவிறகு, பலவிறகு கூட்டிலைகளுண்டு.

கைவடிவக் கூட்டிலையில் இலைக்காம்பின் நுனியிலிருந்து சிற்றிலைகள், பொதுவானதொரு புள்ளியிலிருந்து கதிர்கள் விரிவதுபோலப் பரவியிருக்கும். சிற்றிலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு, அவற்றை ஒற்றைக் கூட்டிலை, இரட்டைக் கூட்டிலை, மூவிலை, பல்கூட்டிலை அல்லது விரற்கூட்டிலை என்னலாம் (படம் 4-12).

இலையைப் பற்றிக் கருதும்போது குருத்திலே இலைகள் எவ்வாறு அடுக்கியிருக்கின்றன என்னும் முக்கிய

குருத் தமைப்பு

1. குருத்திலை நிலைகள்.
a. கீழ் மடிப்பு. b. நீள் மடிப்பு. C. விசிறி மடிப்பு. d. நுனியடிச் சுருள். e. முறுக்குச் சுருள் உட்சுருள். g. புறஞ் சுருள்.
2. குருத்திலை இயைபு.

a. விளிம்பொட்டு, b. திருகு.C. தழுவு. d. எதிர்மடி.

விஷயத்தையும் கவனிப்பது அவசியம். இந்தக் குருத்தமைப்பைக் (Prefoliation) கருதுவதில் குருத்தில் ஒவ்வோரிலையும் எவ்வாறு சுருட்டியிருக்கிறது அல்லது