பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலை

125

இலை

மடித்திருக்கிறது என்னும் குருத்திலை நிலையையும் (Ptyxis) இலைக்குருத்தில் சாமானிய இலைகள் ஒன்றற்கொன்று எவ்வாறு இயைந்திருக்கின்றன என்னும் குருத்திலையைபையும் (Vernation) கவனித்தல் வேண்டும்.

1. குருத்திலை நிலை சாதாரணமாகக் கீழ்மடிப்பு (Reclinate), நீள்மடிப்பு (Conduplicate) விசிறி மடிப்பு (Plicate), நுனியடிச்சுருள் (Circinate), முறுக்குச்சுருள் (Convolute), உட்சுருள் (Involute), புறஞ்சுருள் (Revolute) என வருணிக்கப்படும்.

2. குருத்திலையியைபு ஓர் இலைக்குருத்தின் குறுக்கு வெட்டைப் பரீட்சை செய்து வருணிக்கப்படும். அது விளிம்பொட்டு (Valvate), திருகு அல்லது முறுக்கு (Twisted), தழுவு (Imbricate), பட்டி அல்லது எதிர் மடி (Equitant) எனப் பலவாறாகும். டி. எஸ் .ச. இலையடுக்கு: ஒரு கிளையில் இலைகள் எழுகின்ற ஒழுங்கும். அவை ஒன்றையொன்று கூடியவரையில் சூரிய வெளிச்சத்தினின்று மறைக்காமல் இருப்பதற்கு ஏற்றபடியே இருக்கிறது. இலைகள் கிளையில் அமைந்துள்ள முறை இலையடுக்கு (Phyllotaxy) எனப்படும். வெண்டை, அரசு முதலியவற்றில் கணுவுக்கு ஒரு இலையாகக் கிளையில் மாறிமாறி அமைந்திருக்கும். இந்த ஒழுங்கு மாற்று (Alternate) அடுக்கு எனப்படும். துளசி, எருக்கு முதலியவற்றில் ஒரு கணுவில் இரண்டு இலைகள் எதிரெதிராக இருக்கும். இது எதிர் (Opposite) அடுக்கு. ஒரு கணுவிலுள்ள இரண்டு இலைகளையும் சேர்க்கும் கோடு அந்தக் கணுவுக்கு மேலோ கீழே உள்ள கணுவில் இருக்கும் இரண்டு இலைகளையும் சேர்க்கும் கோட்டுக்குச் செங்கோணமாக மேலே சொன்ன செடிகளில் இருப்பதைக் காணலாம். இந்த ஒழுங்குச் செங்கோண (Decussate) அடுக்கு ஆகும். இந்த அடுக்கினால் இலைகள் நான்கு வரிசைகளாகப் பொருந்தியிருக்கும். சிலவற்றில் ஒரு கணுவில் மூன்று (அலரி) அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணுள்ள (ஏழிலைப்பாலை) இலைகள் பொருந்தியிருக்கும். இது வட்ட (Whorled) அடுக்கு. ஒரே செடியில் எதிரடுக்கும் வட்ட அடுக்கும் காணப்படுவதுண்டு (அலரி).

இலைகள் தண்டைச் சுற்றிலும் திருகலாகப் (Spiral) பொருந்தியிருக்கின்றன. இந்த இயைபு மாற்று அடுக்கில் தெளிவாகத் தெரியும், எதிரடுக்கிலும் எளிதாகக் காணலாம். ஒரு தண்டிலுள்ள இலைகளின் அடிகளை வரிசையாக ஒரு நூலால் சேர்த்துக்கொண்டுபோனால் அந்த நூலானது தண்டைச் சுற்றிச் சுற்றி ஒரு திருகல் கோடாக வருவது தெரியும். இந்தத் திருகற்கோடு பிறவித் திருகல் (Genetic spiral) எனப்படும். ஓர் இலைக்குச் செங்குத்தாக மேலே இருக்கும் அடுத்த இலைக்கு வருவதற்குள் சில இலைகளைத் தாண்ட வேண்டும். ஒன்றோ, இரண்டோ, சிலவோ சுற்றுக்கள் (Cycles) கிளையைச் சுற்றவேண்டும். உதாரணமாகப் புல்வகைகள், சம்பு, இஞ்சி, மஞ்சள் முதலியவற்றில் மூன்றாவது இலை முதல் இலைக்கு நேரே மேலே ஒரே கோட்டில் இருக்கும். அதை அடைய நடுவில் ஓர் இலையைக் கடக்கவேண்டும். கிளையை ஒரு சுற்றுச் சுற்ற வேண்டும். இச்செடிகளில் இலைகள் இரண்டு வரிசையாக அமைந்திருக்கும். கோரைச் சாதிகளில் நான்காவது இலை முதலிலைக்கு நேர் மேலே இருக்கும். அதை இரண்டு இலைகளைக் கடக்கவேண்டும். தண்டை ஒரு சுற்றுச் சுற்றி வரவேண்டும்; இலைகள் மூன்று வரிசையாக அமைந்திருக்கும். வெண்டை, செம்பருத்தி முதலியவற்றில் ஆறாவது இலை முதலிலைக்கு மேலே வரும். ஐந்து இலைகளைத் தாண்டித் தண்டை இரண்டு சுற்றுச் சுற்றிவரவேண்டும். இலைகள் ஐந்து வரிசையாக அமைந்திருக்கும். இலைகள் பொருந்தியிருக்கும் செங்குத்து வரிசை இலைப்பத்தி (Orthostichy) எனப்படும்.

இலையடுக்கும் விரிவும்

1, 2, 3 முதலியவை இலைகளைக் குறிக்கும். A-யில் இலைகளின் பத்தியையும். பிறவித் திருகலையும் காணலாம். B-யில் பிறவித் திருகல் படமும் விரிவுக் கோணமும் தெரிகின்றன.
1. புல் A இலையடுக்கு 1/2, B விரிவுக் கோணம் 180°
2. கோரை A,,1/3.,,120°

3. வெண்டை,,2/5,,144°

இலையடுக்குக் கணக்கை ஒரு பின்ன எண்ணினால் குறிப்பதுண்டு. ஓர் இலையிலிருந்து அதற்கு நேராக மேலே அதாவது செங்குத்தான ஒரே கோட்டிலுள்ள அடுத்த இலையை அடைவதற்குத் தண்டை எத்தனை