பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலை

128

இலை

யிலைத் தாவரங்களில் வலை போலவும் அமைந்திருக்கும். வெண்டைக் குடும்பமாகிய மால்வேசியில் முக்கிய நரம்புகள் கைவடிவமாகப் பிரிந்துள்ளன.

இலைகளின் மாறுபாடுகள் : பல தாவரங்களில் இலைகள் வெவ்வேறு உறுப்புக்களாக மாறுபட்டு வெவ்வேறு

காத்தள்

1. கிளை. 2. பூ.
இலை நுனி பற்றுக் கம்பியாக

மாறியிருக்கிறது.

தொழிலைச் செய்து வருகின்றன. சிலவற்றில் இவை நீண்டு மெல்லிய கம்பி போன்று சாதாரணமான வில்லைபோலச் சுருண்டிருக்கும். இவை 'பற்றுக் கம்பிகள்' அல்லது கொடிச் சுருள்கள் எனப்படும். பற்றுக் கம்பிகள் கொடிகளிலே உண்டாகும். இவை ஏதாவது மரம், கிளை, கொழுகொம்பு முதலிய பொருளைத் தொடுமானால் அந்தத் தூண்டலினால் சுருளத் தொடங்கி ஆதாரத்தைப் பற்றிக்கொள்ளும். பற்றுக் கம்பியின் உதவியால் கொடி மேலே ஏறிப்போக முடியும். முழு இலையுமே பற்றுக் கம்பியாக மாறலாம் (காட்டுப் பட்டாணி), அல்லது இலை நுனி மட்டும் மாறலாம் (காந்தள்). கூட்டிலைகளிலுள்ள சிற்றிலைகளில் ஒன்றே சிலவோ மாறலாம் (பட்டாணி, பிக்னோனியா சாதி). சிலவற்றில் கொக்கி'களாக மாறும். பிக்னோனியா கிராஸிலிஸ் என்னும் அழகிய கொடியில் இலையின் நுனியிலுள்ள சிற்றிலை மூன்று சிறு கொக்கிகளாக மாறியிருக்கும்.

இவற்றால் மரப்பட்டையையோ சுவரையோ பற்றிக்கொண்டு கொடி படரும். இலைகள் முள்ளாகவும் மாறும். செடியைக் காக்க உதவும் இந்த முட்கள் இலைகளே என்பதற்கு அடையாளம் அவை கிளையில் தோன்றும் இடமும், அவற்றின் கக்கங்களில் குருத்துக் கள் அல்லது கிளைகள் தோன்றுவதுமாகும். நாக தாளி அல்லது சப்பாத்திச் (ஒப்பன்டியா ) செடியில் சாதாரண இலை விரைவில் உதிர்ந்துவிடும்; அதன் கக்கக் குருத்திலிருந்து உண்டாகும்நுண்ணிய இலைகள் முட்களாக மாறிவிடுகின்றன. மருந்து அல்லது முள்ளுக் கடம்பு (பெர்பெரிஸ்) என்னும் செடியில் இலையே முள்ளாக ஆகிவிடுகிறது. இலையின் நுனி மட்டும் முள்ளாகலாம் (ஈச்சமரம்). இலையின் விளிம்பில் முட்கள் தோன்றலாம். (கற்றாழை: பிரமதண்டு). முள்ளுக் கடம்பு செடியில்

அம்மாதிரி உலர்ந்தவையாக, இலைகள் செதில்களாக மாறுவதுண்டு. இலைமாறுபாடுகள் மெல்லியவாக, காம்பின்றி, சவ்வுபோல, பழுப்பு அல்லது வெண்ணிற மாக இருக்கும். அவை கக்கக்குருத்துக்களைக் காக்கும். மற்றும் சில செடிகளில் செதிலிலைகள் தடித்து, சதைப் பற்றுள்ளவையாகி, நீரையும் உணவையும் சேமித்து 2 சீமைவேலமரத்தின் இலை . 3. 1. நாற்றிலுள்ள முழு இலை 2. தட்டைக்காம்பு வளர்ந்து இரண்டு ஈர்க்குக்கள் மட்டும் சிற்றிலையுடன் காண்கின்றன. முற்றிலும் தட்டைக் காம்பாகவே இருப்பது. வைத்துக்கொள்ளும் (வெண்காயம்). செதிலிலைகள் நிலத்துக்குள்ளிருக்கும் மட்டத்தண்டுக் கிழங்கு (Rhizome), கிழங்கு (Tuber), பூண்டு (Bulb), கங் தம் (Corm) ஆகியவற்றிலெல்லாம் உண்டு ; நிலத்தின் மேல் வளரும் சாதாரணத் தண்டிலும் செதிலிலைகள் புலாலூண்செடி. நெப்பெந்த்திஸ் நெப்பெந்த்திஸ் இலையின் நடுக்காம்பு நீண்டு, பற்றுக் கம்பியாக வும் பூச்சியைப் பிடிக்கும் ஜாடியாகவும் மாறியிருக்கிறது. . உண்டு. மாமரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள குருத் தைச் செதிலிலைகள் மூடியிருப்பதைக் காணலாம். புதியனவாகத் தளிர்கள் உண்டாகும்போது அதுவரை யிலும் நுனிக் குருத்தைத் தீங்கு நேராமற் காத்து வந்த செதிலிலைகள் விழுந்துவிடும். மாவின் கொம்பை உற் றுப் பார்த்தால் அங்கங்கே சிறிது சிறிது தூரத்தில் விழுந்துபோன செதிலிலைகளின் வடுக்கள் நெருங்கிய சுற்றுக்களாகத் தோன்றும் ஒரு சுற்றுக்கும் அடுத்த தற்கும் இடையில் உள்ளது ஒரு பருவத்தின் வளர்ச்சி யாகும். தண்ணீர்விட்டான் கிழங்கு (ஆஸ்ப்பராகஸ்)