பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலை

129

இலை

முதலியவற்றில் தண்டே இலைபோல மாறி இலையின் தொழிலைச் செய்யும். அதில் இலை செதிலாக மாறி யிருக்கும். சில தாவரங்களில் (சீமை வேல் = ஆஸ்திரேலிய வேல மரம்) இலைக் காம்பு அல்லது அதன் தொடர்ச்சியாக உள்ள நடு ஈர்க்குத் தட்டையாக இலைபோல மாறும். அதற்குத் தட்டைக் காம்பு (Phyll.de) என்று பெயர் என மேலே சொல்லப்பட்டது. இலையின் அலகு விதையி விருந்து முளைக்கும் நாற்றில் மட்டும் காணும், பிறகு உதிர்ந்து விடும். அப்பால் அலகு வளர்வதே இல்லை. இலைத் தண்டு கிடைமட்டமாக இல்லாமல் செங்குத் தாக இருக்கும். இந்த மரம் ஒரு பாலைத்தாவரம். சாதாரண இலைக்கு மாறாக இலைத் தண்டு மட்டுமே வளர்வதால் நீராவிப் போக்குக் குறையும். இலைத் தண்டு செங்குத்தாக நிற்பதால் வெப்பம் மிக்க நடுப் பகலிலே சூரிய ஒளி அதன் விளிம்பில் மட்டுமே விழும். மற்றும் சில செடிகளில் இலையானது பூச்சிகளைப் பிடிப்பதற்கான உறுப்பாக மாறுகிறது. உதாரணமாக நெப்பெந்த்திஸ் என்னும் செடியின் இலை ஜாடிபோன்ற உறுப்பாகப் பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது. விதையிலைகளும் பூக் காம்பிலைகளும், பூவின் உறுப்புக் களும் இலையுருவங்களே என்பர். காலம் இலையுதிர்தல்: தாவரங்களிலுள்ள இலைகள் சில தமது வேலையைச் செய்து, பிறகு வாடி உலர்ந்து சருகாக உதிர்ந்துவிடுகின்றன. அவ் வாறு விழுந்தருணத்தில் சாதாரணமாக அவற்றின் . 80180 இலை உள்ளமைப்பு 1. புறமேல் தோல். 2. மேற் புறணி. 3. கிாதி உறை. 5 நாரணு. 6. நீர்க் குழாய். 7. சல்லடைக் குழாய் வெளி.10.காற்றறை. 11. இலைத் தொளை. 12. கீழ்ப்புற 1 பசுமை நிறம் மாறி, பழுப்பு, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு முதலிய நிறங்கள் அவற்றில் தோன்றும். பூவரசம் பழுப்பின் மஞ்சள் நிறமும் நாட்டுவாதுமைப் பழுப்பின் செந்நிறமும் பலரும் பார்த்திருப்பார்கள். சம தட்ப வெப்பநாடுகளில் கூதிர்காலத்தில் இலைகள் உதிரும்.

அப்போது பழுப்பிலைகள் பல அழகிய வண்ணங்களும் சாயைகளும் உடையனவாயிருக்கும். இலைகள் உதிரும் போது, பல மரங்களில் இலைத்தழும்பு அல்லது வடு கிளைகளில் காணும். அயன மண்டலத்துக்குப் புறம் பான வலயங்களில் பெரும்பாலான மரங்களின் இலைகள் சில மாதங்களே இருந்து, ஐப்பசி - தை திங்கள் களாகிய குளிர்காலம் தொடங்குமுன் உதிர்ந்துவிடும். வெப்ப நாடுகளிலுள்ள மரங்களின் இலைகள் பெரும் பாலும் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலும் மரங் களில் இருக்கும். அயன நாடுகளில் வறட்சியான காலத் தில் பல மரங்களில் இலையுதிரும். மரங்கள் இலையை உதிர்க்கும் காலமானது நாடுதோறும் அந்த அந்த நாட் டின் தட்பவெப்ப நிலையின் தன்மைக்கு ஏற்ப மாறு படும். இலையுதிரா மரங்கள் என்றும் நிலைப்பசுமை மரங் கள் என்றும் சொல்லப்படும் பைன், நாரத்தை, எலு மிச்சை, மா முதலிய மரங்களும் அவ்வப்போது சிலசில இலைகளை உதிர்க்கும். எனினும் எப்போதும் பசுமை யாகத் தோன்றிக்கொண்டே இருப்பதற்குப் போது இலைகள் இருந்துகொண்டே மான இருக்கும். அவற்றில் இலையுதிர்வதற்கு முன்பு சில மரங்களில் இலைக் காம் பின் அடிப்பகுதியினுள்ளே குறுக்குவாட்டில், ஒரு படை தக்கைத்திசு உண்டாகும். இந்தப் படையிலுள்ள அணுக் கள் ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்து வேறாகும். அப்போது இலைக்கும் தண்டுக்கும் பிணைப்பு நடுவிலுள்ள குழாய் களால் மட்டுமே இருக்கும். அதனால் காற்று அடித்தா 17 அடுக்கு. 4. குழாய் முடிச்சு .8.சோற்றணு9. இடை ணி. இலை லும், வேறு என்ன நேர்ந்தாலும் பொட்டென் விழுந்து விடும். விழுவதற்கு முன் 3 இலையிலிருந்து நீர் போய் விடுவதால் இலை உலரும். அச்சமயத்தில் இகூயி லுள்ள பொருள்களில் 4 சில அதிலிருந்து தண் டுக்குள் திரும்பிச் செல் இம். அவையெல்லாம் பிறகு மரத்தின் வளர்ச் 6 சிக்கு உதவும். இலைத் தழும்பின் மேலே 7 தக்கை வளர்ந்து காப் பாக இருக்கும். இலையின் உள் 9 ளமைப்பு : 11 12 சாதாரண மான இலையில், மேற் பரப்பு. கீழ்ப்பரப்பு 10 என்ற இரண்டு பரப்புக்க ளு ண்டு. மேற்பரப்பு ஒளி ஊடுருவத் தக்கது; நீரில் நனையாதது. அது மெல்லிய தோல்போன்ற புறணியாலானது. கீழ்ப் பரப்பும் ஒரு புறணியா லானதே. அதில் மிகவும் நுண்ணிய தொளைகள் உண்டு. அவற்றின் வழியா கவே கார்பன் டையாக்சைடும், ஆக்சிஜனும் இலைக்குள் புகவும் வெளிவரவும் செய்யும். நீராவியும் வெளிவரும். இரண்டு புறணிகளுக்கும் இடையே உள்ள உயிரணுத் தொகுதி இலைநடுச் சோற்றணு (Mesophyli) எனப் படும் மேற்புறணியையடுத்து உள்ளே குறுகி, நீண்ட

17