பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலைப்பூச்சி

131

இலையுதிர் மரங்கள்

ஆகாசத் தாமரைப் (த.க.) பூவின் அமைப்பை ஒத் திருக்கிறது. வெப்ப நாடுகளில் குளங்கள் உலர்ந்து போகும் வேனிலிலும், குளிர் நாடுகளில் குளிர்காலத் திலும் குருத்துக்களும் விதைகளும் குளத்தின் படுகை யில் கிடந்து, ஏற்ற காலம் வரும்போது மேலே எழும் பிப் புதிய செடிகளாக வளரும். இலைப்பாசி பூக்குந்தாவரங்களிலெல்லாம் மிகச் சிறிய செடிகளடங்கியது. லெம்னேசீ என்னும் குடும்பத்தி லுள்ளது. லெம்னா என்னும் கிரேக்கப் பெயர் இச் செடிகள் நீருள்ள அல்லது சதுப்பான இடத்தில் வாழ் வதைக் குறிக்கும். இதில் ஏறக்குறைய 30 இனங்க ளுண்டு. அவை 4 சாதிகளாக லெம்னா, ஸ்பைரொடீலா, வுல்பியா, வுல்பியெல்லா என ப் பகுக்கப்பட்டிருக் கின்றன. லெம்னாவில் ஒரே வேரும், ஸ்பைரோடீலாவில் பல வேர்களும் உண்டு. மற்ற இரண்டு சாதியிலும் வேர் இல்லை. 2 3 இலைப்பாசி W. வேரில்லாத சாதி, வுல்பியா. A. வுல்பியா: செடியின் குறுக்கு வெட்டு, பூக்கொத்தின் வழி யாகச் செல்வது. 1. நடுவில் குழிவான பகுதி: பூக் கொத்து உண்டாகும் இடம். 2. கேசரம்: இது ஓர் ஆண் பூ. 3. சூலகம் : இது ஒரு பெண் பூ. D. ஒற்றை வேர்ச் சாதி, லெம்னா. B. லெம்னா : பூக்கொத்து. நெடுக்கில் வெட்டியிருக்கிறது. 1.மடல்.2,3 கேசரங்கள் (ஆண் பூக்கள்). 4. சூலகம் (பெண் பூ). 5.விதை. C. லெம்னா : விதை முளைத்தல். 1. விதையின் வெளியுறை. 2. விதையிலை, 3. முளைக் குருத்து. S. பலவேர்ச்சாதி ஸ்பைரொடீலா. இலைப்பாசி இனங்கள் உலக முழுவதும் சம தட்ப வெப்ப வலயத்திலும், உப அயன மண்டலத்திலும் பரவி யிருக்கின்றன. இலைப்பாசியை மீன்களும் வாத்து முதலிய நீர்ப்பறவைகளும் இரையாகக்கொள்ளும். வாத்துப் பாசி (Duck weed) என்றே இதை மேனாட்டு மொழிகளில் அழைக்கின்றனர். வளர்க்கும் தொட்டிகளில் இதை இடுவதுண்டு. இலைப்பூச்சி (Phyllium) : இது கரப்பான் பூச்சி, இடையன் பூச்சி ஆகிய இவற்றின் வமிசத்தைச் மீன்

சேர்ந்தது. இலைபோல் அகன்ற உடலையும் இறக்கை களையும் கொண்ட இப்பூச்சியை இலைகளிலிருந்து வேறு பிரித்து எளிதிற் காண இயலாது. இது பூச்சிகளினிடை யிற் காண்கிற தற்காப்பு முறைகளி லொன்றை விளக்கிக் காட்டுகின் ஜே.சா. றது. இலையுதிர் மரங்கள்: சில மரங்கள் ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு குறித்த பருவத்தில் இலைகளை யெல்லாம் ஒரே தடவையில் உதிர்த்து விடுகின் றன. பிறகு அவற்றில் புதிய இலைகள் தளிர்க்கின்றன. இலவு, முள்ளிலவு. முள்முருங்கை, புரசு, தேக்கு, வேங்கை முதலியவற்றில் இலை இப்படி உதிர் இலைப்பூச்சி வதைக் காணலாம். இவற்றை இலையுதிர் மரங்கள் என்பர். இவற்றின் தோற்றம் ஆண்டு முழுவதும் ஒரே விதமாக இராமல் ஒரு சமயத்தில் இலைகளில்லா மல் வெறுங் கிளைகள் மட்டுமே தெரியும். மற்றும் சில மரங்கள் ஆண்டு முழுவதும் சற்றேறக் குறைய இலையுதிர் மரங்கள் உதவி : இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி அலுவலகம். உதகமண்டலம். ஒரே விதமாகப் பசுமையாகத் தோன்றும். அவற்றில் இலைகள் எப்போதும் இருக்கும். அவற்றின் இலைகளும் உதிரும்; ஆயினும் எல்லாம் ஒருங்கே உதிர்வதில்லை; சில சிலவாக உதிரும். ஒரே தடவையில் பேரளவுக்கு உதிருமாயின் புதிய இலைகள் உண்டான பிறகே அப் படி உதிரும். இப்படி ஆண்டு முழுவதும் பச்சை யாகவே தோன்றும் மரங்கள் இலையுதிரா மரங்கள்