பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையுதிர் மரங்கள்

132

இலையுதிர் மரங்கள்

எனப்படும். மா, பலா, பூவரசு முதலியவை இவற் திற்கு உதாரணங்கள். இலையில்லாமல் வறிதாக நிற்கும் காலம் சில மரங் களில் (அரசு, ஆச்சா) ஒரு வாரம் அல்லது பத்து நாள் மட்டுமே. முள்ளிலவு இரண்டு மாதத்துக்கு மேலும் இலையின்றி நிற்கும். வெள்ளைக் கடம்பு அல்லது பெருஞ் சோலி மரம் (ஹைமேனொடிக்ட்டியான்) ஆறு மாத காலம் கூட இலையில்லாமல் இருக்கும். ஒரே இனத் திலேயே கால நிலைக்கும், மரம் வளர்கின்ற இடத்திற் கும் தக்கபடி இலையுதிர் மரம் இலையுதிராமலும் இருக் கும் (தேக்கு). இலையுதிர் காலமும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்பப் பல பகுதிகள் பலவாறாக இருக்கும். இலையுதிர்வது வெப்ப நாடுகளிலும் காணப்படுகின்ற தாயினும், சம தட்ப வெப்ப நாடுகளில் இது மிக நன் றாகக் காணும். அங்கு வேனில் கழிந்து குளிர்காலம் தொடங்குவதற்குமுன் இடைப்பட்ட காலத்தில் இலை கள் உதிரும். இக்காலத்தை இலையுதிர்காலம் என்றே சொல்வதுண்டு. கிளையும் கொப்பும் எல்லாம் பனி விழுங் குளிர்கால முழுவதும் இலையின்றி வறிதாக இருக்கும். அடுத்த வசந்தகாலம் வரும்போது புதிய இலைகள் தோன்றும் இலையுதிர் மரங்களின் இலைகள் சாதாரண மாக அகலமாக இருக்கும். ஓக், ஆஷ், பீச்சு, பர்ச், எல்ம் என்பவை உதாரணங்கள். இலைகள் உதிர்வதற்கு முன் அவற்றிலுள்ள உணவுப் பொருள் கிளைகளுக்குள் இழுத்துக்கொள்ளப்படும். வைக்கப்பட்டு, அடுத்த இளவேனிலில் பயனாகும். உதி ரும் இலைகள் மிக மெல்லியவை. ஆதலால் அவை மரத் தில் இருந்தால் குளிரால் உறைந்து பட்டுப்போகும். மரத்துக்கு அவற்றிலுள்ள உணவு அத்தனையும் கிடையா மல் போகும். மேலும் அகலமான இலைகளின் மேல் பனி படிந்தால் மிகுந்த பளுவாகும். அதனால் கிளைகள் முரிந்து போகலாம். இவற்றினும் முக்கியமான கார ணம் ஒன்றுண்டு. இலைகளின் பரப்பிலிருந்து நீர் ஆவி யாக அங்கே அது சேமித்து வெளிவந்துகொண்டே இருக்கும். இது வேர் களின் வழியாக மரம் உட்கொள்ளும் நீர். குளிர்காலத் தில் நீர் உறிஞ்சுதல் தடைபடும். உட்கொள்ளும் நீரைவிட வெளிப்போவது அதிகமாகும். இதனால் மரத் துக்குக் கேடு நேராதபடி குளிர்காலம் தொடங்குவ தற்கு முன்பே இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. இலைகள் விழுவதற்கு முன் பழுப்பாகின்றன. பழுப்பு நிறப்பொருளும் இலைகளில் எப்போதும் உண்டு. ஆனால் அது அவற்றிலுள்ள பச்சை நிறப்பொருளில் மறைந்து போய்த் தோன்றாமல் இருக்கும். இலைகள் தீவிரமாக வேலை செய்யாமல் மந்தமாகச் செய்யும் காலங்களில் சில புதிய பொருள்கள் இலையில் உண்டாகின்றன. அவை செந்நிறமானவை. அவற்றின் நிறமும் பழுப்பிலை யில் காணும். பல மரங்களில் இலை விழுவதற்கு முன் இலைக்காம்பில் அது தண்டுடன் சேரும் இடத்துக்கு அருகில் தக்கைப்பொருள் ஓர் அடுக்காக உண்டாகும். அதனால் அந்த இடத்தில் இலையின் பலம் குன்றிவிடும். அப்போது சிறு காற்றடித்தாலும் ஏதாவது தொட்டா லும் இலை விழுந்துவிடும். பார்க்க: இலை-இலை யுதிர்தல். சம தட்ப வெப்ப நாடுகளில் இலையுதிர் மரங்களாக இருக்கும் சில மரங்கள் வெப்பநாடுகளில் வளரும்போ து இலையுதிரா மரங்களாகக் காண்கின்றன. சில சண்பக மரங்கள் அத்தகையன. இலையுதிர் மரங்களில் பல மிக நல்ல வேலைக்கு உதவு வன (பார்க்க: மரம்). மரம் வெட்டும் தொழிலினர் அகன்ற இலைகளுள்ள இலையுதிர் மரங்களை வன்மரங்கள் (Hard woods) என்று அழைப்பதுண்டு.

தென்னிந்திய இலை யுதிர் மரங்கள்: தென்னிந்தியக் காடுகளில் - அதிலும் சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைகளில் நூற்றுக்கும் அதிகமான இனங்கள் காணப் படுகின்றனவாயினும், சாதாரணமான மக்களுக்குப் பத்துப் பன்னிரண்டு மட்டுமே சாதாரணமாகத் தெரி யும். தேக்கு, நூக்கு வெண் தேவதாரு, ஆயினி, மத்தி, வேங்கை, இருள், வெண் தேக்கு ஆகியவை மிகப்பழங் கால முதல் நன்கு தெரிந்த மரங்களாகும். அவையே கட்டடத்திற்கும், நாற்காலி முதலிய வீட்டுச் சாமான் களுக்கும் கப்பல் தோணி கட்டுவதற்கும் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும் அவ்வேலை களுக்கும் மரச்சாமான்களுக்கும் ஏற்றவையான வேறு சில மரங்களும் உண்டு. அவை தேக்கு, நாக்குகளுக்கு ஒப்பானவையே. அவற்றுள் செங்குறிஞ்சி (Gulta travancorica), வேடங்கரணை (Stereospermum xylocarpum), சோலை வேங்கை (Bischofia java- nica) என்பவை சிறப்பாகச் சொல்லத்தக்கவை. இம் மரங்கள் ஒவ்வொன்றையும் பற்றித் தனிக்கட்டுரை பார்க்க. கே. என். ரா. இலையுதிரா மரங்கள் என்பவை ஆண்டு முழு வதும் சற்றேறக்குறையப் பசுமையாகவே இலையோடு கூடி இருக்கும். இலையுதிராத சிறுசெடி, குற்றுமரங்களும் இலையுதிரா மரங்கள் உதவி : இராச்சியக் காடு வளர்ப்பு அதிகாரி அலுவலகம், உதகமண்டலம். கூட உண்டு. இந்தத் தாவரங்களில் புதிய இலைகள் உண்டாகும் வரையில் உள்ள இலைகள் உதிர்வதில்லை. இப்படி இலைகள் புதியன தோன்றுவதும் பழையன உதிர்வதும் சாதாரணமாக நமக்குத் தெரிவதில்லை. பல இலையுதிராத் தாவரங்களில் ஓர் இலையானது பல