பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழை

135

இழை

பண்புகள்: தூய பருத்தியிழை நிறமும் மணமும் அற்ற பொருள். இது காற்றில் எவ்வித மணமும் இன்றி எரியும். இது கருகும்போது காரமான நாற்றம் உண்டா கும். இதன் இழுவலிமையும், வெப்பத்தையும் மின் சாரத்தையும் கடத்தும் திறனும் இதன் ஈரநிலையைப் பொருத்திருக்கின்றன. மிகவும் வறண்ட பருத்தி இழை களை நூ ற்கும்போது அவற்றில் மின்சாரம் உண்டாகிப் பொறிகள் தோன்றக்கூடும். ஆகையால் நூற்கும்போது பருத்தியில் சிறிது ஈரம் இருத்தல் நலம். ஈரப் பருத்தி யின் இழுவலிமை காய்ந்த பருத்தியிலும் 10 முதல் 20% வரை அதிகம். ஈரத்தை உறிஞ்சும்போது பருத்தியின் குறுக்களவு 44% வரையிலும் நீளம் 10% வரையிலும் மிகுகின்றது. ஈரப் பருத்தியைச் சூடேற்றினால் அது ஓரளவு களிபோலாகும். இந்நிலையில் உள்ள பருத்தித் துணியை வலிவாக அழுத்தினால் அதில் பலவித மெருகு களை ஏற்றலாம்; அணிக்கோடுகளை முத்திரையீடலாம். ரசாயனப் பகுப்பின்படிப் பருத்தி இழையில் 85·5% செல்லுலோஸும் 5% பெக்டின் முதலிய புரோட்டீன் களும், 0.5% கொழுப்பும் மெழுகும், 1% நிறப் பொருள் களும் உலோகப் பொருள்களும், 8% நீரும் உள்ளன வென்று அறியப்பட்டுள்ளது. பருத்தியில் சோடியம், கால்சியம், இரும்பு ஆகிய உலோகங்களின் உப்புக்களும் உள்ளன. பருத்தியில் உள்ள செல்லுலோஸ் மற்றப் பொருள்களின் கலப்பில்லாத மிகத் தூய வகையானது. காரங்களின் வினை : மற்றச் செல்லுலோஸ் இழை களைப்போலவே பருத்தியும் சாதாரணமாகக் காரங் களால் பாதிக்கப்படுவதில்லை. ஆயினும், சோடாக் காரத்தினால் பருத்தியை அழுத்தத்தில் வேகவைத்தால் அதன் இழுவலிமை குறைகிறது. அடர்ந்த காரக் கரைவுகளில் பருத்தியை நனைத்தால் அதன் இழைகள் பருத்து நீளம் குறைகின்றன என்பதை 1844~ல் ஜான் மெர்சர் என்பவர் கண்டார். இவ்வாறு பருக்கும் இழை கள் சாதாரண இழைகளைவிட நன்றாகச் சாயத்தை ஏற்கின்றன. இவ்வாறு மாறிய இழைகளைப் பழைய நீளத்திற்கு இழுத்துக்காரத்தைக் கழுவி எடுத்தால் அவ் விழைகள் ஒரு மினுக்கத்தைப் பெறுகின்றன என 1899-ல் லோவே (Lowe) என்பவர் கண்டார். இதை அடிப்படையாகக்கொண்டு ஆடைகளுக்கு மெருகேற் றும் முறை மெர்சரித்தல் (Mercerizing) எனப்படு கிறது. குலாட்டெர்னரி அம்மோனியம் ஹைடிராக் சைடு. சோடியம் சிங்கேட்டு, கால்சியம் தயோசய னேட்டு ஆகிய கரைவுகளும் இதே விளைவை நிகழ்த்து கின்றன. அமிலங்களின் வினை: ஹைடிரோகுளோரிக் அமில் மும், கந்தகாமிலமும் குளிர்ந்த, நீர்த்த நிலையில் பருத்தி யைப் பாதிப்பதில்லை. ஆனால் சூடான அமிலங்கள் பருத்தியிலுள்ள செல்லுலோஸைத் தாக்கி, அதை ஹைடிரோ செல்லுலோஸ் என்ற பொருளாக மாற்று கின்றன. செறிந்த : ஹைடிரோகுளோரிக அமிலம் செல்லுலோஸ் இழைகளை அரித்து மெதுவாகக் கரைக் கிறது. ஆனால் அடர் கந்தகாமிலம் குளிர்ந்த நிலையில் செல்லுலோஸைப் பெரிதும் வீங்கவைக்கிறது. இவ் வாறு வீங்கிய செல்லுலோஸைக் கழுவிக் காய வைத் தால் இது ஓரளவு ஒளி புகும் தன்மையை அடைந்து விறைப்பாகிறது. இத்தன்மைகளைப் பருத்தியின்மேல் ஏற்றும் மெருகுமுறை, ஆர்கண்டி (Organdy) மெருகு முறை எனப்படும். கரிம அமிலங்களில் பார்மிக அமிலத் தைத் தவிர மற்றவை பருத்தியை அதிகமாகப் பாதிப்ப தில்லை. ஆளி இழை (Flax): ஆளிச் செடிகளிலிருந்து (த.க.) தயாரிக்கப்படும் இழை ஆளியிழை எனப்படும்.

விதைகள் முற்றுமுன் செடிகளைப் பிடுங்கி, இலைகளை யும் விதைகளையும் நீக்கிக் கிளைகளைப் பிரித்தெடுத்து இரும்புச் சீப்பால் வாரினால் அவை இழைகளாகின் றன. அவைகளை அழுகவைத்துக்கிளைகளின் மேல்தோலையும், அதிலுள்ள பெக்ட்டின் முதலிய பொருள் களையும் நீக்கி விடலாம். அவற்றைச் செம்மையாக அடித்து மற்றப் பொருள்களையும் அகற்றிவிட வேண்டும். இப்போது எஞ்சும் பொருள் அநேகமாகத் தூய செல்லுலோஸா லாகியது. இவ்வாறு பெறப்படும் இழைகள் 11 முதல் 1 அங்குலம் வரை நீளமும், 0.0085 அங்குலம் அகல மும் கொண்டவை. இவை மிருதுவான பளபளப்பான இழைகள். பருத்தி இழைகளைவிட இவை உறுதி யானவை. ஆளிச்செடி முக்கியமாக எகிப்திலும் ஐரோப் பிய நாடுகளிலும் பயிராகிறது. ராமி (சீனப்புல் Ramie) : காஞ்சொறியை ஒத்த சிறு செடிகளிலிருந்து இந்த இழை தயாராகிறது. (பார்க்க: அர்ட்டிகேசீ). பல நூற்றாண்டுகளாகச் சீனா வில் பயிராகிவந்த இச்செடி இப்போது பார்மோசா, ஜப்பான், பிலிப்பின் தீவுகள் ஆகிய பிரதேசங்களிலும் பயிராகிறது. தண்டு முற்றியதும் அதை வெட்டி எடுத் துச் சீவி இழைகளைப் பெறலாம். இழைகளிலுள்ள பிசினை நீக்கி, உலர்த்தி, அவற்றைப் பயன்படுத்தலாம். சுமார் 12 அங்குலம் நீளமுள்ள இந்த இழைகள் எல்ல வலிமையும் பளபளப்பும் உள்ளவை. தனியாகவும் மற்ற இழைகளுடன் கலந்தும் இவற்றைப் பயன்படுத்த லாம். ராமி இழையானது வாயு விளக்குக்களின் எரி வலைகள் (Mantle), காசிதம், கித்தான் ஆடைகள், கயிறு முதலியவை செய்யப் பயன்படுகிறது. சணல்: பருத்திக்கு அடுத்தபடியாக முக்கியமான இயற்கை இழை சணல். இது பெரும்பாலும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் ஏகபோக உரிமை யாகும். கணல் செடியின் தண்டை அழுக வைத்துத் தண்டிலிருந்து நாரைப் பிரித்தெடுத்துக் கழுவி, உலர்த்தி இழைகளைப் பெறலாம். சணல் இழைகள் பருத்தி இழைகளைவிட வலுக் குறைந்தவை. ஈரமான நிலையில் இவற்றின் இழுவலிமை இன்னும் குறைகிறது. குளிர்ந்த காரங்களில் இவற்றை வினைப்படுத்தினால் இவை கம்பளி யின் தோற்றத்தைப் பெறும். இவ்வாறு தயாரிக்கப் பட்ட சணல் கம்பளியுடன் கலந்து நெய்யப்படுகிறது. சணல் இழையில் செல்லுலோஸும், ஹெமிசெல்லு லோஸும், லிக்னின் என்ற பிசினும் பார்க்க : சணல். விலங்கு இழைகள் உள்ளன. கம்பளி: பல விலங்கினங்களின் மேல் படர்ந்திருக் கும் மயிர் கம்பளி எனப்படுகிறது. கம்பளி வகை களில் முக்கியமானது செம்மறியாட்டின் மயிர். சில வெள்ளாட்டு இனங்களின் மயிரையும் கம்பளி என்றே சொல்வதுண்டு. திபெத்து நாட்டு வெள்ளாட்டின் மயிர் 'காஷ்மீர்' எனவும், அங்கோரா (த.க.) என்னும் வெள்ளாட்டின் மயிர் 'மொகேர்' எனவும், பெரு நாட்டி லுள்ள லாமா என்னும் விலங்கின் மயிர் 'அல்பாக்கா' (த.க.) எனவும் வழங்குகின்றன. இவற்றைத் தவிர மெல்லிய உடைகளுக்கு ஒட்டகத்தின் மயிரும் பயன்படு. வதுண்டு விலங்கின் தோலின்மேல் குறுகிய மெல்லிய மயிரும் நீளமான தடித்த மயிரும் இருக்கும். அம் மெல்லிய மயிரே கம்பளி எனப்படுவது. பௌதிகத் தன்மைகள்: உயர்ந்த ரகக் கம்பளி இழை 38 முதல் 7.5 செ.மீ. வரை நீளமும், 0'017 செ.மீ,தடிப்பும் உள்ளது. நடுத்தர ரகக் கம்பளி 6.3 முதல் 15 செ.மீ. வரை நீளமும், 0.024 முதல் 0·032