பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழை

136

இழை

செ.மீ. வரை தடிப்பும் உள்ளது. சிறந்த மெரினோக்கம் பளி வெண்மையும், கலப்பு ஆடுகளின் கம்பளி இலேசான மஞ்சளும், அவ்பாக்காக் கம்பளி கருமை யும் கொண்டவை. கம்பளி இழையின்மேல் தட்டை யான செதில்கள் உள்ளன. மோஹேர்க் கம்பளி இழை யில் இச்செதில்கள் ஒன்றோடு ஒன்று ஓடுகள்போல் அடுக்காக இருக்கும். இதனால் இக்கம்பளி வகை நல்ல பளபளப்பாக இருக்கும். மெரினோக் கம்பளியில் இவை ஒழுங்கற்று உள்ளதால் அதன பளபளப்பும் குறைவு. கம்பளி இழையின் குறுக்குவெட்டு வட்டமானது. அடுக்காக உள்ள செதில்கள் கம்பளி இழைக்கு உறுதி யையும், நெகிழ்வையும் தருகின்றன. இவ்விழை மிகுதி நீரை உறிஞ்சினாலும் தொட்டால் ஈரமாகத் தோன்றுவதில்லை. கம்பளியில் ஈரம் மிக, மிக அதன் இழுவலிமை குறைந்து, நீளம் அதிகரிக்கும். யான ரசாயன அமைப்பு: சாதாரணக் கம்பளி இழை யின் ரசாயன அமைப்புப் பின் வருமாறு: கார்பன் 50%; ஆக்சிஜன் 23 முதல் 25% வரை ; நைட்டிரஜன் 16 முதல் 17% வரை; ஹைடிரஜவ் 7%; கந்தகம் 3 முதல் 4% வரை. மிகச் சிக்கலான அமைப்புள்ள இப்பொருளின் மூலக்கூறுகள் C47 H157 N5 SO15 என்ற குறி யீட்டைக் கொண்டதாக இருக்கக்கூடும் எனக் கருதப் படுகிறது. குறைந்தது 576 அமினோ அமில மூலங் களாவது கம்பளியில் இருக்க வேண்டுமென்றும், அவை பாலிபெப்டைடுப் பிணைப்புக்களாலும், மற்ற வகைப் பிணைப்புக்களாலும் நீண்ட சங்கிலிகளாக அமைந்துள்ளன என்றும் அறியப்பட்டுள்ளன. (பார்க்க: புரோட்டீன்). கம்பளியை நீர்த்த ஹைடிரோகுளோரிக் அமிலத்தில் பல மணி நேரம் வேகவைத்தால், அது அமினோ அமிலங்களாக நீர் முறிகிறது. கம்பளி என்பது புரோட்டீன் இழைகளில் ஒன்று. பார்க்க: கம்பளி. ரசாயனப் பண்புகள் : 50° வெப்பநிலையிலுள்ள நீரில் கம்பளியை இட்டால் அது வீங்குகிறது, நீர்த்த அமிலங்களையும் காரங்களையும் கம்பளி பெரிதும் உறிஞ்சும் தன்மையுள்ளது. இதனால் சுமார் 15% வரை அடர்வுள்ள சோடாக் காரக் கரைவுகள் கம்பளியைக் கரைத்துவிடுகின்றன. கரைவின் அடர்வு இதற்கும் அதிகமானால் இதில் இடப்படும் கம்பளியின் இழு வலிமை அதிகரிக்கிறது. இப்போது கம்பளி பள பளப்பையும் பெறும். அடர்ந்த அமிலங்கள் கம்பளி யைச் சிதைத்துவிடும். சோடியம் சல்பைடு கம்பளி யைப் பிசினாக்கிக் கரைக்கிறது. இக் காரணத்தால் தோல் பதனிடுதலில் சோடியம் சல்பைடு மயிர் நீக்கும் பொருளாகப் பயன்படுகிறது. சவர்க்காரக் கரைவில் கம்பளியை அலசினால் இது சுருங்குகிறது. கம்பளி இழை களின் மேலுள்ள செதில்கள் ஒன்றோடொன்று பின் னிக் கொள்வதால் இவ்விளைவு நேருகிறது எனக் கருதப் படுகிறது. கம்பளியைக் குளோரின் வாயுவில் வினைப் படுத்தினால் இது நிகழ்வதில்லை. பட்டு: சில பூச்சிகள் தம் புழுப்பருவங்கள் முழு வளர்ச்சி யடைந்தபின்னர் தம் உடலைச் சுற்றிலும் மெல்லிய இழையை நூற்றுக் கூடுகட்டிக் கொள் கின்றன. புழுக்களின் தலைப்பாகத்தில் உள்ள இரு சுரப்பிகளிலிருந்து வெளிவரும் நீர் காற்றுப்பட்டவுடன் கெட்டியாகி இரு இழைகளாகின்றது. இவ்விரு இழை களும் செரிசின் (Sericin) என்ற பிசினால் ஒட்டப்பட் டிருக்கும். இழைகள் பைப்ராயின் (fibroin) என்ற புரோட்டீனால் ஆனவை. இத்தகைய இழைகளில், முசுக்கட்டை இலையைத் தின்று வாழும் புழு வெளி விடும் இழையே முக்கியமானது. இது பட்டு எனப் படும். கூட்டிலுள்ள பட்டில் 22% செரிசினும், 76%

பையீராயினும், 15% மெழுகும், 0 5% நிறப்பொருளும் உலோகப் பொருள்களும் இருக்கும். செரிசின் வெந்நீரி லும் நீர்த்த காரக்கரைவிலும் சூடான சவர்க்காரக் கரைவிலும் கரையும், காரீய அசிட்டேட்டும், அயோ டினும், டானினும், ஈதைல் ஆல்கஹாலும் செரிசினைக் கட்டியாக்கிவிடுகின்றன. பைப்ராயின் நீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் கரைவதில்லை. ஆனால் தாது அமி லங்களும் காரங்களும் இதைக் கரைக்கும். அடர்ந்த அமிலங்களில் இது நீர் முறிந்து அமினோ அமிலங்களை அளிக்கும். கம்பனியைப் போல் பட்டும் ஒரு புரோட்டீன் இழை. ஆகையால் இது தன் பண்புகளில் பெரிதும் கம்பளியை ஒத்தது.பட்டானது அடர்ந்த அமிலங்களில் கரையும். ஆனால் நீர்த்த அமிலங்களையும் காரங்களையும் பட்டு உறிஞ்சும். இது தன் நிறையில் 25% வரை டானிக் அமிலத்தை உறிஞ்சுகிறது. பட்டின் இழைசில உலோக உப்புக்களை ஏற்கும் திறனுள்ளது. இதனால் பட்டின் நிறையை அதிகமாக்கலாம். நல்ல பளபளப்பும். மென்மையும்,உயர்ந்த இழுவலிமையும். வெப்பத்தைக் கடத்தாத் தன்மையும் இதன் சிறப்பியல்புகளாகும். பார்க்க: பட்டு செயற்கை இழைகள் செயற்கையில் இழைகளைத் தயாரிக்கும் முறைகள்: சென்ற நூற்றாண்டின் இறுதியில் வழக்கத்திற்கு வந் தன தாவரப் பொருள்களில் உள்ள செல்லுலோஸை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்படும் செயற்கை இழைகள் முதலில் தோன்றின. இவை மறுவளர்ச்சிச் செல்லுலோஸ் இழைகள் (Regenerated Cellulose fibres) என அழைக்கப்படும். ரயான் (Rayon) என். பது இவற்றின் பொதுப் பெயர். இவற்றைத் தவிரப் புரோட்டீன்களை அடிப்படை யாகக்கொண்ட பலவகை இழைகள் இப்போது வழக் கத்திற்கு வந்துள்ளன. இயற்கைப் புரோட்டீன்களி லிருந்து தயாரிக்கப்படும் இந்த இழைகள் ரசாயன அமைப்பிலும் பல பண்புகளிலும் கம்பளியை ஒத்தவை. கழிவுப் பட்டைக் கரைத்து, அக்கரைவிலிருந்து இழை களைத் தயாரிக்கும் முறைகள் தற்போது ஜெர்மனி யிலும் ஜப்பானிலும் வழக்கத்திற்கு வந்துள்ளன. , தாவரம் அல்லது விலங்குப் பொருள்களைப் பயன் படுத்தாது தொகுப்பு முறைகளால் தயாரிக்கப்படும். சில இழைகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள் ளன். இவை னநலான் என்ற பெயரால் வழங்கு கின்றன. இவற்றின் பயன் இப்போது பெருகி வரு கிறது. இவை அனைத்தையும் தவிரக் கண்ணாடியி லிருந்து தயாரிக்கப்படும் மெல்லிய இழைகளும்,ரப்பரி லிருந்து தயாரிக்கப்படும் இழைகளும் விசேஷமாகப் பயன்படுகின் றன. ரயான் வகைகள் விஸ்கோஸ் முறை : 1892-ல் கிராஸ் (Cross), பெவான் (Bevan), பீடல் (Fiedal) என்ற மூவரும். இந்தத் தயாரிக்கும் முறையை வெளியீட்டனர், மற்ற முறைகளைவிட இதுவே ரயான் தயாரிப்பில் அதிகமாக வழங்குகிறது. இம்முறைக்கு முக்கியமான மூலப் பொருள் மரக்கூழ். குறிப்பிட்ட சில பொருள் களி லிருந்து மிகத் தூய நிலையில் இது தாயாரிக்கப்படு. கிறது. இதை 18% சோடாக் கரைவுடன் 2J° வெப்ப நிலையில் சிறிது நேரம் ஊறவைத்தால், சோடாசெல்லு லோஸ் என்ற பொருள் கிடைக்கிறது. இதைப் பிழிந் தெடுத்து இரண்டு அல்லது மூன்று நாட்கள்வரை: .