பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழை

138

இழை

குளிர்ந்த நீவில் கொட்டினால், செல்லுலோஸ் அசிட் டேட்டு வெண்மையான படிவாகப் பிரியும். இதை நன்றாகக் கழுவி அசிட்டோனில் கரைத்து வடிகட்டி துண்ணிய தொளைகளின் வழியே நூற்கும் அறைக்குள் செத்தவேண்டும். இவ்வறையில் வெதுவெதுப்பான காற்றோட்டம் இருக்கும். அதில் அசிட்டோன் ஆவி யாகிவிடும். செல்லுலோஸ் கெட்டியாகி நூலாகிறது. அசிட்டேட்டு ரயான் மறுதோற்றச் செல்லுலோஸ் அன்று. இது ஒரு செல்லுலோஸ் கூட்டு. ஆகையால் இதற்குச் சில தனி இயல்புகள் உண்டு. இது மென்மை யாகவும் மிருதுவாகவும் இருக்கும். இது அதிக ஈரம் ஏற்பதில்லை. ஆகையால் நீரில் நனைத்தால் இதன் நீள மும் தடிப்பும் அவ்வளவாக மாறுவதில்லை. இது சாதாரணப் பருத்திக்கேற்ற சாயங்களை ஏற்பதில்லை. 85க்கும் மேலான வெப்பநிலையிலுள்ள நீரில் இதை வைத்திருந்தால் இதன் பளபளப்புக் குறைந்துவிடும். காரக் கரைவுகள் இதைப்பாகித்து மங்கச் செய்யும். குப்பிரம்மோனியம் ரயான் : உலகின் மொத்த ரயான் உற்பத்தியில் சுமார் 4% இம்முறையில் தயாரிக் கப்படுகிறது. செம்பு ஹைடிராக்சைடு அம்மோனியா வில் கரைகிறது. இக்கரைவு குப்பிரம்மோனியம் என்று அழைக்கப்படுகிறது. இதில் செல்லுலோஸ் கரைகிறது. இவ்வாறு கரையும் செல்லுவோஸை இழையாகத் தயா ரிக்கலாம். இதுவே இம்முறையின் தத்துவம். சுத்தமான பருத்திச் சிலும்பல் இம்முறைக்கு மூலப் பொருளாகும். இதைச் செம்பு ஹைடிராக்சைடுடன் கலந்து நவச்சாரக் கரைவில் மாறாத வெப்பநிலையில் கரைக்கவேண்டும். கரைவில் சிறிது சோடியம் ஹைடி ராக்சைடுடன் குளுக்கோசும் இருக்கும். கரைவை வடி கட்டி முதிரவீட்டு நுண்ணிய தொளைகளின் வழியே நீருக்குள் செலுத்தினால் இதிலுள்ள அம்மோனியாவும், செம்பில் பெரும் பகுதியும் பிரிந்து. இது 'மெதுவாகக் கெட்டியாகிறது. இவ்வாறு பெறப்படும் நூல் முழுதும் கட்டியாகாமல் களிபோன்ற நிலையிலுள்ள போது இதை இழுத்து இதன் தடிப்பைத் தேவையான அளவாகச் செய் யலாம். இந்த நூலை நீர்த்த கந்தகாமிலத்திற்குள் செலுத் திக் கட்டியாக்கி நீரால் கழுவித் தூய்மையாக்கலாம். இம்முறையில் சீரான, மெல்லிய இழைகளைப் பெற லாம். இந்த வகை ரயான் தன் பண்புகளில் விஸ்கோஸ் ரயானை ஒத்தது. நைட்ரோ செல்லுலோஸ் முறை அல்லது ஷார் டனே முறை (Nitro cellulose or Chardonnet process) : ஷார்டனே என்ற பிரெஞ்சு அறிஞர் இம் முறையில் முதன் முதல் நூலைத் தயாரிக்கத் தொடங் கினார். அவர் முசுக்கட்டை. இலைகளின் கூழை இதற்கு மூலப்பொருளாகப் பயன்படுத்தினார். நைட்ரிக் அமிலத் துடன் சிறிது கந்தகாமிலத்தைக் கலந்து, அதில் செல்லுலோஸைச் சேர்த்தால் நைட்ரோ செல்லுலோஸ் கிடைக்கும். இதைத் தூய்மையாக்கி ஆறுபாகம் ஈதரும் நான்கு பாகம் ஆல்கஹாலும் கலந்த கலவையில் கரைக் துக் கலாடியன் என்ற கரைவைப் பெறலாம். இதைக் கண்ணாடிப் புழைகளின் வழியே செலுத்தினால் ஈதரும் ஆல்கஹாலும் ஆவியாகி நைட்ரோ செல்லுலோஸ் கெட்டியான நூலாகிறது. இதைச் சோடியம் ஹைடிரோ சல்பைடு கரைவுடன் வினைப்படுத்தினால் நைட்ரோ செல்லுலோஸ் மீண்டும் செல்லுலோஸாக மாறுகிறது. இம்முறை இப்போது அநேகமாக வழக் கொழிந்து விட்டது என்றே கூறலாம். ச் மறுதோற்றப் புரோட்டீன் இழைகள்: பாலி லுள்ள கேசீன் என்ற புரோட்டீன் பொருளிலிருந்து தயாரிக்கப்படும் சில இழைகளும் தற்போது வழக்கத்தி

லுள்ளன. இவை அமெரிக்காவில் அராலாக் (Atalac) எனவும், இத்தாலியில் லானிட்டால் (Lanital) எனவும் வழங்குகின் றன. இவற்றின் ரசாயன அமைப்பு, கம்பளி யின் அமைப்பையே பெரிதும் ஒத்தது. இவை மிக மெல்லிய மிருதுவான இழைகள். கம்பளி ஏற்கும் சாயங் களை இவைகளும் ஏற்கின்றன. ஆகையால் இவை சில ஆண்டுகளாகக் கம்பளியுடன் கலந்து நெய்யப்பட்டு வந்தன. இப்போது இவை பருத்தி நூலுடனும் கலக்கப் பட்டுத் திரைகள் முதலியன நெய்யப் பயனாகின்றன. கேசினைத் தவிர வேறு சில புரோட்டீன் களிலிருந்தும் இப்போது இழைகள் தயாரிக்கப்படுகின் றன. சோயா அவரையிலிருந்தும், நிலக்கடலையிலிருந்தும் இக்காலத்தில் தொகுப்பு இழைகள் தயாரிக்கப்படுகின் றன. பார்க்க: நைலான். என்.பி.ப. இழைப்பு எ ந் தி ரம் (Planing machine) பரப்புக்களை இழைத்துச் சமதளமாக்கும் எந்திரம். உருவாக்கு கருவிகளில் (த. க ) இதுவும் ஒன்று. கன மான அடித்தளத்தின்மேல் உள்ள தண்டவாளங்களில் கிடையாக நகரும் ஒரு பலகையின்மேல் இழைக்கப்பட வேண்டிய பரப்பைப் பொருத்தி வைப்பார்கள்.பரப் பைத் தொட்டவாறு வெட்டும் ஆயுதம் சரிபடுத்தப் படும். பலகை முன்னும் பின்னும் நகரும்போது பரப்பு இழைக்கப்படுகிறது. பலகையை மேலுங் கீழும் நகரத் திப் பொருத்தி வைக்கவும் வசதி இருக்கும். இந்த எந் திரத்தைக் கொண்டு எந்த அளவுள்ள பொருளையும் இழைக்கலாம். பல சிறு பொருள்களை ஒரே சமயத்தில் இழைக்க அவை வரிசையாகப் பலகையின்மேல் பொருத்தி வைக்கப்பட்டு, வெட்டும் ஆயுதத்தின் அசை வினால் ஒரே சமயத்தில் இழைக்கப்படுகின்றன. இளக்கி : ள க் கி (Flux) : கனியப் கனியப் பொருளிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கப் பயனாகும் பொருள் இளக்கி எனப்படும். இதைப் பொருளுடன் சேர்ப் பதால் அசுத்தங்கள் ஒன்று சேர்ந்து. கசடாகப்பிரிந்து விடுவதுடன், பொருளும் எளிதில் இளகித் திரவ மாகிறது.இவ்வாறு பயனாகும் பொருள்களில் சுண்ணாம் புக்கல் முதன்மையானது, சோடியம் அல்லது பொட்டா சியம் கார்பனேட்டும் இவ்வாறு பயனாவதுண்டு. ஈயம் பூசுதலிலும், ஈயம் பற்ற வைப்பதிலும் பரப்பைச் சுத்த மாக்கி, ஈயம் எளிதில் ஒட்டுமாறு செய்ய ஹைடிரோ குளோரிக அமிலம், நவச்சாரம், சில பிசின் வகைகள், வெண்காரம் முதலிய பொருள்கள் பயன்படுகின்றன. இவைகளும் இளக்கிகள் எனப்படும். இளகுவெப்பம் (Heat of fusion) : ஒவ் வொரு பொருளும் தான் இளகுவதற்குக் குறிப்பிட்ட ஓர் அளவு வெப்பத்தை ஏற்கின்றது, அலகு நிறை யுள்ள பொருளொன்று வெப்பநிலை மாறாது, திடநிலையி லிருந்து திரவ நிலைக்கு மாறத் தேவையான வெப்பம் அதன் இளகு வெப்பம் எனப்படும். பனிக்கட்டியின் இளகு வெப்பம் 79-71 காலரிகள்/கிராம். இளங்கண்டீரக்கோ கண்டீரக்கோவின் தம்பி. இவனும் இளவிச்சிக்கோவும் ஒன்றாக அமர்ந்திருந்த போது, அங்கு வந்த புலவர் பெருந்தலைச்சாத்தனார் இவனை மட்டும் தழுவிக்கொண்டார். இளவிச்சிக்கோ ஏன் என்று வினவியதற்குக் காரணமுங் கூறினார். இவ னும் இவள் மரபினருங் கொடையாற் புகழ் பெற்றவர் கள் (புறம்.151). இளங்கீரந்தையார் : கீரன் தந்தையார் என் பது கீரந்தையார் என மருவியது. இவராவது இவ ருடைய முன்னோருள் ஒருவராவது கீரன் தந்தையா ராக இருந்திருக்கலாம். இடைச் சங்கப் புலவருள் .