பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்கீரனார்

139

இளங்கோவடிகள்

கீரந்தையார் என ஒருவர் இருந்தாரெனச் சிலப்பதி காரம் அடியார்க்கு நல்லாருரை கூறுகிறது. பரிபாடலில் 2ஆம் பாட்டையும், திருவள்ளுவமாலையில் 18ஆம் பாட்டையும் பாடிய கீரந்தையாரும் இவரும் ஒருவரோ என்பது ஆராயத் தக்கது. அல்லது இவர் கீரந்தை யாரின் தம்பியாக இருக்கலாம். (குறுந். 148). . இளங்கீரனார்: இவரும் எயினந்தை மகனார் இளங்கீரனாரும் ஒருவரே என்பர் சிலர். எனின், இவ ரும் வேடர் மரபினரே. எயினர் என்னும் சொல் வேட ரைக் குறிக்கும். பொருந்தில் என்னும் ஊரினராகிய இளங்கீரனார் என்னும் புலவரொருவர் புறநானூற்றில் ஒரு செய்யுளையும் (5), அகநாநூற்றில் இரண்டு செய்யுட் களையும் (19.351) பாடியுள்ளார். இவருக்கும் அவருக் கும் என்ன தொடர்பென்று தெரியவில்லை (குறுந். 116). எயினந்தை மகனார் இளங்கீரனார் பாடிய செய்யுட்கள் 15 (நற்.3,62,113,269,308,346; அகம்.3,295: 239,289,299,361,371,395,399). இளங்குமணன் சங்க காலத்தவன்; கும் ணன் தம்பி. இவன் தமயனான குமணனிடம் பகைமை கொண்டு நாட்டைக் கைப்பற்றினான். காட்டில் மறைந் திருந்த குமணனைக் கொல்லவும் சூழ்ச்சி செய்தான். பின்னர்ப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவராலே மனம் திருந்திப் பகைமையொழிந்து வாழ்ந்தான் (புறம். 165). இளங்கோவடிகள் : இவர் செந்தமிழ்ப் பெருங்காப்பியமாகிய சிலப்பதிகாரத்தை இயற்றியவர். சேரலாதன் என்னும் சேரநாட்டு மன்னனுடைய இளைய மைந்தர். அரசனுடைய இளைய மைந்தராத லால் இளங்கோ என்றும், துறவு பூண்டமையால் அடிகள் என்றும் இவர் அழைக்கப்பெற்றார். 'குண வாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்' என்று சிலப்பதிகாரப் பதி கம் இவரைக் குறிக்கின்றது. இவர் அரசு துறந்த வரலாறு சிலப்பதிகாரத்தின் உரையாசிரியராகிய அடி யார்க்கு நல்லாரால் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அவ்வரலாறாவது : ஒரு நாள் சேரலாதனோடிருந்த மூத்த மைந்தனாகிய செங்குட்டுவனையும்.இளைய மைந்தனாகிய இளங்கோவையும் கண்ட நிமித்திகன் ஒருவன் அம் மூவரையும் உற்று நோக்கிச் சேரலாதனுக்குப்பின்பு பட்டமெய்துபவன் இளங்கோவே என்று எடுத்துரைத் தான். அப்போது செங்குட்டுவன் உள்ளத்தில் சீற்றம் பிறந்தது. அதை அறிந்த இளங்கோ, தமையன் மனத் தில் எழுந்த சீற்றத்தையும் துயரத்தையும் போக்கக் கருதி உடனே துறவு பூண்டார். அரசு துறந்தபின் இவர் தவம் புரிந்த இடம் குணவாயிற் கோட்டம். குணவாயில் என்பது திருக்குணவாயில் என்னும் ஊர் என்றும், அது வஞ்சிமாநகரின் கீழ்த் திசையில் உள்ள தென்றும் உரையாசிரியர் கூறுவர். இளங்கோவடிகள் இயல் இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவர் என்பதும், சேர, சோழ, பாண்டியருடைய ஆட்சியில் அமைந்த முந்நாடுகளையும் நன்றாகத் தெரிந்திருந்தார் என்பதும் சிலப்பதிகாரத் தால் இனிது விளங்கும். சிலப்பதிகாரத்தின் முதற் காண்டமாகிய புகார்க் காண்டம் சோழ்நாட்டின் பெரு மையையும், அதன் தலைநகராகிய பூம்புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினத்தின் செழுமையையும் எடுத் துரைக்கின்றது. இரண்டாம் காண்டமாகிய மதுரைக் காண்டம் பாண்டிய நாட்டின் சீர்மையையும், அதன் தலைநகராகிய மதுரைமாநகரின் சிறப்பையும் வரூணிக் கின்றது. மூன்றாம் காண்டமாகிய வஞ்சிக் காண்டம்

சேரநாட்டின் மேன்மையையும், அந்நாட்டின் தலைநக ராகிய வஞ்சிமா நகரத்தில் கண்ணகி கோவில்கொண்ட முறையையும் விரித்துக் கூறுகின்றது. சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த காலமே, இளங்கோ வடிகள் வாழ்ந்த காலம் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகின்றது. கண்ணகியின் வரலாற்றை இவர் மலைநாட்டுக் குறவர் வாயிலாகவும், மதுரைக் கூலவாணி கன் சாத்தனார் வாயிலாகவும், மாடலன் என்னும் மறை யவன் வாயிலாகவும் அறிந்துகொண்டார். ஒரு நாள் இவர் தம் தமையனாகிய செங்குட்டுவனோடு பேரியாற் றங்கரையில் அமர்ந்து இன்பமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது மதுரைக் கூலவாணிகன் சாத்தனாரும் உடனிருந்தார். அவர்கள் இருந்த இடத்தை நோக்கி மலைநாட்டுக் குறவர்கள் கையுறை கொண்டுவந்தார்கள். செங்குட்டுவ மன்னனை நோக்கி, "அரசே, இந்நாட்டில் என்றும் இல்லாத புதுமையை இன்று கண்டோம். மலைமீதுள்ள வேங்கை மரத்தின்கீழ் ஒரு மங்கை வந்து நின்றாள். அவலமே உருவாகிய அம்மாதை அழைத்துச் செல்ல விண்ணி லிருந்து ஒரு விமானம் வந்தது. வானவர் போற்ற அவள் . அவள் அவ்விமானத்தில் ஏறி வானகம் சென்றாள். அவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? அறியோம்" என்று தாம் கண்ட அதிசயத்தைக் கூறி நின்றார். குன்றக் குறவர் கண்ட மாது கற்பரசியாகிய கண்ணகியே என்பதை அறிந்த மதுரைச் சாத்தனார் வரலாற்றை அறிவிப்பாராயினார். மதுரை மாங்களில் அரசன் ஆணையால் கண்ணகியின் கணவன் கொலையுண்டதும், கடுந் துயருற்ற கண்ணகி, மன்னன் முன்னே சென்று வழக்குரைத்துத் தன் கணவன் குற்ற மற்றவன் என்று நிறுவியதும், தவறுணர்ந்த மன்னவன் அரசு கட்டிலிலிருந்து மயங்கி வீழ்ந்து மாண்டதும், கண்ணகியின் கற்புத் தீயால் மதுரைமாநகரம் எரிந் ததும், சாத்தனார் வாயிலாகச் செங்குட்டுவனும் இளங் கோவடிகளும் அறிந்தார்கள். கற்பின் பெருமையைக் கண்கூடாகக் காட்டிச் சேரகாடு அடைந்து, தெய்வீகம் உற்ற பத்தினிக் கடவுளாகிய கண்ணகிக்கு இமயமலை யில் சென்று கல் எடுத்துக் கங்கையாற்றில் நீர்ப்படை செய்து, வஞ்சிமாநகரத்தில் கோவில் அமைத்துச் சிறப் புச் செய்தான் செங்குட்டுவன். அருங்கச் செல்வ ராகிய இளங்கோவடிகள் கண்ணகியைக் கலைக்கோயி லில் வைத்துப் போற்ற விரும்பினார். அக்கருத்தைச் சாத்தனாரிடம் சொல்லியபொழுது அவரும் அவ்வாறே செய்தருளும்படி வேண்டினார். கண்ணகியின் சிலம்பு காரணமாக நிகழ்ந்த கதையாதலின் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஒரு பெருங்காப்பியம் செய்தார் இளங்கோவடிகள். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காவி யங்களாகக் கருதப்படுகின்றன. இளங்கோவடிகளின் நண்பராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் மணி மேகலையை இயற்றி, அதனை இளங்கோவடிகளிடம் படித்துக் காட்டினார் என்றும், இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தைச் செய்து முடித்துச் சாத்தனாரிடம் அதைப் படித்துக் காட்டினார் என்றும் அவ் விருநூல் களின் பதிகங்கள் கூறுகின் றன. சிலப்பதிகாரமும் மணி மேகலையும் தமிழிலள்ள ஐம்பெருங் காப்பியங்களைச் சேர்ந்தனவாகும். இவை ஒரு காலத்தனவா என்பது ஆராய்வதற்கு உரிய பொருள். இளங்கோவடிகளின் செம்மைசான்ற மனப்பான்மை சிலப்பதிகாரத்தால் நன்கு விளங்குகின்றது. காவியத் தின் இறுதியில் " பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு மின் என்று தொடங்கி, "செல்லும் தேஎத்துக்கு