பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறக்குமதி

144

இறக்குமதி

இந்தியாவின் இறக்குமதி : 20 ஆம் நூற்றாண் டின் தொடக்கத்தில் இந்தியாவில் தொழிற் புரட்சி தொடங்கியது.1908 ஆம் ஆண்டுச் சுதேசி இயக்க மும். இரண்டு உலக யுத்தங்களும், 1924-ல் அரசாங்கம் பின்பற்றிய பாதுகாப்பு ஆதரவுக் (Discriminating Protecticn) கொள்கையும் இந்தியத் தொழில் வளப் பெருக்கத்திற்கு ஊக்கம் அளித்தன. தொழிற் புரட் சியை யொட்டி இந்திய இறக்குமதி வாணிபம் மாறுத் லடைந்தது. தொழில் வளப்பெருக்கத்திற்கு முன்னர் இந்தியா வெளிநாட்டு உற்பத்திப் பண்டங்களுக்கு ஒரு பெரும் சந்தையாக இருந்துவந்தது; சமைந்த (Finished) பண்டங்கள் மிகுகியாக இறக்குமதி செய் யப்பட்டன. இந்தியாவில் உற்பத்தித் தொழிற்சாலை கள் பல தொடங்கப்பட்டுத் தொழில் வளம் பெருகிய தும், சமைந்த பண்ட இறக்குமதி குறைந்து, மூலப் பொருள் இறக்குமதி மிகுந்தது. 1920-21-ல் செய்யப் பட்ட மொத்த இறக்குமதியில் சமைந்த பண்டங் களின் சதவீகிதம் 84. 1936-37-ல் இச்சத விகிதம் 75 ஆகக் குறைந்தது. மூலப் பொருள் இறக்குமதி 5லிருந்து 16 சதவிகிதத்திற்கு மிகுந்தது. 1941-42-ல் சமைந்த பண்டங்களின் சதவிகிதம் 55 ஆகக் குறைந் தது; மூலப் பொருள்களின் சதவிகிதம் 29 ஆக உயர்ந்தது. இறக்குமதிப் பொருள்களை வழங்கிவந்த நாடுகளி லும் மாறுதல்கள் ஏற்பட்டன. 1920-21-ல் இறக்கு மதியில் 61 சதவிகிதம் இங்கிலாந்திலிருந்து பெறப்பட் டது: ஆனால் 1941-42-ல் 21 சதவிகிதந்தான் பெறப் பட்டது. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு கள் ஆகியவைகளிலிருந்து அதிகமாக இறக்குமதி செய் யப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த பின்னர் சர்வ தேச வாணிக அரங்கில் ஸ்டர்விங் வட்டாரம், டாலர் வட்டாரம் என இரு வட்டாரங்களாக உலகம் பிரிந் தது. டாலர்ப் பஞ்சம் ஏற்பட்டது.டாவர் வட்டா ரத்திற்கு வெளியிலிருந்த நாடுகள் டாலர் நாடுகளி லிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்கவேண் டியதாயிற்று.ஸ்டர்லிங்கின் மதிப்பும் ஸ்டர்லிங்கோடு இணைக்கப்பட்ட மற்ற நாணயங்களின் மதிப்பும் குறைக்கப்பட்டன. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்படும் இறக்குமதி பெரிதும் குறைக்கப்பட்டது. 1939லிருந்து இந்தியாவில் இறக்குமதிக் கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. இன்றியமையாத பண்டங்கள் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டன. 1947-ல் இறக்கு மதி, ஏற்றுமதி (கட்டுப்பாடு) என்ற சட்டம் இயற்றப் பட்டது. இதன்படி இறக்குமதி வாணிகத் துறையில் லைசென்சு முறை புகுத்தப்பட்டது. ஒவ்வோர் அரை யாண்டின் தொடக்கத்திலும் வெளிநாட்டு நாணய மாற்று (Foreign Exchange) நிலையைப் பரிசீலனை செய்து, அதற்கேற்ப இறக்குமதிக் கொள்கை அமைக் கப்படுகிறது; என்னென்ன பண்டகளை இறக்குமதி செய்யலாம் என்பதும் முடிவு செய்யப்படுகிறது. இம் முடிவிற்கேற்ப விண்ணப்பதாரர்களுக்கு லைசென்சுகள் வழங்கப்படுகின்றன. 1949-ல் இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாடு) பற்றிய சட்டம் மாற்றியமைக்கப்பட் டது. இம்மாற்றத்தின்படி லைசென்சு விண்ணப்பங் களின் பேரில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின் றன. கட்டணத்தொகை விகிதம் அரசாங்கத்தால் அவ்வப் போது முடிவு செய்யப்படுகிறது. 1948 முதல் 1953 வரை இந்தியாவின் இறக்குமதி விபரங்கள் பின் வருமாறு: