பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறங்குடிக்குன்ற நாடன்

148

இறால்

கள் (Down feathers) அமர்ந்திருக்கின்றன. அவை தூவி எனப்படும். அவை வெளிச்சூடும் குளிரும் உட் செல்லாமலும், பறவையின் உடற்சூடு வெளியேறாம் ம் இருக்கச்செய்யும் உயர்ந்த நொய்மையான போர்வைகளாக இருக்கும். மேலும் தாய்ப்பறவை அவைகளால் கூட்டில் மெத்தை செய்து, குஞ்சுகளைச் சுகமாக வளர்க்கவும் உதவியாகின்றன. இவ்விரண்டு வகை இறகுகளோடு மயிர்போன்ற இழை இறகுகளு முண்டு (Filoplumes). பா.பா. .. இறங்குடிக்குன்ற நாடன் சங்கப் புலவர்களில் ஒருவர். குறிஞ்சிநிலப் புலவர்போலும் (அகம்.215). சில இறால் (இறா,இறவு. கூனி) கடலிலும் கழிகளிலும் ஆற்றிலும் ஏரி குளம் முதலிய நன்னீரிலும் வாழும் சிறிய உயிர். இதில் பலவகைகளுண்டு. அவற்றில் பெரும்பாலானவை கடலில் வசிக்கின்றன. ஆழமில் லாத கரையோரக் கடலில் (Littoral) இறால் ஏராள மாகக் கூட்டங் கூட்டமாக நீந்திச் செல்லும். வகைகள் கரையை படுத்த கடற்கீழ் மணற்பாங்கான இடத்திலும் அவ்வாறே ஆறு, குளங்களிலும் இருக்கும். இறாலின் உடல் நீண்டு இரு பக்கங்களும் சற்று ஒடுங்கியிருக்கும். அது பல வளையங் களாலான எது.அதில் தவை,மார்பு, வயிறு என்னும் பாகங்களுண்டு. உடம்பு. முழுவதும் கைட்டின் என்னும் கொம்புப் பொருளா லான தோல் மூடியிருக்கும். அது அங்கங்கே ஓடு போலத் தடித்திருக்கும். இந்த ஓடுகளில் நண்டின் ஓட்டிலிருப்பது போன்ற சுண்ணாம்பு இருப்பதில்லை. தலையும் மார்பும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பகுதியாகி. ஒரே மேலோட்டினால் மூடப்பெற்றிருக்கும். மேலோட் டின் முன்முனையின் நடுவே வாளின் பற்கள் போன்ற கூரிய முட்களுள்ள வலுவான கொம்பு ஒன்று முன் னுக்கு நீட்டிக்கொண்டிருக்கும். மேலோட்டின் இரண்டு பக்கங்களும் இறக்கைபோல நீண்டு அறைபோன்ற இடங்களை அடைத்துக்கொண்டிருக்கும். இந்த அறை களுக்குள்ளே மூச்சு விடுவதற்கு உதவும் செவுள்கள் . இறால் (பெனீயஸ் சாதி அடங்கியிருக்கின்றன. அதனால் இவை மூச்சறை அல் லது செவுளறை (Branchial chamber) எனப்படும். வயிற்றில் வளையங்கள் நன்றாகக் காணும், ஒவ்வொரு வளையத்தையும் ஓடு மூடியிருக்கும். ஓடுகளுக்கு இடையே தோல் மெல்லியதாக இருந்து, கணுவைப் போல அவை அசைவதற்கு உதவும். உடம்பின் நெடுக இணையிணையான உறுப்புக்கள் வளையத்திற்கு ஓர் இணை யாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் பெரும்பாலும் இரண்டு கவைகள் உள்ளவை. இந்த உறுப்புக்கள் உணர்கொம்புகளாகவும், தாடைகளாக வும், நடக்குங் கால்களாகவும், நீந்துந் துடுப்புக்களாக வும் பலவித மாறுதல்களை யடைந்து பலவிதத்தொழில் களைச் செய்கின் றன. இவையெல்லாம் தொழிலால் வேறுபடினும் பிறப்பால் ஒத்தவை (Homologous).

தலையில் இரண்டு கூட்டுக்கண்கள் உண்டு. அவை கணுக்களுள்ளவையும் அசையக்கூடியவையுமான காம்புகளின் நுனியில் அமைந்திருக்கின்றன. உணர் கொம்புகளில் இரண்டு இணைகள் உண்டு. முதல் உணர் கொம்பு சிறியது, இரண்டு சவுக்குப்போன்ற கொம்புக ளுள்ளது. இரண்டாவதில் மிகவும் நீண்ட சவுக்கு ஒன்று உண்டு. வாயில் பல்போன்ற புடைப்புக்கள் உள்ளதும், இரையை நொறுக்கி மெல்வதற்கு ஏற்றது மான ஓர் இணை அரைதாடை (Mandibles) இருக் கிறது. அதையடுத்து இரண்டு இணை துருவுதாடைகள் (Maxillae) உண்டு. அவை உணவைத் துருவி வாய்க் குள் தள்ளியனுப்பும். இவற்றுள் கடைசித் தாடையைச் சேர்ந்து அகன்ற மடல்போன்ற ஓர் உறுப்பு உண்டு. அது செவுளறையிலிருந்து நீரை இறைகூடை போல வெளியே இறைத்துக்கொண்டே இருக்கும். மார்பில் எட்டு இணை உறுப்புக்கள் உண்டு. முதல் மூன்று இணை உறுப்புக்கள் உணவைப்பற்றி, நசுக்கிக் கொந்தி முன்னுக்கு வாய்ப்பக்கமாக அனுப்பும். அவை உணர் கருவிகளாகவும் உதவும். அவை தாடைக்கால் கள் (Maxillipedes) எனப்படும். அவற்றையடுத்து ஐந்து இணை நீண்டு மெல்லிய குச்சிபோன்ற நடைக் கால்கள் (Pereiopods) உண்டு. முதல் மூன்று கால் களின் முனையில் பெனீயஸ் என்னும் கடலிறாலில் இடுக்கிகள் இருக்கும். பாலீமான் என்னும் ஆற்றி லுள்ள மோட்டிறாலில் முதல் இரண்டு கால்களில் மட் டும் இடுக்கிகள் இருக்கும். இந்த இடுக்கிகள் தாக்கவும் காக்கவும் உதவும். கால்கள் நீந்தவும் உதவும், தரை யின்மேல் முன்னுக்கு நகர்ந்து செல்லவும் உதவும். வயீற்றில் ஆறு இணைத் துடுப்புப் போன்ற உறுப் புக்கள் உண்டு. அவை நீந்துகால்கள் (Pleopods). அவற்றில் கடைசி இணை யிகவும் பெரியது. அவை வால் துடுப்புக்கள் (Uropods) எனப்படும். உடம்பின் கடைசிப்பாகமாகிய கொண்டி (Telson) என்னும் உறுப்போடு வால் துடுப்பு இரண்டும் சேர்ந்து வலு வான அகன்ற நீந்து கருவியாகும். முதல் இணை பெண் இறாலில் மிகவும் சிறிதாக இருக்கும். ஆணில் விந்தை எந்திச் சென்று இடுவதற்கு இரண்டு கையும் குவித்தது போன்ற கலவியுறுப்பாக உதவும். மற்ற இணைகள் தட்டையாகி நீந்துவதற்கேற்ற துடுப்புக்களாக உத வும். சில சாதிகளில் பெண் இறாலில் இந்த உறுப்புக் களிலேயே முட்டைகள் பொரிக்கும் வரையில் ஒட்டிக் கொண்டிருக்கும். இறாலின் ஓட்டை நீக்கினால் வயிறு முழுவதும் பருத்த தசைக்கண்டங்கள் இருக்கும். இந்தத் தசையை மிகவும் சுவையான உணவாக மனிதர் விரும்புவார்கள். இந்தத் தசைகள் துடுப்புக்களை அசைக்கவும், வயிற்றை நீட்டவும் மடக்கவும் உதவும். மடக்கு தசைகள் (Flexor muscles) மிகப் பெரியவை. வயிறு மார் போடு சேர்ந்திருக்கும் இடத்தில் முதுகு கூன்போல வளைந்திருக்கும். இதனாலே இறாலுக்குக் கூனி என்ற பெயர் வந்திருக்கிறது. மடக்கு தசைகள் சுருங்கும் போது அந்த இடத்தில் உடம்பு முன்னுக்கு இரண்டா கப் பலமாக மடங்கும். அப்போது இறால் பின் னுக்கு வேகமாகத் துள்ளிச் செல்லும். தலையிலும் மார்பிலும் உள்ள தசைகள் அங்குள்ள உறுப்புக்களை அசைக்கும். உடம்பை அசைக்கும் இந்தத் தசைகள் மனிதனுடைய எலும்புக்கு இணைந்துள்ள தசைகள் போன்ற வரித் தசைகளே (Striped muscles). வரித்தசைகள் தாழ்ந்த முதுகெலும்பில்லாத பிராணிகளில் இருப்ப தில்லை. கணுக்காலிகளிலும் முதுகெலும்பிகளிலும்கூட விரைவாகவும் பலமாகவும் அசையும் உறுப்புக்களில் L