பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷூரன்சு

155

இன்ஷூரன்சு

களும் நாளடைவில் குறையும் என எதிர்பார்க்க லாம். இன்ஷுரன்சின் தொடக்கத்தில் நஷ்டத்தில் தொடர்பு இல்லாதவரும் பிறருடைய ஆயுளையும் சொத்துக்களையும் இன்ஷூர் செய்தனர். அவற்றிற்கு ஏற்படும் நஷ்டங்களுக்காக இன்ஷூரன்சு கம்பெனியி லிருந்து நஷ்டஈடு பெற்று, அதனால் இலாபம் பெற எண்ணினர். சூதுகள் பெருகின. இந்நிலையை அகற் றுவதற்காக இன்ஷூர் செய்யும் உரிமையையும், இன் ஷூர் தொகையையும், பொருள்களையும் வரையறுத்துப் பல நாடுகளில் சட்டங்கள் இயற்றப்பட்டன. நிருணயிக்கப்பட்ட பிரீமியம் கட்டியதும், அல்லது கட்ட ஒப்புக்கொண்டதும், இன்ஷூர் செய்பவருக்கும் இன்ஷூர் செய்து கொள்பவருக்கும் இடையே ஏற் படும் ஒப்பந்தம் ' பாலிசி' எனப்படும். இன்ஷூரன்சில் பல வகைகள் உண்டு. ஆயுள்,தீ, கடல், மோட்டார் போன்ற இன்ஷுரன்சைப் பெரும் பாலும் தனி நிலையங்கள் நடத்துகின்றன. நோய், வேலையின்மை, முதுமைப் பென்ஷன், பிள்ளைப் பேறு காலத்தில் உதவி போன்ற இன்ஷூரன்சு சமூகம் முழு மைக்குமோ, சமூகத்தில் சில பகுதியினருக்கோ அரசாங் கம் ஏற்று நடத்துகிறது. ஆயுள் இன்ஷூரன்சு: மக்கள் ஆயுளைப் பற்றிய நிலையை ஆராய்ந்து, முதுமையாலும் மரணத்தாலும் ஏற்படக்கூடிய பொருளாதார இன்னல்களினின்று இன்ஷூர் செய்துகொள்பவர் தம்மையும் தம் குடும்பத் தையும் காத்துக்கொள்ளும் முன்னேற்பாடு ஆயுள் இன் ஷூரன்சாகும். முதுமையால் உழைப்புக்காலம் முடிந்து ஊதியம் குறைவதால், முதுமை அடைந்த உழைப் பாளிக்கு ஏற்படும் பொருள் நஷ்டத்தை இன்ஷூரன்சு ஈடு செய்யும். ஒருவனுடைய மரணத்தால் அவன் குடும்பத்தினர் அடையும் பொருள் நஷ்டத்தையும் இது ஈடு செய்யும். மற்ற இன்ஷூரன்சுகளைப் போலன்றி, இதில் நஷ்ட ஈட்டுத் தொகை வரம்புக்கு உட்பட்டதன்று. ஆயுள் இன்ஷூரன்சு தொடக்கத் திலிருந்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகோ, அன்றி இன்ஷூர் செய்த நிகழ்ச்சி ஏற்பட்டதுமோ உறுதி கூறப்பட்ட பணம் பெறக்கூடும். இறப்பு விகிதம் வயது ஏற ஏற உயருமாயினும் பிரீமியம் உயர்வதில்லை. பணம் பெறும்வரை, அந்தந்த ஆண்டில் செலுத்தப் படும் தவணைக் கட்டணத் தொகையில் அவ்வாண்டு வழங்கவேண்டிய உறுதி செய்த தொகையும் செலவு களும் போக எஞ்சியிருக்கும் பணத்தைச் சேமித்துப் பெருக்க வேண்டியது ஆயுள் இன்ஷூரன்சில் அவசிய மாகும். தீ இன்ஷூரன்சு: எதிர்பாராததும், இன்ஷூர் செய்துகொள்பவராலே உண்டாகாததும் ஆன தீ விபத் தினால் பண்ட அழிவு நேருமாயின் அதன் நஷ்டத்தை ஈடு செய்வது. தீவிபத்துக் காரணமாக வியாபாரம் ஒடுங்கி, அதனால் நேரிடும் நஷ்டத்தையும், தீயணைக்கும் போது பயன்படுத்தும் தண்ணீர், ரசாயனப்பொருள் ஆகியவற்றால் ஏற்படும் நஷ்டத்தையும் இந்த இன்ஷூ ரன்சு ஈடு செய்யும். விபத்து நிகழும் வரை நஷ்ட ஈட் டுத் தொகையை அறிய முடியாது. இன்ஷூர் செய் வது தீ விபத்தால் இலாபம் பெறுவதற்காக அல்ல, ஏந் படக் கூடிய நஷ்டத்தைத் தவிர்ப்பதற்காகவேயாம். கடல் இன்ஷஓரள்சு: கடல் வழியாகவோ, கட விலும் நிலத்திலுமாகவோ பண்டங்கள் அனுப்பப்படும் போது அவற்றிற்கு நீர், தீ, திருட்டுப் போன்றவற்றால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை ஈடு செய்வது. இது ஒரு துறைமுகத்திலிருந்து மற்றொரு துறைமுகத்துக்கோ,

ஒரு பண்டசாலையிலிருந்து மற்றொரு பண்டசாலை அல் லது கடை அல்லது வீட்டுக்கோ போய்ச் சேரும்வரை செய்யப்படும். கப்பலையும் அதில் உள்ள பண்டங்களை யும் ஒருங்கேயோ, தனித்தனியாகவோ இன்ஷூர் செய் யலாம். மோட்டார் இன்ஷூரன்சு : மோட்டார் காருக் கும், அதிலுள்ள பிரயாணிகளுக்கும், சொத்துக்களுக்கும் ஏற்படக்கூடிய விபத்துக்களின் நஷ்டங்களை ஈடுசெய் வதும்,மோட்டார் ஒட்டுவதால் பிற மக்களுக்கோ, பிற ருடைய சொத்துக்கோ ஏற்படக்கூடிய நஷ்டங்களை ஈடு செய்வதுமாகிய இரண்டும் இதில் அடங்கும். இவ்வாறே தொழிலாளர் நஷ்டஈட்டுச் சட்டத்தின் கீழ்க் கொடுபட வேண்டிய தொகைகளையும், ஓர் இடத் திலிருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டு போகும் தங்கம், வெள்ளி, ரொக்கம் போன்றவற்றையும் குறிப் பிட்ட பொறுப்புப் பூண்ட தொழிலாளர் நாணயத்தை யும் இன்ஷூர் செய்து, அந்த விபத்துக்களில் நஷ்டங் களை ஈடு செய்துகொள்ளலாம். ஆயுள் இன்ஷூரன்சு தவிர மற்றவை அவற்றில் குறிப்பிட்ட காலவரையறையோ, போக்குவரவுக் காலமோ முடிந்தவுடன் அற்று விடுவதால், நீண்ட காலச் சேமிப்பு நிதி வேண்டி இராது. எனினும் தம் வியாபார வளர்ச்சிக்காகவும், எதிர்பாராத விபத்துக் களுக்காகவும் மட்டும் நிதி ஏற்படுத்துவது வழக்கம். மேலே கூறிய இன்ஷூரன்சுகள் யாவும் தனிப்பட்ட ஸ்தாபனங்களால் நடத்தப்பட்டுள்ளன. ஆயினும் சமூ கம் இன்ஷூரன்சு ஸ்தாபனங்களின் நலத்தை நாடிநிற் கின்றபடியால் அரசாங்கக் கண்காணிப்புப் பல துறை களில் அவசியமாகிறது. சமூக இன்ஷூரன்சு: பல நாடுகளில் மக்களுக் கும் அவர்களுடைய பொருள்களுக்கும் பல காரணங் களால் ஏற்படக்கூடிய நஷ்டங்களை அரசாங்கம் இன் ஷூரன்சு வாயிலாக ஈடு செய்கின்றது.ஆயுள் இன் ஷூரன்ஸில் நோய், முதுமை, வேலையின்மை போன்ற காரணங்களால் தனி மனிதனுக்கு ஏற்படக்கூடிய பொருள் வருவாய் நஷ்டத்தைச் சமூகத்தில் உள்ள அனைவரும் ஒருங்கு கூடிக் கட்டிய பிரீமியங்கள் காக் கின்றன. குறிப்பிட்ட விபத்துக்களால் ஏற்படும் பொருள் அல் லது வருவாய் நஷ்டங்களுக்காகப் பலர் கட்டிய பிரீமி யத் தொகைகளால் நஷ்டமடைந்த சிலர் ஈடு பெறு கிறார்கள் என்ற கொள்கை சமூக இன்ஷூரன்சைச் சமூக அறத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுகிறது. தனி இன்ஷூரன்சைப்போலவே சமூக இன்ஷூரன்சும் எதிர்பார்க்கக் கூடிய நஷ்ட விகித ஆராய்ச்சியை அடிப் படையாகக் கொண்டது. அவ்வாறு இல்லாவிட்டால் சமூக நஷ்ட ஈடு கொள்ளக் குறையாத சமூக நிதியி லிருந்து வருகின்றது என்ற எண்ணம் பொதுமக்கள் மனத்தில் உண்டாகி, வெகு ரிறிது காலத்தில் இன்ஷூ ரன்சின் தன்மையைக் கெடுத்துவிடும். நோய் இன்ஷூரன்சு : எவரேனும் நோய்வாய்ப் பட்டால், அவருக்கு வேண்டிய மருந்து, உறைவிடம், சிகிச்சை போன்றவற்றையளித்து, அக்காலத்தில் அவர் வருவாயில் ஏற்படக்கூடிய குறைவையும் ஈடுசெய்வது. இதனடியாக, நோய்க் காலம் முழுமைக்குமோ, அதில் ஒரு பகுதிக்கோ, வருவாய்க் குறைவு அனைத்துமோ அதில் ஒரு பகுதியோ தரப்படும். வேலையின்மை இன்ஷூரன்சு: இது வேலை செய்ய உடல் வன்மையும் விருப்பமும் இருந்தும் வாய்ப்பு இல்லாதபோது வாழ்க்கைக்குப் போதுமான வரு மானம் பெறச் செய்வது.