பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ஷூரன்சு

156

இன்ஷூரன்சு

முதுமைப் பென்ஷன்: இது உழைப்புக் காலம் முடிந்த வயதுக்குப் பின்னர் பிறரை அண்டி வாழாமல் சுதந்திர வாழ்வு அளிப்பது. பேறுகால இன்ஷூரன்சு: இது பிள்ளைப் பேற் றுக்குச் சிறிது முன்பும் பின்பும் உடல் வருந்தி வேலை செய்ய இயலாதபோது வருவாய் நஷ்டத்தை ஈடு செய்வ துடன் அப்போது ஏற்படும் செலவுகளையும் ஈடு செய்வது. இத்தகைய சமூக இன்ஷூரன்சுகள் சமூகம் முழு வதையும் பாதிக்கக்கூடிய நஷ்ட ஈடுகள் ஆகையால் அவற்றைச் சமூகமே ஏற்று நடத்தல் இயல்பே. மேலும், அவை கட்டாயமாகச் செய்யப்பட்டாலன்றி, எவர்கள் தங்களுக்கு நோய், வேலையின்மை போன்ற இன்னல்கள் அதிகமாகவோ அடிக்கடியோ ஏற்படும் என்று கருதுகிறார்களோ, அவர்கள் மட்டும் ஒருங்கு சேர்ந்து நஷ்டவிகி ஆராய்ச்சிக்கே இடமின்றிச் செய்துவிடலாம். ஆதலின், அரசாங்கம் இதனைச் சமூக முழுமைக்குமோ, ஒரு பகுதிக்கோ கட்டாயமாக ஏற்று நடத்துகிறது. . இன்ஷூரன்சு மற்ற வியாபாரங்களைப் போன்ற தல்ல. இன்ஷூரன்சு கம்பெனிகளின் மொத்த ஆஸ்தி களோடு ஒப்பிடும்போது அவற்றின் முதலீடு மிகச் சிற் றளவினது. வேறு எந்த வியாபாரத்தையும்விட இதில் மிகப் பெரும்பான்மையான மக்களின் பணம் புழங்கு கிறது. இரண்டாவதாக, பலர் ஒன்று சேர்ந்து கட்டிய சிறு தொகைகள் இன்ஷூரன்சால் பலன் பெறுவோர்க் குச் சராசரியாக வழங்கப்படுகின்றன. மொத்தத்தில் பார்க்கும்போது, அனைவரும் சேர்ந்து கட்டிய பணத்தை யும் அதன் பெருக்கத்தையும் அதிகமாக அனைவரும் சேர்ந்து பவன் பெற முடியாது. நிருவாகத் திறமைச் சிறப்பே அன்றி நஷ்ட விகித ஆராய்ச்சியும் இன்ஷு ரன்சில் கருதற்பாலது. மூன்றாவதாகச் சிறப்பாக ஆயுள் இன்ஷூரன்சில், பலருடைய சேமிப்புக்கள் ஆகிய சிறு துளிகள் ஏஜண்டுகளின் முயற்சியாகிய சிற்றாறுகள் வழியே ஓடி இன்ஷூரன்சு நிலையங்களாகிய ஏரிகளில் பாய்ந்து, அவ்வேரி நீர் பல ஆண்டுகளில் சமூகத்தின் நலனுக்காகப் பயன்பட்டு, மக்கள் தொழிலையும் முயற்சி யையும் வளம்படுத்திப் பெருகிய பலனை இன்ஷர் செய்தவரின் நலனுக்காகத் திருப்பித் தருவது. இந் நீண்ட காலப் போக்கிலும், வருவாயிலும், காப்பாற்று வதிலும், பாய்ச்சி வளம்படுத்துவதிலும் சிறந்த கண் காணிப்பு வேண்டியுள்ளது. நிலைய நிருவாகத்தினர் கண்காணிப்பு மட்டும் அன்றிச் சமூகமும் கண்காணிக் கக் கடமைப்பட்டுள்ளது. இன்ஷூரன்சு கன்ட்ரோலர் என்பவர் இன்ஷூ ரன்சு முதலீடு, கணக்குக்கள், எஜண்டு முறைகள், வியாபார ஒழுங்கு,பிரீமியம், பாதுகாப்பு யாவற்றை யும் கண்காணிப்பார். 1871-ல் உருவாகிய இந்திய இன்ஷூரன்சு, 1952 ஆம் ஆண்டு இறுதியில் 178 கம்பெனிகளின் மூலமாக 39.25.000 மக்களை 916 கோடி ரூபாய்க்கு ஆயுள் இன்ஷூர் செய்துள்ளது. அவ்வாண்டில் அவர்கள் கட்டிய பிரீமியம் ரூ.48.87,000. அவ்வாண்டில் 203 ஏனைய இன்ஷூரன்சு கம்பெனிகள் ஈட்டிய மொத்த நிகர பிரீமியத் தொகை வருமாறு: 152 கம்பெனிகள் தீ இன்ஷூரன்சு ரூ. 10,44.62,000 133 144 கடல் " பிற . ரூ.4,72,40,000 ரூ.6.06.49,000 இன்ஷுரன்சு கம்பெனியின் மொத்த ஆஸ்திகள் 1952 இறுதியில் ரூ. 348 கோடி.

சமூக இன்ஷூரன்சு இந்தியாவில் அண்மையில் உண்டானது. தொழிலாளர் அரசாங்க இன்ஷூரன் சுச் சட்டத்தின் (1948) கீழ் எந்திரத் தொழிற்சாலை களில் (Power Factories) வேலை செய்யும் தொழி லாளர் யாவரும் கட்டாயமாக இன்ஷூர் செய்யப்படு கிறார்கள். இன்ஷூர் செய்தவர் பெறும் பயன்: (i) நோய்வாய்ப்பட்டபோது இலவசச் சிகிச்சை. (ii) நோய்வாய்ப் பட்டபோது சிறிது காலத்திற் குப் பண உதவி. (iii) தொழில் விபத்துக்களுக் குள்ளானபோது தொழிலாளிக்கு ஈடு செய்வதுடன் அவர் குடும்பப் பரா மரிப்பிற்கான உதவி. (iv) பெண் தொழிலாளருக்குப் பிள்ளைப்பேறு காலத்தில் மருத்துவ வசதியும் பண உதவியும். இப் பயன்களுக்குரிய பிரீமியம் தொழிலாளர் முத லாளிகள் இருதரத்தாராலும் கட்டப்படும். நிருவாகச் பெலவுகளையும், வைத்தியச் செலவுகளில் கால் பகுதி யையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. இப் போது இச்சட்டத்தின் கீழ் 20 இலட்சம் மக்கள் இன் ஷூர் செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டம் முழு அம லுக்கு வரும்போது ஏறக்குறைய 25 இலட்சம் மக்கள் இன்ஷூர் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ன அரன்சு சட்டங்கள் இன்ஷூரன்சு ஓர் ஒப்பந்தம். ஆகவே இன்ஷூரன்சு செய்பவரும் இன்ஷூரன்சு செய்து கொள்பவரும் (பாலிசிதாரர்) தம் உரிமைகளையும் கடமைகளையும் வரையறுத்துச் சட்டப்படி செல்லத்தக்க ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்; அந்த இருவரும் ஒன்றுபட்ட மனம் உடையவராகவும், ஒப்பந்தம் செய்ய உரியவராகவும், இன்ஷூர் செய்வதற்குப் போதிய காரணமுள்ளவராகவும், கைம்மாறு கருதியவ ராகவும் இருக்க வேண்டும். இத்தகைய இருவருள் ஒருவர் மற்றொருவருக்குத் தம் விருப்பத்தைத் தெரிவித்து, மற்றவர் அதற்கு உடன் பட்டால். அது இன்ஷுரன்சு ஒப்பந்தம் ஆகும். அவ் விருப்பம் ஏதேனும் நிபந்தனைக்குட்பட்டதாயின் அந் நிபந்தனைக்கு உடன்பட்ட பின்னரே அது ஒப்பந்தம் ஆகக்கூடும். பொதுவாகக் கூறுமிடத்து இன்ஷூரன்சு ஒப்பந்தம் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக ஏற்பட்டது. ஆதலின், இன்ஷூர் செய்யப்பட்ட பொருள் முழு வதுமோ, அன்றி, அதில் ஒரு பகுதியோ, அழிந்துபோவ தால் யாருக்கு நஷ்டம் நேரிடுகிறதோ, அவரே அந்த இன்ஷூரன்சு மூலமாகப் பயன்பெற முடியும். நஷ்டம் அடையக்கூடாதவர்கள் இன்ஷூரன்சு ஒப்பந்தம் செய்ய உரிமை அற்றவர். தாம் அடைந்த நஷ்டத் திற்கு அதிகமான தொகையையும் இன்ஷூரன்சால் பெற முடியாது. . ஆயுள் இன்ஷூரன்சைப் பொறுத்தவரையில், ஒவ் வொருவருக்கும் தம் உயிரையும் தம் கணவன் அல் லது மனைவியின் உயிரையும் எவ்வளவு தொகைக்கா யினும் இன்ஷூர் செய்ய உரிமை உண்டு. தம் பாகஸ்தருடைய உயிரையோ, தாம் கடன் கொடுத் திருப்பவருடைய உயிரையோ. தாம் யாருக்காக ஜாமீன் கொடுத்திருக்கிறாரோ அவர் உயிரையோ இன்ஷூர் செய்யவும் உரிமை உண்டு; என்றாலும், இன்ஷூரன்சுத் தொகை அவர் உயிரிழப்பதால் தமக்கு நேரிடக்கூடிய நஷ்டத்தைவிட அதிகப்படக்கூடாது. தீ விபத்து இன்ஷூரன்சில் விபத்திற்கு உட்படக் கூடிய பொருளின் மதிப்பிற்குமேல் இன்ஷூர் செய் யக்கூடாது. குறைந்தும் இன்ஷர் செய்யக்கூடாது. .