பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனப்பெருக்கம்

169

இனப்பெருக்கம்

அணு கருவணு எனப்படும் என்றும் முன்னர்ச் சொல் லப்பட்டது. அவ்வண்ணமே பெண் அணு ஆண்ணு வுடன் சேர்ந்து கருவுறுதலால் உண்டான ஒற்றையணு வும் கருவணு எனப்படும். கருவுறுதலால் உண்டான கருவணுவிலிருந்துதான் எல்லா உயர்நிலையையெய்திய பலவணுப் பிராணிகளும் தத்தம் உயிர்வாழ்க்கையைத் துவக்குகின்றன. கருவணுப் பிளவு (Segmentation) : அண்ட வணு கருவுற்ற பிறகு அணுக்களாகப் பிரிகின்றது. கருவுறும் வரையிலும் பருவமடைந்த அண்டவணு 2 3 d 4 இயக்கமின்றி வாளா கிடக் கும். கருவுறல் ஒருவகையான மிகப்பெரிய கிளர்ச்சியை அண்டவணுவுக்கு அளிக்கின் றது. விந்தணு வொன்று அதைத் தாக்கி உட்புகுந்து, இரு உட்கருக்களும் கலந்தத னாலே அதுகாறும் செயலற்று மந்தமாகக் கிடந்த அண்ட வணு தன்னை அடுத்தடுத்து வகுத்துக் கொள்ளுமோர் மிகச் சிறந்த செயலை மேற் கொள்ளுகின்றது. கருவணு இரண்டாகப் பிரிகின்றது. வைகளும் இரண்டாகப் பிரிகின்றன. இவ்வாறு நிகழும் பிளவு களினால் புதுவணுக்கள் பெரு கும். எனினும் அவை ஒன்றோ டொன்று ஒட்டிக்கொண்டு இருப்பவையே. பின்னர் அவை தம்மை யோர் அடுக் காக ஓர் அணு ஆழம் வீதம் (One cell deep) ஒழுங்குக் குட்படுத்திக் குடைவு கொண்ட வொரு பந்து வடிவமாக அமைத்துக் கொள்ளுகின்றன. இதற்குத் தான் 'பிளாஸ்ட்டுலா (Blastula) என்று பெயர். பிறகு பிளாஸ்ட்டுலாவின் ஒரு துருவத்தின் (Pole) புறத் 5 தில் ஒரு குழி தோன்றுகிறது. இக்குழி ஆழ்ந்தாழ்ந்து அகக் குடைவை குறைத்துக் குறைத்து ஒழித்துவிடுகிறது. பிளாஸ்ட்டுலாவின் குடைவு நீங்கவே, அவ்வினையின் பய னாக அவ்விடத்தில் தொரு குடைவு தோன்றும். மான காஸ்ட்ருலா நிலை. சூழ்புறத்தில் நிலவும் நீரோ, க. புறப்படை. b. உட் திரவப்பொருளோ அதற்குள் படை, C. கடுப்படை யணுக் கள், d. உடலறை. கூரு வளந்தல் 1. கருவுற்ற அணு. 2. நான்கு அணு நிலை. 3. எட்டு அணு நிலை. 4. பந்து வடிவ மான பிளாஸ்டுலா நிலை 5. இருசுவர்க் கிண்ண வடிவ R பிறி நிரம்புகின்றது. ஒரே படையை (Layer) உடைய கோளவடிவங்கொண்ட பிளாஸ்ட்டுலா மேற்கூறிய வகையிலான இருபடை படைத்த கிண்ண கொண்ட காஸ்ட்ருலா (Gastrula ) வடிவங் ஆகின்றது. காஸ்ட்ருலாவின் புறத்தே தோன்றும் படைக்குப் புறப்படை (Ectoderm) என்று பெயர். அகத்தே மறைந்து கிடக்கும் படை 'உட்படை' (Endoderm) எனப்படும். .

புறப்படைக்கும் உட்படைக்கும் ஊடே ஓர் இடை வெளி இருக்கிறது. புறப்படையிலிருந்தும் உட்படையி லிருந்தும் பிளவுகளினால் மேலும் மேலும் பெருகும் இளைய அணுக்கள் இவ்விடைவெளியில் நிரம்பிப் பின்பு ஓர் நடுப்படையாக (Mesoderm) ஆகின்றன. உயர் நிலை பெற்ற பிராணிகளில் அவற்றின் இளஞ்சூல் வளர்ச்சியில் இம்மூன்று படைகளும் தவறாமல் நிலவு கின்றன. அடுத்த நிலைமாறுதலில் இம்மூன்று படைகளின் அணு வகுப்புக்கள் பல்வகைத் திசுக்களாகத் தம்மைத் தொகுத்துக்கொண்டும் பிரித்துக்கொண்டும் மாறுபடு கின் றன. புறப்படையிலிருந்து மிகுந்து பிரிந்து மேலெழும்பும் அணு நிறைந்த திசுக்களின் வேறுபாடு களினால் தலைமூளை, தண்டுவடம், கண்விழி, அகச்செவி, நாசி, தோல் ஆகியவை உண்டாகின்றன. உட்படையி லிருந்து தோன்றுவன குடல், கல்லீரல், கணையம் முதலியன. இடைப்படையினின்று வளரும் உறுப்புக் கள் இரத்தத் துவக்க உறுப்புக்கள், சிறுநீர்ச் சுரப்பி கள், தசை, எலும்புக்கூடு என்பன. இடைப்படையி லிருந்துதான் இனப்பெருக்க அங்கங்களும் பிரிந்து தோன்றுகின்றன. இம் மூ ன் று அடிப்படையான படைகளினின்று பிரிந்து மேலெழுந்துவரும் அணுக்கூட்டங்களின் மாறு பாடுகளை அடியாகக்கொண்டு வெவ்வேறு உறுப்புக் களை உருவநிலைப்படுத்தும் செயல் உறுப்புப் பிறப்பு (Organogeny) எனப்படும். பலவணுப் பிராணிகளின் மண்டலத்தில் இனப் பெருக்கத்திற்குரிய அணுக்கள் வேறு; உடலணுக்கள் வேறு. இனப்பெருக்க அணுக்களின் தனிச்சிறப்பான செயல் பிறப்பிப்பதே, உடலணுக்கள் பல்வகைத் திசுக் களாகிப் பல்வகைச் செயல்களை நடத்துகின்றன. ஒற்றையணுப் பிராணிகளில் பிறப்பிக்குஞ் செய்கை யின் வினைப்பயனாக ஈன்ற பிராணியின் உடல் மகவு அணுக்களுக்கு வகுக்கப்பட்டுக் கொடுக்கப்படவே, ஈன்ற பிராணியின் உடல் கழிந்துபோகின்றது. பல வணுப் பிராணிகளில் இருபாலுக்குமுரிய அணுக்கள் கருவுறுதலால் அடுத்த தலைமுறைக்குரிய மகவுகளை உருவமெடுக்கச் செய்து, அவற்றைப் படைப்பதில் ஈடு பட, உடலுக்குரிய அணுக்களோ, பிறப்பிக்கும் வினை யினால் மறைந்து போவதில்லை. 'சாவு என்ற நிகழ்ச்சி பலவணுப் பிராணிகளிடம் வந்துலாவுதலால் அவற்றின் உடல் அழிந்து ஒழிகின்றது. ஒற்றையணுப் பிராணிகளில் ஈன்ற பிராணியின் மெய் சாவில்லாமல் மகவு அணுக்களுக்குள் நிலைபெறலால் மேலும் மேலும் வழிவழியாக அது அழியாமல் செல்லுகின்றது. கடலில் வாழும் சிற்றுயிர்களனைத்தும் தம்தம் பால ணுக்களைத் தம்மைச் சூழ்ந்துள்ள கடலுக்குள் தூவி விடுகின்றன. விந்தணுக்கள் அண்டவணுக்களைத் தேடி நீந்தித் திரியும். தமது இன அண்டவணு ஒன்றைச் சந்தித்ததும், இரண்டும் இரண்டறக் கலந்து ஒரே கருவணுவாகின்றன. கடலில் உறையும் பலப் பிராணி வகுப்புக்களின் உயிர் வளர்ச்சியில் லார்வா என்னும் இடைப்பருவம் தோன்றுகின்றது. இதற்குப் பெற்றவற்றின் உருவ மில்லை. வார்வா நல்வளர்ச்சி எய்தினபின் உரு மாற்றம் ((Metamorphosis) அடைந்து, பெற்றவற் றின் உருவத்தை அடைகின்றது. நிலத்தில் வாழும் பிராணிகளிடமும் சில வகுப்புக்களின் முதிர்ச்சிக் காலத்தில்லார்வா நிலைகளைக் காணலாம். எடுத்துக்காட் டுக்களில் ஒன்று: வண்ணத்துப் பூச்சி, சிறகிலாப் புழுவாகப் பச்சையிலையைக் கடித்து உண்டு, பின்

22