பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

FF· ஒலி : இது தமிழுள்ளிட்ட இந்திய மொழி களில் நான்காம் உயிர்; இகரத்தின் நெடிலாம். இது சுரத்தாலும் மாத்திரையாலும் நாவின் முறுக்கேற்றத்தாலும் அதனின் வேறாகும்; ஆதலின் இதனைச்செறிவுடைக் (Close) குவியா (Unrounded) முன்வாய் (Front) இறுகு (Terse) உயிர் என்பர். அகரம் ஆகாரமாதற்குக் கூறியவை இதற்கும் ஆகும். நெகிழாமையைத் தடுக்க யகர ஒலி பின் வரும்; கல்வெட்டுக்களில் இதன் பின் யகரம் இட்டு எழுதக் காண்கிறோம் (தீய்). ஓரெழுத்தொரு மொழி, விளி, அளபெடை பெற்ற இடம் முதலியவற்றி லன்றி ஈ ஈற்றில் நெகிழ்ந்து போவதால் வருவது அருமையாயிற்று. செய்வி என்பதன் ஈற்றில் உள்ள இ இவ்வாறு குறுகிய ஈ யே என்பர். வடமொழி ஈ, ஈறு இகரமாகும். இ பொருள்: "பல்லெல்லாம் தெரியக்காட்டி ஈ என இளிக்கிறான்' என்ற வழக்கை நோக்க, ஈ என்பது ஈ இழிந்தோன் இரப்பின் சைகையாகிக் குறிப்போசை யாகி இரப்புரையாகியது என்பர்; சைகை ஒலி மொழி யாக வளர்த்தது; குறிப்போசை மொழியாக வளர்ந்தது என்ற கொள்கைகளுக்கு இது எடுத்துக்காட்டாம். பின்னர்ப் பொதுவாகக் கொடு என்ற பொருளில் வழங் கியது. (1) பகிர்தல், கணக்கில் வகுத்தல், ஆசிரியன் கற்பித்தல், படைத்தல், ஈனுதல், நேர்தல், அழிவு என்ற பொருளில் வரும் வினைப்பகுதியாகவும்,(2) ஈ, தேனீ, வண்டு என்ற அறுகாலிகளையும், இறகு என் பதையும் குறிக்கும் பெயர்ச் சொல்லாகவும், (3) அதி சயக் குறிப்பாகியும், விரீஇ முதலிய இடங்களில் இகரம் நீண்டு, அளபெடுத்து, இறந்தகாலப் பிறவினை விகுதி யாகியும், முன் முன்னிலை ஈறாக இருந்தது, பொருளற்ற நிலையில் முன்னிலை அசையாகியும் வரும் இடைச்சொல் லாகவும் வழங்கும். இது பழைய தமிழிசை மரபில் நி என்ற சுரத்தைக் குறிக்கும் அறிகுறியாகும். வடிவம்: இதன் வடிவம் வளர்ந்த வரலாறு கீழ்க் கண்டபடியாம்: அசோகன் (கி.மு.3ஆம் நூ.) .. ஃ. பழங் குகை (கி. மு. 3 } of கி.பி.8ஆம் நூ. Jo P 10ஆம் நூ. 27 13ஆம் நூ. ஈ தற்காலம் இஈ உயிர்மெய்யெழுத்தில் ஈகாரக் குறியாக வரும் மேல் விலங்கு முதலில் இடப்புறம் சுழிக்கப்பெற்றும், 11ஆம் நூற்றாண்டிலிருந்து வலப்புறம் சுழிக்கப்பெற்றும் வர லாயிற்றாம். கி.பி. 8ஆம் நூ. 7 10 71. 18 5B Fo

கோல் எழுத்தினும் வட்டெழுத்து மாறுபடக் கோலெழுத்தில் எழுந்த வளர்ச்சி, வட் காணோம். டெழுத்தில் முன்னரே கிறோம். தோன்றக் காண் தெ.பொ.மீ. ஈக்களில், ஈ இரண்டு சிறகுகளுள்ள பூச்சிவகை. வீட்டு ஈ, மாட்டு ஈ, இறைச்சியில் உட்காரும் நீல ஈ, கண்ணில் உட்காரும் கண்கொசு என்னும் மிகச் சிறிய ஈ, அளிந்த பழத்துக்கு வரும் பழ ஈ எனப் பல சாதிகள் உண்டு. தேனீயையும் ஈ என்று அழைப் பினும் அது ஈ வகையைச் சேர்ந்ததன்று; எறும்பு. குளவிகளுக்கு நெருங்கியது. அதற்கு நான்கு இறக்கை கள் உண்டு. பொதுவாகப் பூச்சிகளுக்கு (உதா : கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, ஈசல், தும்பி, பட்டுப் பூச்சி, வண்டு, ஆண் பெண் எறும்புகள், குளவி) இரண்டு இணையாக நான்கு இறக்கைகள் உண்டு. ஈக் களுக்கோ முன் இணையாகிய இரண்டு இறக்கைகளே உண்டு. மற்றப் பூச்சிகளுக்கு இரண்டாவது இணை யாக இருக்கும் பின்னிறக்கைகள் ஈக்களுக்குச் சிறு முளை போன்ற உறுப்புக்களாக மாறியுள்ளன. இவ்வுறுப்பு, சீர் (Halteris, Balancet) எனப்படும். சீர்கள் உணர்ச்சிக் கருவிகளாகவும் ஈ பறக்கும் போது உடலைச் சமநிலையில் இருத்த உதவும் கருவிகளாகவும் பயன் படும். ஆகவே ஈ என்பது சாதாரணமாக வீட்டிலும், வீட்டைச் சுற்றிலும் பகற்காலங்களில் காணும் இரு சிறகிப் (Diptera) பூச்சிகள் ஆகும். மலங் 1 வீட்டு ஈ: ஈக்களிலெல்லாம் மிகவும் சாதாரண மாகக் காணப்படுவது வீட்டு ஈ உலக முழுவதும் மனிதர் வாழும் மனைகள் எங்கு உண்டோ அங்கெல் லாம் இதுவும் வாழ்வதால் இதற்கு இப்பெயர் வந்துள் ளது. இப்படி எங்கும் உள்ளதும் நன்கு அறிந்தது மாகிய காரணத்தினாலேயே அடைமொழி ஒன்றும் கொடுக்காமல் ஈ என்றே இதை அழைக்கிறோம். ஈயும் அழுக்கும் ஒன்றே என்பர். அசுத்தம் எங்கு இருக்கிறதோ அங்கே ஈயும் இருக்கும். கழிக்கும் இடம் ஒன்றிலிருந்து கன அடி மண்ணை யெடுத்து, அதிலிருந்து வரும் ஈயைக் கணக்கிட்ட போது 4.000 ஈக்கள் வந்தன. ஒரு பெண்ஈதன் வாழ்நாளில் ஐந்து, ஆறு தடவை முட்டையிடும். ஒவ்வொரு தடவைக்கும் ஏறக்குறைய 150 முட்டைகள் இருக்கும். முட்டை நீண்ட அண்ட வடிவமாகவும், முத்தின் ஒளிபோன்ற வெண்ணிறமுடையதாகவும் அங்குல நீளத்தில் இருக்கும். இட்ட 8 முதல் 24 மணி நேரத்தில் முட்டை பொரித்துப் புழுப்போன்ற லார்வா வெளிவரும். லார்வாவின் தலைப்புறம் கூராக இருக்கும். அதில் கொக்கிபோன்ற ஒரு முள் நீட்டிக்கொண்டிருக் கும். இது லார்வாவின் உணவுப்பொருளைக் கிழித்துப் பிய்ப்பதற்கும், துறட்டிபோல முன்னுக்கு மாட்டி மாட்டிக்கொண்டு உடலை இடம்விட்டு இடம் இழுத் துச் செல்வதற்கும் உதவும். லார்வாவுக்கு வேறு கால் கள் இல்லை. லார்வா நகர்ந்து செல்லும்போது அதன் நீண்ட மெல்லிய புழுப்போன்ற உடலை முட்கள் உள்ள இரண்டு திண்டுகள் (Pads) தாங்கி நிற்கும். இந்தப் புழுவானது தான் உண்ணும் சாணியில் முழுவதும் புதைந்து வாழும், இது பொரித்து 24 மணி நேரத் திற்குள் இதன் மேல் தோல் இதற்குப் பிடிக்காதபடி அவ்வளவு பெரிதாக இது வளர்ந்துவிடும். அப்போது மேல்தோல் வெடித்து, உரிந்து, வேறே புதிய தோல். உண்டாகும். இன்னொரு 24 மணிக்குள் திரும்பி து