பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இமாசலப் பிரதேசம்

5

இயக்கங்காட்டி

பகுதி உயர்ந்தது; மற்றப் பகுதிகள் பெரும்பாலும் மூன்றாம் காலத்தில் உயர்ந்தன. இமயமலை பல படிகளில் தெற்கு நோக்கி வளர்ந்தது. முதலில் தோன்றிய மலைத்தொடரின் அடிவாரத்தில் ஒரு மறுதலையான பிளவுப் பள்ளம் தோன்றியது. மலைத்தொடர் இதை நோக்கித் தள்ளப்படவே, அங்கு மடிப்புக்கள் தோன்றிப் புது மலைத்தொடர்கள் தோன்றின. இது பலமுறை நிகழ்ந்து தற்போதுள்ள தொடர்கள் தோன்றின. இவ்விடத்தில் புவியின் மேற்புறணி இன்னும் நிலைப்படவில்லை என்பதற்கு இங்குத் தோன்றும் புவியதிர்ச்சிகளே சான்றாகும்.

இமயமலையின் தட்பவெப்ப நிலையில் இடத்தையொட்டிப் பெரிய வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதிகளை விடக் கிழக்கே வெப்பமும் மழையும் அதிகம். இங்குத் தட்பவெப்ப நிலை அதிகமாக மாறுவதில்லை. தென்பகுதிக்கும் வடபகுதிக்கும் இன்னும் அதிகமான தட்பவெப்ப வேறுபாடுகள் உள்ளன. மேற்குப் பகுதியில் மழை குறைவாக இருப்பதோடு அன்றாட வெப்ப நிலை வேறுபாடு மிக அதிகமாக இருக்கும். தெற்குப் பகுதியிலுள்ள மலைகள் அதிகமாக அறிபட்டும், மேற்குப் பகுதி உருண்ட நிலத்தோற்றங் கொண்டும் காணப்படுவது இப்பகுதிகளின் தட்பவெப்ப வேறுபாடுகளை அறிவுறுத்துகின்றது. கிழக்கில் வெண்பனிக்கோடு 44.000 அடி உயரத்திலும், மேற்கே 19,000 அடி உயரத்திலும் உள்ளது. வறட்சியான திபெத்துப் பகுதியில் இது இன்னும் 3,000 அடி உயரத்திலுள்ளது.

தட்பவெப்ப நிலைக்கேற்ப இமயமலையின் தாவரங்களும் இடத்திற்கு இடம் மாறுபடும். இதில் உப அயனமண்டலக் காடுகள், பருவ மழைக்காடுகள், இலையுதிரா மரக்காடுகள், குளிர்நாட்டு ஊசியிலைக் காடுகள் போன்ற பலவகைத் தாவர வகைகள்காணப்படுகின்றன, மேற்குப் பகுதியில் மத்தியதரைக் கடல் தாவர வகைகளும்,உயர்ந்த பகுதிகளில் ஆல்ப்ஸ் மலைத் தாவர வகைகளும், மேற்கே ஆப்பிரிக்கக் காட்டுவகைத் தாவரங்களும் உள்ளன. பயன்படும் மரவகைகளில் சாலம், வெள்வாகை, தேவதாரு ஆகியவை முக்கியமானவை. 7.000 அடி உயரம் வரை தேயிலை பயிராகிறது. திபெத்துப்பகுதியில் பெரும்பான்மையான தாவரங்கள் இரண்டடி உயரத்திற்கும் குறைவான புதர்களாக இருக்கும்.

இந்தியப் பகுதியில் வெப்பநாட்டுக் காட்டு விலங்குகள் உள்ளன. திபெத்தில் காணப்படுபவை குளிர்ப் பிரதேசங்களில் வாழும் விலங்கினங்கள், மிகப் பல பறவை வகைகளும் இமயமலையில் உள்ளன. 8,000 அடி உயரம் வரை நாகப்பாம்பு காணப்படுகிறது. பல்லிகளும் தவளைகளும் 18,000 அடி உயரத்திலும் உள்ளன அதிகமான உயரத்திலுள்ள எல்லா விலங்குகளும் தடித்த ரோமப் போர்வையை உடையவை. இவை கடுங்குளிரில் ஒடுங்கிக் கிடந்து அக்குளிர்கால ஒடுக்கத்தால் தம்மைக் காத்துக்கொள்ளுகின்றன.

இமாசலப் பிரதேசம் இந்திய யூனியனின் சீ பிரிவு இராச்சியங்களுள் ஒன்று. பிரிட்டிஷ் ஆளுகையின்போது 21 சுதேச சமஸ்தானங்களாக இருந்தவற்றை ஒன்றாக இணைத்து இந்த இராச்சியம் அமைக்கப்பட்டது. இதன் பரப்பு : 10.600 ச. மைல்; மக்: 9,89,437 (1951). இதன் தலைநகர் சிம்லா. இது மாஹசு, சிர்மூர், மண்டி, சம்பா என்ற நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் அரசாங்கத் தலைவரான பிரதம கமிஷனருக்கு உதவியாக 9 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்குழுவினருள் அறுவர் மக்களின் பிரதிநிதிகள். மற்ற மூவரும் முன்பிருந்த சமஸ்தான அரசர்களின் பிரதிநிதிகள். இந்த இராச்சியத்திற்கு 36 உறுப்பினர் கொண்ட சட்டசபையும் உண்டு.

இமாசலப் பிரதேசம்

இந்த இராச்சியத்தில் உருளைக்கிழங்கும் பல பழ வகைகளும் பயிராகின்றன. இங்குள்ள காடுகளும் முக்கியமானவை.

இயக்கங்காட்டி (Stroboscope) : இயங்கும் பொருள்களை அசையாத தோற்றமுள்ளவைபோலக் காட்டும்கருவி இயக்கங்காட்டி எனப்படும். பிளேட்டோ (Plateau) என்னும் பெல்ஜிய பௌதிக அறிஞர் இதை முதன் முதலில் அமைத்தார். விளிம்பைச் சுற்றிலும் தொளைகள் கொண்ட ஒரு சக்கரத்தைச் சுழற்றி, அத் தொளைகளின் வழியே பொருளைப் பார்க்குமாறு ஒரு கருவி அமைத்தால், அதுவே எளிதாக உண்டாக்கிய

ஓர் இயக்கங்காட்டியாகும். கண்ணுக்கு நேராக ஒரு தொளை வரும்போது மட்டுமே பொருளானது புலப்படும். நமது கண்ணினால் ஒரு பொருளைப் பார்க்கும் போது அது மறைந்த சிறிது நேரம்வரை அது உள்ளது போலவே தோன்றுகிறது. ஆகையால் அது பல முறை வெகுவிரைவாக நம் கண்முன் தோன்றி மறைந்தாலும்