பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/358

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

358

செய்து, தன் பலத்தைப் பெருக்கிக்கொள்ள நினைத்தது. போலந்தின் துருப்புக்கள் மூன்று பிரிவாகப் பிரிந்தன . ஒரு பிரிவு மத்திய எல்லையைப் பாதுகாத்தது. மற்றொன்று தெற்குப் பகுதியையும், மூன்றாவது கிழக்குப் பிரஷ்யாவை அடுத்த எல்வையையும் காத்துவந்தன. ஜெர்மனி ஒரே சமயத்தில் ஐந்து இடங்களிலிருந்து போலந்தைத் தாக்கியது. தட்ப வெப்பநிலையும் ஜெர்மனிக்கு ஆதரவாக இருந்தது. போட்ட திட்டத்தின் படி ஜெர்மனி வெற்றி பெற்று வந்தது. முதல் வார முடிவில் வார்சா நகரம் வரையில் ஜெர்மனியின் படைகள் முன்னேறின. ஜெர்மன் விமானங்கள் போலந்து முழுவதிலும் குண்டுகளை வீசின. போலந்தின் விமானத் தளங்களும் ரெயில்பாதைகளும் பாலங்களும் போக்குவரத்து வழிகளும் அழிந்தன. நகரங்கள் பாழடைந்தன. தொழிற்சாலைகள் வரிந்து சாம்பலாயின. பொருள் வழங்குதல் தடைப்பட்டது. இரண்டாவது வாரத்தில் ஜெர்மனியின் படையை எதிர்த்து நிறுத்தப் போலந்துப் படை முயன்றது. பயன் விளையவில்லை. ஜெர்மனியின் வடக்குப் படைத்தொகுதியும் தெற்குப்படைத் தொகுதியும் போலந்துப்படையைச் சுற்றி வளைத்துவிட்டன. எல்லாப் போக்கு வரத்துக்களும் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனினும் போலந்தின் தலைநகரான வார்சாவிற்கு அண்மையில் போலந்துப் படை தன் எதிர்ப்பைக் கைவிடவில்லை. இச்சமயத்தில் (செப்டெம்பர் 17-ல்) ரஷ்யப் படை போலந்தின் கிழக்கு எல்லைக்குள் நுழைந்து விரைவாக முன்னேறி வந்தது. போலந்துப் படை இரு படைகளுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டு துடித்தது. வார்சா நகரில் மூன்று வாரம் கடும் போர் நடந்தது. செப்டெம்பர் 27-ல் வார்சா பணிந்தது. அக்டோபர் 5-ல் போலந்து முழுவதும் பகைவரின் வசமாயிற்று. 7.00,000 போலந்துப் போர்வீரர்கள் கைதியாயினர். இதுமட்டுமன்றி 40,000 குதிரைகளையும், 1.600 துப் பாக்கிகளையும், 8,000 எந்திரத் துப்பாக்கிகளையும் பகைவர்கள் கைப்பற்றினர். 800 விமானங்களைக் கொண்ட போலந்து விமானப்படை முழுதும் அழிந்தது. மனியின் திட்டம் நிறைவேறியது. கிழக்குப் போர் முனை கலைக்கப்பட்டது. மேற்குப் போர்முனையில் ஜெர்மனி தன் கவனத்தைச் செலுத்தத்தொடங்கியது மேற்கு முனை: யுத்தம் தொடங்கியது முதல் ஏழு மாதங்களில் மேற்கு முனையில் பெருஞ்சண்டை ஒன்றும் நிகழவில்லை. போலந்துச் சண்டை முடிந்ததும் வெஸ்ட்வால் என்ற இடத்தில் ஜெர்மானியர் படையரணை அமைத்தனர். எதிர்ப்புறத்தில் மாஜினோ என்ற படை யரணைப் பிரெஞ்சுக்காரர்கள் அமைத்தனர். 9 மாத காலம் ஒன்றுமே நிகழவில்லை. குளிர் காலத்திலும் இந்நிலையே நீடித்தது. நவம்பர் முடிவில் ரஷ்யா-பின்லாந்துச் சண்டை தொடங்கியது. 1939 அக்டோபர் 7-ல் பின்லாந்திடம் தனக்குச் சில யுத்த வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ரஷ்யா கேட் டுக்கொண்டது. பேச்சுக்கள் நடந்தன. ஆனால் முடிவு ஏற்படவில்லை. ஆகவே நவம்பர் 30-ல் ரஷ்யப் படை பின்லாந்தை முற்றுகையிட்டது. கடுமையான குளிர் பின்லாந்தின் சிறிய காலச் சண்டை தொடங்கியது. படை ரஷ்யாவின் பெரும்படையை எதிர்த்துப் போராடியது. ரஷ்யப் படை சிறிது சிறிதாகப் பின்னடைந்தது. ரஷ்ய விமானத் தாக்குதலால் படைத்தளங்களும் பட்டணங்களும் பழுதடைந்தன. எனினும் பின்துப் படை ஊக்கத்தைக் கைவிடாமல் கடும்போர் புரிந்து முன்னேறிச் சென்றது. பின்லாந்தின் வீரச்செயலை உலகம் முழுதும் பாராட்டியது. 1940 ஜனவரி முடிவில் பெரு மாறுதல் நிகழ்ந்தது. ரஷ்யாவின் புதுப் படை வீரர்கள் போர்முனைக்கு வந்து சேர்ந்தனர். புதிய தந்திரங்களைக் கையாண்டனர். விமானத் தாக்குதலைப் பலப்படுத்தினர். போக்கு வரத்து வழிகளைத் துண்டித்தனர். பரவிச் சென்று தாக்கு வதற்கு மாறாக ஒரே இடத்தில் செறிந்து தொடர்ந்து தாக்கினர். ஆறு வாரத்திற்குள் பின்லாந்தின் எதிர்ப் புத் தளர்ந்தது. ஜெர்மனியின் முன்னிலையில் 1940 மார்ச்சு 13-ல் போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட் டது. ரஷ்யா தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டது. நார்வேப் போர்முனை (1940 ஏப்ரல் 9 முதல் ஜூன் 10 வரை) : நார்வேயையும் டென்மார்க்கையும் கைப்பற்ற வேண்டியது இன்றியமையாதது என ஜெர்மனி கருதியது. கப்பற்படைத் தளங்களையும் விமானப் படைத் தளங்களையும் பிரிட்டனுக்கு எவ்வளவு அருகில் அமைக்க முடியுமோ அவ்வளவு அருகில் அமைக்க விரும்பியது. 1940 ஏப்ரல் 9-ல் டென்மார்க்கையும் நார்வேயை யும் ஜெர்மன் படைகள் தாக்கின. சில மணி நேரத்தில் டென்மார்க்கைக் கைப்பற்றின. அரசாங்கம் அடி பணிந்தது. நார்வேக் கடற்கரை முழுவதிலும் ஒரே சமயத்தில் போர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே நாளில் நார்வேயின் தலைநகரம் கைப்பற்றப்பட்டது. ஜெர்மனியின் போர்க்கப்பல்கள் நார் வேத் துறைமுகத்தில் நுழைந்தன; விமானங்கள் நக ரத்தை வட்டமிட்டன. வியாபாரக் கப்பல்களில் ஒளிந் திருந்த ஜெர்மன் படைவீரர்கள் திடீரென வெளிவந்து நார்விக் நகரத்தில் நுழைந்தனர். மற்ற நகரங்களிலும் இதே முறையில் படைகள் வந்து இறங்கின. அழிவு வேலைகள் நடந்தன. நார்வேப்படை செய்வதறியாது தடுமாறியது ; சண்டையே செய்யாமல் அடிபணிந்தது. எல்லாப் போக்குவரத்து வழிகளும் ஜெர்மானியர் வச மாயின. ராணுவ ஏற்பாடுகள் எல்லாம் கைப்பற்றப் பட்டன. அட்லான்டிக்கிலும் வட கடலிலும் நார்விக்கிலும் கப்பற்சண்டை நிகழ்ந்தது. முதல்வார முடிவில் பிரிட்டிஷ் படைகள் மத்திய நார்வேயிலும் நார்விக்கிலும் வந்து இறங்கின; உள் நோக்கிச் சென்று நார்வேப் படையுடன் சேர்ந்து ஜெர்மன் படையைத் தாக்கத் திட்டமிட்டன. ஆனால் முடியவில்லை. ஜெர்மனியின் கடுமையான விமானத் தாக்குதலுக்குப் பிரிட்டிஷ் படைகள் பலியாக நேர்ந்தது. பிரிட்டிஷ் சண்டைக் கப்பல்கள் பின்னடைந்தன. ஜெர் மன் படை மேலும் மேலும் பெருகியது. முடிவில் 1940 மே 5-ல் உறவுநாட்டுப் படைகள் தென் நார்வேயையும் மத்திய நார்வேயையும் ஜெர்மனிக்கு விட்டுவிட்டு வெளியேறின. நார்விக்கில் ஒரு மாதத்திற்கு மேலும் சண்டை நடந்தது. ஜூன் தொடக்கத்தில் நார்விக்கை உறவு நாட்டுப் படைகள் மீட்டன ஆனால் வெற்றி நிலைக்கவில்லை. பிரான்ஸில் நெருக்கடி மிகவே, உறவுநாட்டுப் படைகள் நார்வேயை வீட்டு வெளியேறும்படி நேர்ந் தது.1940 ஜூன் 10-ல் நார்வேச் சண்டை முடிந்தது. உறவு நாடுகளின் பெருமை குலைந்தது. இவைகளின் பலக் குறைவை ஜெர்மானியர் நன்கு அறிந்துகொண் மேற்கு ஐரோப்பியச் சண்டை : 1940 மே 10-ல் வின்ஸ்ட்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரி யானார். அதேநாளில் மேற்கு ஐரோப்பாவில் பயங்கரச்