பக்கம்:கலைசொற்கள் ஏழாம் பகுதி கணக்குப் பதிவியற் சொற்றொகுதி.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை

கணக்குப்பதிவியலுக்கான இக்கலைச்சொற்றொகுதி பொதுத்தகுதிப் பத்திரத் தேர்வுவரை பயன்படுத்தத் தக்கது. இக்கலைச் சொற்றொகுதியில் முதற்சொல்லின் வழிவந்த துணைச் சொற்கள் சில தம் மெதிரே முக்காற்புள்ளி கொண்டிருத்தல் காணப்படும். இவ்வாங்கிலச் சொற்களின் தமிழாக்கங்களை வாசிக்கும் போது, துணைச்சொற்களுடன் முதற் சொற்களையும் இணைத்து வாசித்தல் இன்றியமையாதது.

சென்னையரசாங்கத்தார் வெளியிட்ட கலைச்சொற்றொகுதியும் ஒரோவழி பயன்படுத்தப்பட்டது.

வடமொழிச் சொற்களை எடுத்தாளும் போது காந்தவெழுத்துக்கள் முற்றாகத் தவிர்க்கப்பட்டன. இக்கலைச்சொற்றொருதி மந்திரக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கலைச்சொல்லாராய்ந்தோர் பெயர்கள் வருமாறு:

திரு. பொ. சங்கரப்பிள்ளை , B.A., B. Com. (Hons)., M.Sc. Econ.
திரு. சோ. வன்னியசிங்கம், B. Com., M.Sc., Econ.
திரு. வ. கணேசலிங்கம் , M.Sc. Econ., M.C.I.A.
கலாநிதி வ. பொன்னையா, Ph.D.

திரு. அ. லி. மயில்வாகனன், துணைத்தலைவர் (தமிழ்), குழுவின்றலைவர்
 
அரசகருமமொழியலுவலகம்,
(கல்விப் பிரிவு),


421, புல்லர் வீதி, கொழும்பு 7.

1. 3. 57

 

2--J. N. R 8017-2,005 (10/56)