பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய படம் #5

'இது பெரிய மர்மமாக இருக்கிறதே!' 'பழைய படத்துடன் கிடைத்த நறுக்கின் வாக்கிய மும் அப்படித்தான் மர்மமாக இருந்தது. இப்போது எல் லாம் தெரிந்துவிட்டது. சற்றுப் பொறுமையோடு கேட் டால் விஷயத்தை விளக்குகிறேன்.” - "சொல்லுங்கள்' என்று சொல்லி ஜமீன்தார் தம் நெற்றியில் துளித்த வேர்வையைத் துடைத்துக் கொண்டார்.

காமைய பாண்டிய நாயக்கர் மகா வீரர். அவரைப் பாண்டிய அரசன் கண்ணப்போல் பாவித்தான். இந்தச் சம்ஸ்தானத்தை வழங்கினன். அவனுக்கு அவரைப் பிரிந்திருக்கவே மனம் சம்மதிக்கவில்லை. தனக்கு அருகி லேயே இருக்கும்படிச் செய்து விடலாமா என்று யோசிக் தான். அப்படிச் செய்தால் காமைய பாண்டியர் தம் இஷ்டப்படி செளக்கியமாக இருக்கவேண்டாமா? ஆகவே, அவரை அடிக்கடி தன்னிடம் வந்து போகும்படி சொல் லிச் சம்ஸ்தானத்துக்கு அனுப்பினன். அவர் தெய்வபக்தி உடையவர். காமைய பாண்டியர் இந்தச் சம்ஸ்தானதி பதி ஆனவுடன் செய்த முதற்காசியம் என்ன தெரியுமா? நெட்டைக்குளத்தில் ஒர் அம்மனைப் பிரதிஷ்டை செய்து தம்முடைய அரசனகிய அழகன் பெருமாள் பெயரால் அழகம்மை என்ற திருதாமத்தை வைத்துப் பூசித்தார், அந்தச் செய்தியைத் தெரிவிக்கப் போனபோது, பாண்டிய அரசன் காமைய பாண்டிய நாயக்கரைப் பிரிந்திருப்பது க ஷ் ட மாக இரு க் கி தென் ற தெரிவித்தானம். அவருடைய படமாவது இருக்கால் தான் அடிக்கடி பார்த்துச் சந்தோவிக்கலாமென்று சொன்னபோது சம்யக்கர், அடிமையினுடைய அவலக்ஷன சரீரத்துக்குப் படம் வேரு? வேண்டவே வேண்டாம்'