பக்கம்:கலைச் செல்வி, கி. வா. ஜகந்நாதன்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. - கலைச் செல்வி

என்று மறுத்துவிட்டாராம். ஆனுலும் பாண்டியன் கேட்க வில்லையாம். எப்படியோ ஒரு சித்திரகாானே இங்கே அனுப்பி ஜமீன்தாருக்குத் தெரியாமலே ஒரு படம் எழு தச் செய்து வருவித்தானும். ஒரு சமயம் நாயக்கர் பாண் டியனிடம் போனபோது அவ்வரசன் அவருக்கு அந்தப் படத்தைக் காட்டி ஆச்சரியப்படும்படி செய்யவேண்டு மென்று நினைத்தான். அப்படியே அதைக் காட்டும் போது நாயக்கர் உடம்பெல்லாம் குன்றிப்போனாாம். அழாக் குறையாகப் பாண்டியனிடம், தம் படத்தை அங்கே வைக்க வேண்டாமென்றும், அதனல் வருங்காலத் தினரின் அவமதிப்புக்குத் தாம் ஆளாகவேண்டுமென்றும் சொல்லித் தம்மிடமே அந்தப் படத்தைக் கொடுத்துவிடும் படி வற்புறுத்தினாாம். பாண்டியன் வேறு வழியொன், மறும் தெரியாமல் அந்தப் படத்தை அழிப்பதில்லை என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு காமைய பாண்டியரி டமே அதைக் கொடுத்துவிட்டானும், அதை அப்படியே சுருட்டிக் கொணர்ந்து அழகம்மை கோவிலில் வைத்து விட்டார் அவர். . . - . "எவ்வளவு வினயம் ஏன் அப்படிச் செய்தார் அவர் வடிவம் ராஜவடிவமாயிற்றே!' . -

'அதுதான் இல்லை. அவருக்கு வலது கண்ணில் கோய் வந்து அந்தக் கண்ணே அவர் இழந்தார்; அவ் விடத்தில் ஆழமான குழிதான் இருந்தது. இந்தக் குறையை நித்தியமாக்கக் கூடாது, தம் குறையை வருங் காலச் சந்ததியார் உணரக்கூடாதென்று எண்ணியே

அவர் அவ்வாறு செய்தார்; இதுதான் மர்மம்.

- கூழைப்பட்டி ஜமீன்தார் ரீமர்ன் காமைய நாயக்கர் அயர்த்து போனர். அவர் அகக் கண்ணின் முன்னே. பழைய படத்தின் மற்ருெரு பாதி பயங்காமாகத் தோற்ற மளித்தது.